Type Here to Get Search Results !

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் / TAMILNADU BUDGET 2022 - 2023

 

TAMIL

  • சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக சட்டப்பேரவையில் சுமார் 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர். சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் வரும் 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அவை அலுவல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 14 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணக்கிப்பட்டுள்ளது. இது 2023-24ம் ஆண்டிலும் 14 சதவீதமகாவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23ம் ஆண்டில் தமிழக அரசுக்கு வரவினம் என்பது ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 407 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22 திருத்த பட்ஜெட்டில் ரூ.2லட்சத்து3ஆயிரத்து87ஆக இருந்தது.
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து799 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும்முறை வரும் ஜூன் மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.20ஆயிரம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும்.
  • 2022-23ம் ஆண்டில் தமிழகத்தின் வணிக வரிவருவாய் ரூ.ஒரு லட்சத்து 6ஆயிரத்து 765 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.15,537.24 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது
  • 2022-23ம் நிதியாண்டில் மத்திய வரிகளில் மாநில அரசுக்கான பங்கு என்பது, ரூ.33,311.40 கோடியாக இருக்கும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23ம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மற்றும் மானியங்கள் வகையில் தமிழக அரசுக்கு ரூ.39,758.97கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு ஊதியச் செலவினம் வரும் 2022-23ம் நிதியாண்டில் ரூ.71,566.81 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருத்த பட்ஜெட்டைவிட, 13 சதவீதம் அதிகரித்துள்ளது
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ஊதியம் அல்லாத செலவுகள், பராமரிப்பு ஆகியவற்றுக்காக ரூ.14,797.86கோடி செலவிட வேண்டிய திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்காலப் பலன்களை வழங்குவதற்காக 2022-23ம் நிதியாண்டில், ரூ.36,035.83 கோடி செலவிட வேண்டியதிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2022-23ம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.52,781.17 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.55,272 கோடியாக இருந்தது.
  • 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை அளவு 3.63 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 15-வது நிதிக்குழுவின் பரிந்துரை அளவுக்குள்தான் இருக்கிறது.
  • 2022-23ம் ஆண்டில் தமிழக அரசு ரூ.90,116.23 கோடி நிகர கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.6.53 லட்சம்கோடியாக அதிகரிக்கும். 2022-23ம் ஆண்டின் மாநில மொத்த உற்பத்தியில் கடன் அளவு 26.29 சதவீதமாகும்.
  • மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.2,31,407.28 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.2,84,188.45 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
துறை ரீதியான நிதி ஒதுக்கீடு 
  • அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அதற்கு அடுத்தபடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 18 ஆயிரத்து 218 கோடி ரூபாய் நிதியும்,
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 17 ஆயிரத்து 901 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • காவல்துறைக்கு 10 ஆயிரத்து 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நீர்வளத்துறைக்கு 7 ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சமூக நலத்துறைக்கு 5 ஆயிரத்து 922 கோடி ரூபாயும்,
  • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கூட்டுறவுத்துறைக்கு 4 ஆயிரத்து 131 கோடி ரூபாய் நிதியும்,
  • கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஆயிரத்து 314 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு பட்ஜெட்டில் 849 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 838 கோடி ரூபாய் நிதியும்,
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அதேபோல், தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி, இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 
  • தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • பெரியாரின் சிந்தனைகள், 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு.
  • கொற்கையில் ரூ.5 கோடி செலவில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7338 கோடி ஒதுக்கீடு.
  • பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுக்கீடு.
  • வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு.
  • பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு.
  • குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
  • தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது, அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.
  • காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.1,000 கோடி செலவில் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு ரூ.849 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.
  • மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு.
  • ஏழை மக்களுக்கான வீடுகளை கட்ட ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி ஒதுக்கீடு.
  • துறைமுக சாலை திட்டம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • மின்கட்டண மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.
  • சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.
  • சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடிநிதி ஒதுக்கீடு.
  • இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.
  • தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க, புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.
  • தீயணைப்புத்துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிப்பு.
  • உயர்கல்வித்துறைக்கு 5,668.89 கோடி ஒதுக்கீடு.
  • 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்காக ரூ.204 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தலா ரூ.10 கோடி என மொத்தம் ரூ.60 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும். மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா ரூ.2 கோடி என மொத்தம் ரூ.56 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
தமிழக பட்ஜெட் ஒரு ரூபாயில் 
  • தமிழக அரசின் வரவைப் பொறுத்த வரை வரி வருவாயாக 40 காசுகளும், வரியில்லா வருவாயாக 04 காசுகளும் கிடைக்கின்றன. மத்திய வரியில் பங்காக 9 காசுகளும், மத்திய திட்ட நிதியுதவியாக 11 காசுகளும், கடன் வசூல் மூலம் 2 காசுகளும், பொதுக் கடன்கள் மூலம் 34 என ஒரு ரூபாய் வரவில் பங்கு வகிக்கின்றன.
  • செலவைப் பார்க்கும் போது, தமிழகத்தின் கடன் தவணையைக் கட்ட 7 காசுகளும், அரசு ஊழியர்களின் ஊதியமாக 20 காசுகளும் செலவிடப்படுகின்றன. 
  • ஓய்வூதியம், ஓய்வு பலன்களுக்கு 10 காசுகளும், இயக்கம், பராமரிப்பு பணிகளுக்கு 4 காசுகளும், மானியங்களுக்கு 32 காசுகளும் வட்டி செலவாக 13 காசுகளும் செலவாகின்றன. இவைத் தவிர முதலீட்டுச் செலவாக 12 காசுகள் இருக்கின்றன.
முக்கிய திட்டங்கள்

1. நான் முதல்வன்
  • சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
  • இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகள் அடையாளம் காணப்பட்டு, அவை ஊக்குவிக்கப்படும். 
  • மேலும் தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன்பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் வேலை பெறும் திறன் (employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்
  • ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட, 'ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்' (Olympic Gold Quest) போலவே, தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்திட25 கோடி ரூபாய் வழங்கப்படும்
3. சமூக ஊடக சிறப்பு மையம்
  • வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட, சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆவடியிலும், தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 
  • மேலும், இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். 
  • சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறான பிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட, 'சமூக ஊடக சிறப்பு மையம்' அமைக்கப்படும். இம்மதிப்பீடுகளில் காவல் துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
ENGLISH
  • Finance Minister Palanivel Thiagarajan today presented the full budget of the Government of Tamil Nadu for the year 2022-23 at the Assembly Hall at the Chennai General Secretariat.
  • The interim budget was tabled in August last year and the full budget of the state of Tamil Nadu was tabled today. While funds have been allocated to various sectors in this budget, various special schemes have also been announced.
  • After the budget was tabled in the Tamil Nadu Legislative Assembly for about 1 hour and 54 minutes, the Speaker adjourned it. It has been decided at the working meeting chaired by Speaker Appavu that the agriculture budget will be tabled in the Assembly tomorrow and the Assembly will meet till the 24th.
  • The GDP of Tamil Nadu is projected to increase by 14% in the financial year 2022-23. It is estimated to be 14 percent in 2023-24.
  • Revenue to the State of Tamil Nadu in 2022-23 is projected to be Rs. 2 lakh 31 thousand 407 crore. It was Rs 2 lakh 3 thousand 87 in the last 2021-22 revised budget.
  • Government of Tamil Nadu's own tax revenue for the financial year 2022-23 is Rs. One lakh 42 thousand 799 crore is estimated.
  • The GST compensation scheme will end in June. This will cause a deficit of Rs 20,000 crore for the state of Tamil Nadu.
  • The business tax revenue of Tamil Nadu in 2022-23 is projected to be Rs. 1 lakh 6 thousand 765 crore.
  • Non-tax revenue of Tamil Nadu is estimated to be Rs.15,537.24 crore in the financial year 2022-23.
  • The share of the state government in central taxes for the financial year 2022-23 is estimated at Rs.33,311.40 crore.
  • It is estimated that the Government of Tamil Nadu will receive Rs. 39,758.97 crore in the form of assistance and grants from the Central Government in 2022-23.
  • Tamil Nadu government wage expenditure is estimated at Rs 71,566.81 crore in the coming 2022-23 financial year. This is an increase of 13 percent over last year's revised budget
  • It is estimated that the State of Tamil Nadu will have to spend Rs.14,797.86 crore on non-payable expenses and maintenance in the financial year 2022-23.
  • It has been reported that Rs 36,035.83 crore will have to be spent in the financial year 2022-23 to provide pensions and retirement benefits.
  • The revenue deficit of the State of Tamil Nadu in 2022-23 is estimated at Rs.52,781.17 crore. It was Rs 55,272 crore in the last financial year.
  • Tamil Nadu's fiscal deficit is projected to be 3.63 percent in FY2022-23. This is within the recommendation of the 15th Finance Commission.
  • The Government of Tamil Nadu plans to borrow Rs 90,116.23 crore in 2022-23. This will increase the total debt of Tamil Nadu to Rs 6.53 lakh crore. The debt to GDP ratio of 2022-23 is 26.29 per cent.
  • Total revenue receipts are estimated at Rs. 2,31,407.28.
  • Total revenue and expenditure is estimated at Rs. 2,84,188.45.
Departmental financial allocation
  • A maximum of Rs 36,895 crore has been allocated for school education.
  • Next, 20,400 crore rupees has been allocated for the municipal administration and drinking water supply department.
  • 18 thousand 218 crore for the Highways and Minor Ports sector.
  • 17 thousand 901 crore has been allocated for the medical and public welfare sector.
  • 10 thousand 285 crore rupees has been allocated for the police.
  • 7 thousand 338 crore has been allocated for the water resources sector.
  • 5 thousand 922 crore for the social welfare sector.
  • 4 thousand 281 crore has been allocated in the budget for the Adithravidar welfare department.
  • 4 thousand 131 crore for the co-operative sector.
  • An amount of Rs. 314 crore has been allocated for the Animal Husbandry Department.
  • 849 crore 21 lakh rupees has been allocated in the budget for environment, climate change and forestry.
  • 838 crore for the Welfare of the Handicapped
  • 293 crore has been allocated for the Youth Welfare and Sports Development Department.
  • Similarly, 82 crore 86 lakh rupees has been allocated for the Tamil Development Department in this budget.
  • Allocation of funds for major projects
  • 82.86 crore in the budget for the Tamil Development Department.
  • An allocation of Rs. 2 crore for the study of Tamil language.
  • Periyar's Thoughts, Rs 5 crore allocated for publication as a book in 21 Indian languages.
  • In Tamil Nadu, excavations will be carried out at 7 places and heads will be examined at 2 places. An allocation of Rs. 7 crore for archeological excavations.
  • Announcement that a deep sea survey will be carried out at a cost of Rs. 5 crore in Korkai.
  • An allocation of Rs 4,816 crore for social security pension schemes.
  • An allocation of Rs.7338 crore to the Water Resources Department of the Government of Tamil Nadu.
  • An allocation of Rs. 3,384 crore for uninterrupted supply of water for irrigation and rehabilitation of Cauvery irrigation systems.
  • An allocation of Rs.500 crore for flood prevention works.
  • For ground water augmentation structures Rs. 2787 crore and Rs. 7,500 crore for the first phase of implementation of the Public Distribution Scheme.
  • An allocation of Rs. 20 crore has been made to the Vallalar Biodiversity Conservation Center for the conservation of biodiversity.
  • An allocation of Rs.1000 crore for jewelery loan waiver.
  • An allocation of Rs. 4,130 crore to provide crop loans to SHGs and farmers.
  • Weekly approval of 4,694 km of canals in 10 districts of Delta for cultivation of curry, allocation of Rs. 200 crore for interest free crop loan scheme.
  • An allocation of Rs. 50 crore has been made for the renovation of old government buildings throughout Tamil Nadu.
  • Rs 36,895.89 crore has been earmarked for school education.
  • An allocation of Rs. 7000 crore to modernize government schools.
  • The Home Search Education Project is being implemented as a pilot project in the country with an allocation of Rs. 200 crore.
  • New libraries will be set up at a cost of Rs 125 crore.
  • Rs 10,285 crore has been allocated for the police.
  • The Tamil Nadu budget has allocated Rs 13,176 crore for the co-operative sector.
  • Colleges will be upgraded at a cost of Rs 1,000 crore.
  • Rs 25 crore for Tamil Nadu Olympic gold medal search
  • Budget allocation of Rs 849 crore for Environment, Forests and Climate Change.
  • An allocation of Rs 817 crore for the Dr. Muthulakshmi Reddy Medical Project.
  • An allocation of Rs. 450 crore for the care of severely affected persons with disabilities. An allocation of Rs.838.01 crore for the Welfare of the Handicapped.
  • An allocation of Rs.
  • An allocation of Rs 2,030 crore to build houses for the poor.
  • An allocation of Rs 3,700 crore for the Prime Minister's Housing Scheme.
  • An allocation of Rs 8,737 crore for urban development.
  • Port Road Project - An allocation of Rs. 5,770 crore for the Maduravayal High Level Road Project.
  • An allocation of Rs.1000 crore for the artist urban development project.
  • The government will provide Rs 9,379 crore as electricity subsidy.
  • An allocation of Rs.500 crore for the Singara Chennai 2.0 project
  • Rs 100 crore special fund allocation to promote exports in Tamil Nadu.
  • An allocation of Rs. 911 crore for small business enterprise sector development.
  • An allocation of Rs.340.87 crore in the budget for the Department of Hindu Religious Affairs.
  • Rs 100 crore for renovation of ancient temples
  • An allocation of Rs 12 crore has been made to repair and renovate churches, mosques and dargahs like the ancient temples.
  • An allocation of Rs. 18,218 crore has been made for the development of highways and minor ports sector.
  • An allocation of Rs. 20,400 crore for the Municipal Administration and Drinking Water Supply Department.
  • An allocation of Rs.293 crore for the Youth Welfare and Sports Development Department.
  • An allocation of Rs 496 crore for the fire department.
  • Rs 2,800 crore has been earmarked for the Mahatma Gandhi Rural Employment Program.
  • Announcement that Rs.1000 / - per month will be paid directly into the bank account for all students pursuing higher education (undergraduate, graduate, vocational) studying in government schools from 6-12.
  • 5,668.89 crore for higher education.
  • Rs 204 crore has been earmarked for students joining the 7.5% quota
  • A total of Rs. 60 crore will be provided as special fund of Rs. In addition, a total of Rs 56 crore will be provided as special fund of Rs 2 crore each to the 28 newly formed municipalities.
Tamil Nadu budget in one rupee
  • According to the receipts of the Government of Tamil Nadu, 40 rupees is received as tax revenue and 04 rupees as tax free income. 9 paise per share in central tax, 11 paise in central project finance, 2 paise in debt collection and 34 rupees in public loans.
  • When you look at the cost, 7 paise is spent to pay the debt installments of Tamil Nadu and 20 paise is spent on the salaries of government employees.
  • It costs 10 cents for pensions and retirement benefits, 4 cents for operation and maintenance, 32 cents for grants and 13 cents for interest. Apart from these there are 12 coins as investment cost.
Major projects

1. I am the first
  • Speaking in the Assembly, Finance Minister Palanivel Thiagarajan said, "The main objective of the Hon'ble Chief Minister's dream project 'I am the first' is to develop five lakh youth a year in education, knowledge, thinking, energy and talent.
  • Under this program, the individual talents of students in government and government-aided schools, colleges and universities will be identified and promoted.
  • In addition, special skills training will be provided to students as required by the skills of the industry. Through this, the employability of the students will increase. 50 crore has been allocated for the implementation of this project.
2. Olympic gold medal search
  • Rs 25 crore will be provided to implement the Tamil Nadu Olympic Gold Medal Search Program to create world-class athletes and Olympic medalists from Tamil Nadu, similar to the 'Olympic Gold Quest' which has been successful in producing Olympic medalists.
3. Social Media Specialty Center
  • In order for the police to function effectively in the growing suburbs, the Chennai Police Commission has been divided into three and two new commissions are functioning well in Avadi and Tambaram.
  • In addition, all the structures required for this sector will be established.
  • A 'Social Media Special Center' will be set up to curb the rising crime rate as a result of false propaganda on social media. 10,285.22 crore has been provided to the police department in these estimates

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel