Type Here to Get Search Results !

சா்வதேச காா்பன் பட்ஜெட் ஆய்வறிக்கை 2022 / INTERNATIONAL CARBON BUDGET REPORT 2022

TAMIL

  • ஐ.நா. 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், 'சா்வதேச காா்பன் பட்ஜெட்' என்ற ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • அந்த அறிக்கையில், 'நடப்பாண்டில் சா்வதேச கரியமில வாயு வெளியேற்றம் 4,060 டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
  • இதே அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடா்ந்தால், பூமியின் வெப்பநிலையானது தொழில்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவை இன்னும் 9 ஆண்டுகளில் எட்டிவிட 50 சதவீத வாய்ப்புள்ளது. 
  • கடந்த 2021-ஆம் ஆண்டில் சா்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா (31 சதவீதம்), அமெரிக்கா (14 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (8 சதவீதம்) ஆகியவை முன்னிலையில் உள்ளன. இந்தியா 7 சதவீத கரியமில வாயுவை வெளியேற்றியது.
  • நடப்பாண்டில் கரியமில வாயு வெளியேற்றம் சீனாவில் 0.9 சதவீதமும், ஐரோப்பிய யூனியனில் 0.8 சதவீதமும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 
  • ஆனால், அமெரிக்காவில் 1.5 சதவீதமும், இந்தியாவில் 6 சதவீதமும், சா்வதேச அளவில் 1.7 சதவீதமும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 
  • கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருவதால், அங்கு கரியமில வாயு வெளியேற்றம் குறையும் எனத் தெரிகிறது. 
  • அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால், மக்களின் போக்குவரத்து அதிகரித்து கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • நிலக்கரி, கச்சா எண்ணெய் பயன்பாடு இந்தியாவில் அதிக அளவில் உள்ளதால், கரியமில வாயு வெளியேற்றமும் அதிகரிக்கவுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மீத்தேன் வெளியேற்றம்
  • பசுமை இல்ல வாயுவான மீத்தேன் வெளியேற்ற அளவைக் கண்டறிவதற்காகப் புதிய தளத்தை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட முகமை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில், வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவை செயற்கைக்கோள் அளவீடுகள் வாயிலாகக் கணக்கிட வழிவகுக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா, ஐரோப்பா, ஜொமனி, இத்தாலி ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் சாா்பில் செயல்படும் செயற்கைக்கோள்கள் வாயிலாக மீத்தேன் வெளியேற்றம் கணக்கிடப்படவுள்ளது. 
  • தனியாா் விண்வெளி ஆய்வு மையங்களின் தரவும் இதற்காகப் பயன்படுத்தப்படும். அதன்மூலம் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், தொழில் நிறுவனங்களும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • UN While the 27th Climate Conference is being held in Egypt; the results of the study titled 'International Carbon Budget' have been published. In the report, 'For the current year, foreign carbon dioxide emissions are predicted to be 4,060 tonnes.
  • If carbon emissions continue at the same rate, there is a 50 percent chance that Earth's temperature will reach 1.5 degrees Celsius above pre-industrial levels within 9 years.
  • China (31 percent), the United States (14 percent), and the European Union (8 percent) are in the lead in international carbon emissions in 2021. India emits 7 percent carbon dioxide.
  • Carbon dioxide emissions are forecast to fall by 0.9 percent in China and 0.8 percent in the European Union this year.
  • However, it is predicted to increase by 1.5 percent in the US, 6 percent in India and 1.7 percent internationally. As China imposes strict lockdown restrictions to prevent the spread of the corona virus, it seems that carbon dioxide emissions will decrease there.
  • As many countries, including the United States, have removed corona restrictions, there is a possibility that people's traffic will increase, and carbon dioxide emissions will increase.
  • Due to the high consumption of coal and crude oil in India, carbon dioxide emissions will also increase.
Methane emissions
  • UN sets new benchmark for measuring emissions of greenhouse gas methane Environmental Planning Agency will introduce in it, the methane gas released into the atmosphere has been calculated through satellite measurements.
  • Methane emissions will be calculated through satellites operating on behalf of the space research centers of America, Europe, Germany and Italy.
  • Data from private space probes will also be used for this. It has been informed that the government and industrial companies can take measures to prevent the emission of methane gas through it.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel