Type Here to Get Search Results !

தமிழகம் அல்ல தமிழ்நாடு பெயர் காரணம் / HISTORY OF TAMILNADU NAME NOT TAMILAGAM

 

TAMIL

  • தமிழ்நாடு என்ற பெயருக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அது சிலப்பதிகாரத்திலிருந்து தொடங்குகிறது. 
  • தமிழ்நாடு என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தமிழறிஞர்கள். 'இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்' என்று சேரன் செங்குட்டுவனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகழ்ந்திருக்கிறார்.
  • மெட்ராஸ், மதராஸ், சென்னை என்ற பெயர்களால் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுவந்தது. இது மாற்றப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 
  • தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். 
  • இந்தக் கோரிக்கைக்காக, காங்கிரஸ்காரரான சங்கரலிங்கம் விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்தார். அவர், 72 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • தமிழ்நாடு என்று பெயரைச் சூட்ட பக்தவச்சலம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார், 'நான் இறந்துவிட்டால் என் உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, அவரது உடல் கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • சங்கரலிங்கனார் மரணத்துக்குப் பிறகு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 'தமிழ்நாடு' என்று மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 
  • பின்னர், அந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பூபேஷ் குப்தா, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • The name Tamilnadu has a long history. It starts from Silapathikaram. Tamil scholars say that the name Tamilnadu is documented in Silapathikaram. Elangovadi has praised Cheran Senguttuvan in Silapathikaram saying, 'It is you who made Tamil Nadu the Imhilkadal fence'.
  • Tamil Nadu was referred to by the names Madras, Madras and Chennai. A demand was made that it should be changed and given the name Tamil Nadu.
  • Various parties and organizations, including DMK, Communist Party, Tamil Nadu, continued to insist on naming Tamil Nadu. Congressman Shankaralingam went on a fast in Virudhunagar for this demand. He fasted for 72 days and died. It had a huge impact.
  • Congress leaders including Bhaktavachalam objected to naming Tamil Nadu. So Shankaralingan, who was on a fast, had written a letter to the authorities saying, 'If I die, my body should be handed over to the Communists.' Accordingly, his body was handed over to the Communists.
  • After Shankaralingan's death, the demand to rename Tamil Nadu intensified. After DMK came to power under the leadership of Anna in 1967, a resolution was brought to change the name of the state to 'Tamil Nadu'.
  • Later, the resolution was passed in Parliament. It is noteworthy that Bhupesh Gupta, the leader of the Communist Party of India from West Bengal, filed an individual bill in Parliament regarding the name 'Tamil Nadu'.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel