Type Here to Get Search Results !

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் / PEOPLES MOVEMENT FOR URBAN CLEANLINESS

 

TAMIL

  • 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமைப் படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
  • சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டுப் பிரச்சாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வணிக வரித் துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக அதன் கட்டுப்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர் சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகளை துவங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ENGLISH
  • At the request of the Department of Municipal Administration and Drinking Water Supply for the year 2022-2023, it was announced that the 'People's Movement for Urban Cleanliness' will be launched on the second and fourth Saturdays of each month to conduct intensive clean-up operations and awareness camps with the participation of large numbers of people in the cities in order to ensure a clean, green and sustainable environment.
  • These intensive clean-up and awareness camps will be implemented with the participation of voluntary organizations, residents' associations, school and college students from the National Community Welfare and National Green Force, volunteers and the general public.
  • Large-scale clean-up operations will be carried out on the second Saturday in 21 corporations, 138 municipalities and 490 municipalities, including Chennai.
  • Measures will be taken to hold meetings in parks with elected representatives and celebrities to emphasize the need for cleanliness to the people, to distribute leaflet campaigns on cleanliness and cleanliness with them, and to provide yellow bags to the public to raise awareness of the need for cleanliness.
  • Through the Commercial Tax Department, all shop owners, traders and businesses are urged to fully participate in the clean-up operation, through the Tamil Nadu Pollution Control Board, to explain the dangers of disposable plastics and the importance of reusing turmeric. Steps will be taken to start composting and disposal of garbage at farmers' markets.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel