TAMIL
- இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் சமூகம், பாதுகாப்பு மற்றும் தொழில்துறையை உள்ளடக்கிய அளவுருக்களின் அடிப்படையில் பெண்களுக்கு உகந்த சூழல்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
- இந்த நிலையில், சமூகம், மக்களின் பாதுகாப்பு, தொழில் நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில், 111 நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த 8 நகரங்கள் பெண்கள் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்களாக இடம்பிடித்துள்ளது.
- 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
- சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
- பெண்கள் பாதுகாப்பில், தேசிய தலைநகரான டெல்லி, சென்னையை விட 30 புள்ளிகள் குறைவாக பெற்று 14வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
- அதேபோல் 10 லட்சத்துக்கும் கீழ் மக்கள் தொகை உள்ள இந்திய நகரங்களில், நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக திருச்சி மாவட்டம் தேர்வாகியிருக்கிறது.
- இதில் அடுத்தடுத்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரி, சிம்லா, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.
- பெண்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் பட்டியலில் உள்ள 2 பிரிவுகளிலும் முழுமையான வளர்ச்சியின் அடையாளமாக தமிழ்நாட்டில் உள்ள 8 நகரங்கள் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- அடிப்படை தேவைகள், பாதுகாப்பு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குற்ற பதிவுகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஆதாரங்களின் தரவுகளை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- A survey of 111 cities in India was conducted on women-friendly environments based on parameters including social, security and industry.
- In this situation, on the basis of society, people's safety and technology, in a study conducted in 111 cities, 8 cities of Tamil Nadu have been ranked as the best cities for women to live in.
- A survey of major cities in India with a population of over 10 lakh has ranked Chennai as the best city to live in for women.
- Chennai is followed by Pune, Bengaluru, Hyderabad, Mumbai, Ahmedabad, Visakhapatnam, Kolkata, Coimbatore, Tirupur and Madurai in the top 10.
- In terms of women's safety, the national capital, Delhi, is ranked 14th, 30 points lower than Chennai.
- Similarly, among Indian cities with a population of less than 10 lakh, Trichy district has been selected as the best city for women to live in in a survey conducted.
- In this, the districts of Vellore, Erode, Salem, Tirupur, Puducherry, Shimla, Mangalore, Thiruvananthapuram and Belagavi from Tamil Nadu have taken the next place.
- It is noteworthy that 8 cities in Tamil Nadu have been featured in the list of the best cities for women in both categories as a sign of complete development.
- It is noteworthy that this list has been prepared after analyzing data from more than 200 sources including basic needs, security, national census, crime records.