TAMIL
- முன்னதாக, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5446 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2/2ஏ நிலைகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.
- இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 8ம் தேதி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 58081 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
- குரூப் 2/2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு) 2023, பிப்ரவரி மாதம் 25ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற உள்ளது.
- முன்பு இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தெரிவித்த விவரங்கள் மற்றும் தகுதியினை உறுதிபடுத்துவதற்காக சான்றிதழ் சரிபார்ப்பை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது.
- இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் மூலச் சான்றிதழ்களை இணையவழியில் இன்று முதல் டிசம்பர் 16ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்ணயித்துள்ளது.
- எனவே, முதன்மைத் தேர்வுக்கு நீங்கள் தகுதி பெற்றிந்தால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆவணங்களும் 200 Resolution-ல் 300 முதல் 500 அளவில் PDF ஆக இருக்க வேண்டும்.
- நேரடி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் போது, தற்போது பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.
- தமிழ்நாடு அரசு கேபிள்- டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையம் வாயிலாக பதிவேற்றம் செய்ய இயலும்.
- இ - சேவை மையங்கள் விவரங்களை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.
- சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் முதன்மை தேர்வுக்கு கட்டயாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- விண்ணப்பதாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
- Earlier, the preliminary examination for Group 2/2A positions for 5446 vacancies in various departments of Tamil Nadu Government was held on 21st May. More than 9 lakh 95 thousand persons participated in this examination across the state.
- TNPSC has published the list of those who passed the primary exam on 8th. 58081 candidates qualified for the mains exam. Mains Exam 2023 for Group 2/2A Vacancies will be held on 25th February in two shifts morning and afternoon.
- TNPSC conducts certificate verification to verify the details and eligibility provided by the candidates while applying for the exam earlier online. TNPSC has decided that the original certificates required for this certificate verification should be uploaded online from today by December 16.
- So, if you qualify the mains exam you are requested to upload the original certificates within the stipulated time. You have to upload all original certificates proving your eligibility. Each document should be a PDF of 300 by 500 by 200 resolutions.
- When called for live certificate verification, the currently uploaded certificates should be brought.
- Upload can be done through e-service center run by Tamil Nadu Government Cable-TV Company. Click this link to download e-service centers details.
- Candidates who do not upload the certificate will not be allowed to appear for the main examination. TNPSC informed that the applicant's application will be rejected.