தமிழ்நாடு இரண்டு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
- தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை துணைவேந்தராக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 60, நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், திருச்சி பாரதிதாசன் பல்கலையில், இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தராக கலா, 65, நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கவுரவ பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- இருவருக்கும் பணி நியமன ஆணையை, கவர்னர் மாளிகையில் கவர்னர் ரவி வழங்கினார். இருவரும் பதவியேற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் துணைவேந்தர் பதவியில் இருப்பர்.
- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரிபுரா, மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுபயணம் செய்து வருகிறார்.
- மணிப்பூர், இம்பால் கிழக்கு மாவட்டம், மார்ஜிங் போலோ வளாகத்தில் 120 அடி உயர போலோ வீரரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- குதிரை மீது ஒரு வீரர் அமர்ந்து போலோ விளையாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ள சிலையை அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பிரேன் சிங் உட்பட பலர் கலந்து
- கொண்டனர். போலோ விளையாட்டின் பிறப்பிடம் மணிப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சுராசந்த்பூரின் முதலாவது மருத்துவ கல்லுாரியை அவர் திறந்து வைத்தார்.
- ஹரியானாவில், ஆண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது. இதில் 13 எடைப்பிரிவுகளில், மொத்தம் 386 வீரர்கள் பங்கேற்றனர். இதன் 63.5 கிலோ எடைப்பிரிவு பைனலில் அசாமின் ஷிவா தபா, ரயில்வே அணியின் அங்கித் நார்வல் மோதினர். அபாரமாக ஆடிய ஆறு முறை ஆசிய பதக்கம் வென்ற ஷிவா தபா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- பின், 57 கிலோ எடைப்பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் முகமது ஹுசாமுதீன் 4-1 என, 2016ல் உலக யூத் சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே அணியின் சச்சினை தோற்கடித்து தங்கத்தை கைப்பற்றினார்.
- பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்ற சாகர், +92 கிலோ எடைப்பிரிவு பைனலில் இருந்து காயத்தால் விலகியதால் சர்வீசஸ் அணியின் நரேந்தர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கம் வென்றார்.
- மற்ற எடைப்பிரிவு பைனலில் அசத்திய பிஷ்வாமித்ரா (51 கிலோ), சச்சின் (54 கிலோ), ஆகாஷ் (67 கிலோ), சுமித் (75 கிலோ) தங்கப்பதக்கம் வென்றனர்.
- இத்தொடரில் 6 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என, 10 பதக்கங்களை அள்ளிய 'நடப்பு சாம்பியன்' சர்வீசஸ் அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
- அடுத்த இரு இடங்களை முறையே ரயில்வே (2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்), பஞ்சாப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம்) அணிகள் பிடித்தன