Type Here to Get Search Results !

TNPSC 7th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

வீர் கார்டியன் 2023
  • ஜப்பானில் 'வீர் கார்டியன் 2023' என்ற பெயரில் இந்திய விமானப் படையும் ஜப்பான் விமானப் படையும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
  • இந்த பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒமிடாமா மற்றும் சயாமாவில் உள்ள இருமா விமானப் படை தளம் ஆகிய வான் பகுதிகளில் ஜனவரி 16-ம் தேதி முதல் 26-ம் தேதி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
  • விமானப் படையில் 3 பெண் போர் பைலட்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவரான அவனி சதுர்வேதி, இரு நாட்டு விமானப் படை போர் பயிற்சியில் பங்கேற்க விரைவில் ஜப்பான் செல்ல இருக்கிறார். இவர் ரஷ்யாவின் சுகோய் ரக எஸ்யூ-30எம்கேஐ என்ற அதிநவீன போர் விமானத்தின் பைலட் டாக இருக்கிறார்.
  • ஏற்கெனவே, பிரான்ஸ் விமானப்படை உட்பட வெளி நாட்டு விமானப் படைகள் இந்தியாவுக்கு வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த பயிற்சிகளில் இந்திய விமானப் படையின் பெண் பைலட்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், வெளிநாட்டில் நடைபெறும் விமானப் படை போர் பயிற்சியில் இந்திய பெண் பைலட் பங்கேற்பது இதுவே முதல் முறை.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார்
  • பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  • இதை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு பணிக்காக பீகார் அரசு ரூ.500 கோடியை ஒதுக்கி உள்ளது. 
  • இதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் 21ம் தேதி வரை நடக்கும் முதல் கட்ட பணியில், அனைத்து குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். 
  • அதைத் தொடர்ந்து மார்ச்சில் நடக்கும் 2ம் கட்ட கணக்கெடுப்பு பணியில், அனைத்து மக்களின் சாதி, உட்பிரிவு, மதம் மற்றும் அவர்களின் பொருளாதார நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. 
  • இந்த கணக்கெடுப்பு பணிக்காக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் டிஜிட்டல் வடிவில் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு பணி வரும் மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள்
  • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். 
  • இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையை நிறைவடையச் செய்ய அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முன்முயற்சியான இ-நாம், இன்று புது தில்லியில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளிக்கும் பிரிவில் பிளாட்டினம் விருதை வென்றுள்ளது.  
  • நிகழ்ச்சியில்  தலைமை விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2022 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கினார். 
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே  துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், வேளாண் அமைச்சகத்தின்  இணைச் செயலாளர் டாக்டர். என்.விஜயலட்சுமி  இந்த விருதை பெற்றுக் கொண்டார்
  • 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 1260 ஏபிஎம்சி மண்டிகளை ஒருங்கிணைத்து, 203 விவசாயம் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த லாபகரமான விலையை அடைய இ-நாம் உதவுகிறது.  
  • மண்டி செயல்பாடுகள் மற்றும் விவசாயப் பொருட்களின் மின் வர்த்தகத்தின் டிஜிட்டல் மாற்றத்தை  அது ஊக்குவிக்கிறது. 31.12.2022 நிலவரப்படி, 1.74 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் 2.39 லட்சம் வர்த்தகர்கள் இ-நாம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். ரூ. 2.42 லட்சம் கோடி மதிப்புள்ள 69 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட மொத்த வர்த்தகம் இ-நாம் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் இந்தியா விருதுகள் மத்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால்  நிறுவப்பட்டது, இது டிஜிட்டல் ஆளுமைத் துறையில் பல்வேறு அரசு நிறுவனங்களால் புதுமையான டிஜிட்டல் தீர்வுகள்/ முன்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிக்கவும் கௌரவிக்கவும் தேசிய போர்டல் ஆஃப் இந்தியாவின் கீழ் உள்ளது. 
  • டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, டிஜிட்டல் இந்தியா பார்வையை நிறைவேற்றுவதில் அரசாங்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் , ஸ்டார்ட்அப்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா விருதுகள் 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் எண்ணெய் எடுக்க தலிபான்களுடன் ஒப்பந்தம் போட்ட சீனா

  • தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் எடுக்க சீனா ஒப்பந்தம் போட்டுள்ளது.
  • ஆப்கானிஸ்தான் சுரங்க மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷேக் ஷஹாபுதீன் டெலாவர் மத்திய ஆசிய பெட்ரோலியம் மற்றும் கேஸ் கோ (CAPEIC) அதிகாரி ஜின்ஜியாங் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த ஒப்பந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆப்கானிஸ்தான் - சீனா இடையிலான 25 வருடத்திற்கான எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
சேகுவேராவின் மகளுக்கு 'கௌரியம்மா விருது' வழங்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
  • கேரளாவில் உள்ள கே.ஆர்.கௌரியம்மா அறக்கட்டளை சார்பாக 'கே.ஆர்.கௌரியம்மா சர்வதேச விருது' வழங்க தீர்மானிக்கப்பட்டு அதற்காக விருதினை பரிந்த்துரைக்கும் குழு அமைக்கப்பட்டது. 
  • இக்குழுவில் கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி, நாடாளுமன்ற உறுப்பினர் பினய் விஸ்வாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • 'கே.ஆர்.கௌரியம்மா சர்வதேச விருது'-ன் முதல் விருதிற்கு குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளரும், உலகம் அறிந்த கியூப புரட்சியாளரான சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவ்விருது விழா கடந்த வியாழக்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. 
  • இந்நிகழ்வில் சேகுவேராவின் மகளான அலெய்டா குவேராவிற்கு முதல் 'கௌரியம்மா சர்வதேச விருதினை' கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கி கௌரவித்தார்.
  • விருதுடன் சேர்த்து பரிசுத் தொகையாக 3000 அமெரிக்க டாலர்களையும் கேரள முதலமைச்சர் வழங்கினார். மறைந்த கே.ஆர்.கௌரியம்மா கேரளாவில் பிரபலமாக அறியப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர் மற்றும் கேரள அரசின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel