9th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் 2023 - பிரியன்ஷூ சாம்பியன்
- ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் உடன் மோதினார்.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரியன்ஷூ, 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்குப் பதிலடியாக, மேக்னஸ் 2-வது செட்டை 21-19 என வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பிரியன்ஷூ ரஜாவத் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
- இதையடுத்து 21-15, 19-21, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் மேக்னசை வீழ்த்தி பிரியன்ஷூ சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் முதல்முறையாக பிரியன்ஷூ மகுடம் சூடியுள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணியை (ஐபிசிஏ) தொடங்கி வைத்து, புலிகளின் 50 ஆண்டு நிறைவையொட்டி நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
- முதுமலை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மீண்டும் மைசூரு சென்றார். அங்கு பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- நாட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க புலிகள் திட்டம் (Project Tiger) என்ற பெயரில் தொடக்கப்பட்ட திட்டம் 50-ம் ஆண்டை எட்டியுள்ள நிலையில் நாட்டில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
- அதன்படி 2006ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 411 புலிகள் இருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,706 ஆக அதிகரித்தது. 2014ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 226ஆக அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 967 ஆக உயர்ந்தது.
- ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வந்த புலிகளின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டில் 3 ஆயிரத்து 167 ஆக அதிகரித்தது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
- 2014ம் ஆண்டு முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 941 ஆகவும், 2018 முதல் 2022 வரையிலான 4 ஆண்டுகளில் 200 ஆகவும் உயர்ந்துள்ளது.
- நாட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க 1973-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 'புலிகள் திட்டத்தை' (Project Tiger) தொடங்கியது.
- அப்போது முதல் புலிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் பலனாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி "ஒருங்கிணைந்த முழுமையான சுகாதாரம் தொடர்பான C20 இன் பணிக்குழுவினை நடத்தியது. இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- சி20 என்பது ஜி20இன் எட்டு அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 19 நாடுகளின் கூட்டமைப்பாகும்.
- சி20 இந்தியா 2023 என்பது ஜி20 இன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் விருப்பங்களுக்கு குரல் கொடுக்க ஒரு தளத்தை வழங்குகிறது.
- ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக அமிர்த விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்துடன் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்(AIIA) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவன(AIIA )இயக்குனர் பேராசிரியர் தனுஜா நேசரி மற்றும் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் கொச்சி வளாகத்தில் மருத்துவ அறிவியல் பேராசிரியர் பிரேம் குமார் வாசுதேவன் நாயர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- ஏற்கெனவே அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இதே போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடனும் மேற்கொண்டுள்ளது.