TAMIL
- 2023-ம் ஆண்டுக்கான ஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலை சர்வதேச தரவரிசை கழகங்களில் ஒன்றான கியூ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் பத்தொன்பது பல்கலை கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
- அதில் மும்பை ஐ.ஐ.டி. நிறுவனம் மீண்டும் 40-வது இடத்தை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனம் 46-வது இடமும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. நிறுவனம் 52-வது இடமும் பிடித்து உள்ளன.
- இந்நிலையில், தமிழகத்தின் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் 53-வது இடத்தை பிடித்து உள்ளது. இதுமட்டுமல்லாமல் வேலூர் வி.ஐ.டி. நிறுவனம் 173-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகம் 185-வது இடமும் பிடித்து உள்ளன.
- தொடர்ந்து காரக்பூர் ஐ.ஐ.டி., கான்பூர் ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் 85-வது இடமும் பிடித்து டாப் 100 கல்வி நிலையங்களின் வரிசையில் இடம் பெற்று உள்ளன.
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் 8 பல்கலை கழகங்கள், இந்த ஆண்டில் முன்னேற்றம் அடைந்துள்ளன. மேலும், அனைத்து இந்திய பல்கலை கழகங்களும் கல்வி பொது மதிப்பீடு மற்றும் சர்வதேச ஆராய்ச்சி பணியில் மேம்பாடு அடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- QS, one of the international ranking institutes, has released the top 200 ranking list of Asian universities for the year 2023. The organization has published. Nineteen universities of India are included in this list.
- Among them I.I.T Mumbai is again ranked 40th. Following this, Delhi I.I.T. Institute is ranked 46th and IISC Bangalore is also ranked 52nd.
- In this case, Tamil Nadu's Chennai I.I.T is ranked 53rd. Apart from this Vellore V.I.T Institute is ranked 173rd and Anna University is ranked 185th.
- Followed by IIT Kharagpur and IIT Kanpur and Delhi University ranked 85th among the top 100 institutions.
- Eight universities in India have improved this year compared to last year. Also, all Indian universities have been reported to have improved in academic general assessment and international research work.