மத்திய அரசு மற்றும் மாநில அரசு எப்படி இயங்குகிறது என்ற அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே இந்த பகுதி அமைந்துள்ளது.
11, 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (political science) புத்தகங்கள், லக்ஷ்மிகாந்த் எழுதிய இந்திய அரசியலமைப்பு indian polity போதுமானது.
அதோடு தினசரி செய்திகளில் வரும் அரசு இயக்கம் சார்பான செய்திகளை மட்டும் படிக்க வேண்டும். அரசியல், கட்சி செய்திகள் தேவை இல்லை.
சட்டம் எப்படி இயற்றப்படுகிறது, யாரால் இயற்றப்படுகிறது, எப்படி இயற்றுகிறார்கள் என்பது தான் முக்கியம். எந்த கட்சி யாரை விமர்சித்தார்கள் என்பது அவசியமில்லை . அரசால் நியமிக்கப்படும் கமிஷன்கள் பற்றி படிக்க வேண்டும்.