Type Here to Get Search Results !

TNPSC 25th NOVEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

குற்றவாளிகளைக் கண்காணிக்க ட்ராக் கேடி என்ற புதிய செயலி அறிமுகம்

  • தமிழக காவல் துறை குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ட்ராக் கேடி என்ற கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்தச் செயலி மூலம் குற்றவாளிகளையும் ரெளடிகளையும் எளிதாக கண்காணிக்க முடியும். இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  • தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, செயலியை அறிமுகப்படுத்தி, சேவையைத் தொடக்கிவைத்தாா். 
  • முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பி.தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தாா். சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நேபாளம் தேர்தல் - மீண்டும் ஷேர் பகதூர் துபா ஆட்சி
  • நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 165 எம்.பி.க்களை தவிர விகிதாச்சார முறைப்படி 110 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடந்தது. 
  • அதே நேரம் 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 உறுப்பினர்களை தவிர 220 பேர் விகிதாசார முறைப்படியும் தேர்தல் நடந்தது. 
  • நாடு முழுதும் உள்ள 1.79 கோடி வாக்காளர்களுக்கு 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன; 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.
  • ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முழுமையான முடிவை அறிவிக்க தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது. 
  • இந்நிலையில் இன்று வரையிலான நிலவரப்படி 110 இடங்களில் ஆளும் நேபாள காங்கிரஸ் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இக்கட்சியைச் சேர்ந்த ஷேர் பகதுார் துபா மீண்டும் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
2023-24ம் ஆண்டுக்காக இடைக்கால பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம்
  • நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் பணிகள் தொடங்குவது முன்பு அனைத்துத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். 
  • அதுபோல், 2023-24ம் ஆண்டுக்காக இடைக்கால பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம், டெல்லியில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. 
  • இதில், மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை வல்லுநர்கள், நிதித்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
  • இதில், பணவீக்க அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார மந்தநிலை உருவாகக்கூடிய சூழல், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் மீளும் பொருளாதாரம், மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. 
  • ஜிஎஸ்டி விதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள், தொழில்துறையினருக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கூறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்ய உள்ளார்.
மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.17,000 கோடி விடுவிப்பு
  • மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டுமென மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசி இன்று ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்திற்காக ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.17000 கோடியை விடுவித்துள்ளது.
  • கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரியிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு ரூ.1188 கோடியும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.2081 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.1915 கோடியும், டெல்லிக்கு ரூ.1200 கோடியும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.1202 கோடியும் விடுவித்துள்ளது.
  • 20220-2023 ஆம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு என மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.1,15,662 கோடி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்
  • மெட்டா (META) இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் சந்தியா தேவநாதன் மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. 
  • சந்தியா தேவநாதன் ஆந்திராவில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் 1994 ஆண்டில் பி.டெக் (B-tech) கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றுள்ளார். 
  • அதன் பிறகு தன்னுடைய எம்பிஏ (MBA) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் 1998 ஆம் ஆண்டு முடித்தார். 2014 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தலைமை பண்பை பற்றிய படிப்பை முடித்துள்ளார்.
  • தென்கிழக்கு ஆசியாவின் குழு இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்பு எட்டு மாதங்கள் கழித்து மெட்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். சிங்கப்பூர் மெட்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும், வியட்நாமின் தொழில் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் உரையாற்றினார்
  • லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின  ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில்  இன்று (25.11.2022)  நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  இந்த நிகழ்வில்,‘லச்சித் போர்புகான் - முகலாயர்களை தடுத்து நிறுத்திய அசாமின் நாயகன்’  என்ற நூலினையும் அவர் வெளியிட்டார்.
  • அசாமின் அகோம் மன்னராட்சி, ராணுவத்தின் புகழ்மிக்க தளபதியாக விளங்கிய லச்சித் போர்புகான் (24. நவம்பர், 1622- 25 ஏப்ரல் 1672) முகலாயர்களை தோற்கடித்ததோடு ஔரங்கசீபின் எல்லை விரிவாக்க விருப்பங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார். 
  • 1671-ல் சராய்காட் போரின் போது, அசாம் ராணுவ வீரர்களை உத்வேகப்படுத்திய லச்சித் போர்புகான், முகலாயர்களை தோற்கடித்தார்.
  • இவரின் 400-வது பிறந்தநாள் ஆண்டுவிழாவை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குவஹாத்தியில்,  தொடங்கிவைத்தார்.
2023-25 காலகட்டத்திற்கான சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைத் தலைமை, கேந்திர மேலாண்மை வாரியத் தலைமைப் பொறுப்பை இந்தியா வென்றுள்ளது
  • 2023-25 காலகட்டத்திற்கான சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியையும், கேந்திர மேலாண்மை வாரியத் தலைமையையும் இந்தியா வென்றுள்ளது.
  • அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் பொதுக்கூட்டத்தில் ஆணையத்தின் இந்திய தேசியக் குழு மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின்
  • பல்வேறு தொழில்நுட்பக் குழுக்களின் உறுப்பினரான இந்திய பிரதிநிதி சுமார் 90% உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
  • சர்வதேச தர நிர்ணய நிறுவனத்தின் கொள்கை மற்றும் நிர்வாக அமைப்புகளிலும், சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்திலும் இந்தியாவின் பிரதிநிதித்துவம், முக்கிய கேந்திர மற்றும் கொள்கை சம்பந்தமான விஷயங்களில் இந்தியாவின் கருத்துக்களை முன்னிலைப்படுத்த ஏதுவாக இருப்பது மட்டுமல்லாமல், தேசிய தர முன்னுரிமைகளை சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கும் வாய்ப்பையும் வழங்கும்.
  • இந்திய பிரதிநிதியான திரு. விமல் மகேந்துரு, சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகிப்பார்.
  • மின்சாரம், மின்னணு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பாக சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் செயல்படுகிறது. தர நிர்ணய மேலாண்மை வாரியம் என்பது தொழில்நுட்ப கொள்கை சம்பந்தமான விஷயங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஆணையத்தின் முக்கிய நிர்வாக அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை எரிவாயுக் கட்டணம், அங்கீகாரம், ஒழுங்குமுறை திறன் ஆகிய விதிமுறைகளில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது
  • இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பின் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், நாட்டில் இயற்கை எரிவாயு சந்தையின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்  அதன் மூன்று விதிமுறைகளான இயற்கை எரிவாயு குழாய் கட்டணம், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை திறன் விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
  • இந்த திருத்தங்கள், 1 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும், ஒருங்கிணைந்த கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஏதுவாக அமையும்.  ஒருங்கிணைந்த கட்டணத்தை அமல்படுத்துவது குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காண, தொழில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒரே நாடு, ஒரே தொகுப்பு, ஒரே கட்டணம் என்ற தொலைநோக்கை அடைய, மலிவு விலையில் தொலைதூர பகுதிகளில் இயற்கை எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த மாற்றங்களின் நோக்கமாகும்.
  • ஒருங்கிணைந்த கட்டணத்தை செயல்படுத்துவதை எளிமையாக்க, நிறுவன அளவிலான ஒருங்கிணைந்த இயற்கை எரிவாயு குழாய் கட்டணத்தை,  தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கட்டணத்திற்கு இணையாக இருக்கும் வகையில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
  • மேலும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள நுகர்வோரின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டண மண்டலங்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கணக்கில் காட்டப்படாத எரிவாயுவை அனுமதிப்பது, தடை காலம், திறன் அதிகரிப்பு போன்ற பிற திருத்தங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel