Type Here to Get Search Results !

TNPSC 8th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

நிலச்சரிவு மண்டலமாக உத்தரகண்டின் ஜோஷிமத் அறிவிப்பு

  • உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமோலி மாவட்டம் ஜோஷிமத் நகரில் உள்ள வீடுகள் உட்பட பல கட்டங்களில் கடந்த சில வாரங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் அச்சம் சாலை உள்ளிட்ட இடங்களில் பூமி வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
  • இதனால் இந்த நகரம் மண்ணுக்குள் புதையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து இங்குள்ள நிலைமை குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு செய்தார்.
  • இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று அழைத்து, புஷ்கர் சிங் தாமியிடம் அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
  • மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் பிரதமர் அறிவுறுத்தினார். அபாய பகுதிஇந்நிலையில், ஜோஷிமத் பகுதியை, நிலச்சரிவுமண்டலமாக மாநில அரசு அறிவித்துள்ளது. 
  • கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வந்த, ௬௦ குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டன.

ஐ.நா.வின் முதல் இந்திய பெண் போலீஸ் படை

  • கடந்த 1956-ம் ஆண்டில் சூடான் விடுதலை அடைந்தது. அதன்பிறகு வடக்கு சூடான் பகுதி மக்களுக்கும் தெற்கு சூடான் பகுதி மக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டில் தெற்கு சூடான் தனிநாடாக உதயமானது.
  • சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அப்யேய் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. 
  • ஐ.நா. சபையின் சமரசத்தின் காரணமாக அப்யேய் பகுதி சிறப்புப் பகுதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஐ.நா. அமைதிப் படைபாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. அங்கு முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப் படையில் 315 இந்திய வீரர்கள் உள்ளனர். 
  • இந்த சூழலில் சூடானின் அப்யேய் சிறப்பு பகுதியின் காவல் பணிக்காக இந்திய பெண் போலீஸ் படை அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 125 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • இந்த படை லைபீரியாவில் காவல் பணியை மேற்கொண்டது. அதன்பிறகு பல்வேறு நாடுகளில் திறம்பட பணியாற்றியது. தற்போது சூடானின் அப்யேய் பகுதியில் இந்திய பெண் போலீஸ் படை முகாமிட்டு காவல் பணியை தொடங்கியுள்ளது.
மாஜி முதல்வரின் மகன் உட்பட 7 புதிய அமைச்சர்கள் இமாச்சலில் பதவியேற்பு
  • 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 
  • இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராகவும், முகேஷ் அக்னிஹோத்ரி துணைமுதல்வராகவும் பதவி ஏற்று கொண்டனர். 
  • இமாச்சல பிரதேசத்தில் முதல்வர், துணை முதல்வர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 12-ஐ தாண்டக் கூடாது என்பதால், அமைச்சர் பதவிக்கான 10 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
  • இந்த நிலையில், 28 நாட்களுக்கு பிறகு இமாச்சல பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சிம்லா ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடந்த பதவி ஏற்பு விழாவில், முதல்வர், துணைமுதல்வர் முன்னிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் 7 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  • இதில் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ள விக்ரமாதித்ய சிங், இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் மறைந்த வீரபத்ர சிங்கின் மகன். அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர். இத்தாலியை வீழ்த்தி கோப்பையை வென்றது அமெரிக்க அணி
  • முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ரூ. 125 கோடி பரிசுத் தொகை கொண்டதாக இந்த தொடர் நடத்ப்பட்டது. முதல் போட்டிகள் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகின. மொத்தம் 18 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பங்கேற்றன.
  • ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என குழு ஆட்டங்களாக போட்டிகள நடத்தப்பட்டன. ஏடிபி மற்றும் டபிள்யூ. டி.ஏ. ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்தியது. 
  • லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்ட தொடரின், இறுதிப் போட்டியில் அமெரிக்கா - இத்தாலி அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.
  • 5 பிரிவுகளை கொண்ட போட்டியில், முதல் 3 பிரிவுகளில் அமெரிக்கா வெற்றிக்கொடி நாட்டியது. இதையடுத்து, 4-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (Madison Keys) இத்தாலியின் லூசியா பிரான்ஜெட்டியை (Lucia Bronzetti) 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார்.
  • கடைசிப் பிரிவு போட்டி நடைபெறாததால், 4-0 என்ற விகிதத்தில் அமெரிக்கா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல்முறை தொடங்கப்பட்ட யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரிலேயே, மகுடம் சூடியதால் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel