Type Here to Get Search Results !

TNPSC 25th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

12வது ஏஜிஸ் கிரகாம் பெல் விருதுகள்
  • மத்திய அரசின் முன்னணி தொலைதொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான, டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம்( சி-டாட்), இன்று காணொலி மூலம் நடந்த 12வது ஏஜிஸ் கிரஹாம் பெல் விருதுகள் விழாவில், 3 விருதுகளை வென்றது. 
  • பல்வேறு பிரிவுகளில் புதுமையான தொலை தொடர்பு தீர்வுகளை உள்நாட்டில் உருவாக்கியதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 
‘தர்ம கார்டியன்-2022’ கூட்டு ராணுவ பயிற்சி
  • ‘தர்ம கார்டியன் - 2022’ என்ற பெயரில் இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர் , கர்நாடகா மாநிலம் பெலகாவி என்ற இடத்தில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை கூட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். 
  •  இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. வெளிநாட்டு ராணுவத்தினருடன் மேற்கொள்ளப்படும் கூட்டு பயிற்சியில். ‘தர்ம கார்டியன்’ கூட்டு பயிற்சி முக்கியமானது. 
  • இதில் இரு நாடுகளும் சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் அடங்கியுள்ளன. இந்த கூட்டு பயிற்சி காடுகள் மற்றும் நகர்ப்புற நிலப்பரப்புகளில் நடைபெறுகின்றன.
  • இந்திய ராணுவத்தின் 15வது பட்டாலியன் மராத்தா காலாட்படை மற்றும் ஜப்பான் பாதுகாப்பு படையின் 30வது படைப்பிரிவும் இந்தாண்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சியில் இருதரப்பின் போர் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்திய கடற்படை மற்றும் எச்ஏஎல் இடையே பரஸ்பர விருப்ப ஒப்பந்தம் கையெழுத்து
  • கொச்சியில் உள்ள விமானவியல் தொழில்நுட்பத்திற்கான கடற்படை நிறுவனம் மற்றும் பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் மேலாண்மை அகாடமி ஆகியவற்றுக்கு இடையே ஆசிரியர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கான பரஸ்பர விருப்ப ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை மற்றும் எச்ஏஎல் 2022 பிப்ரவரி 24 அன்று கையெழுத்திட்டன.
  • விமானவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் பராமரிப்பு, பழுது பார்த்தல், புனரமைப்பு, மேலாண்மை ஆகியவற்றில் குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகள், கௌரவ உரைகள், பயிலரங்குகள் மற்றும் மாநாடுகள் உள்ளிட்டவற்றை நடத்துவதன் மூலம் பயிற்சியாளர்களின் திறன்களை வளர்ப்பதற்கு இந்த கூட்டு வழிவகுக்கும்.
ராஜஸ்தானில் ₹250 கோடி மதிப்பீட்டில் மரபு கழிவுகளுக்கு தீர்வு காண இந்திய அரசு ஒப்புதல்
  • புவியியல் ரீதியாக மிகப்பெரிய மாநிலமான ராஜஸ்தான், 3.4 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, ஆரவல்லி மலைத்தொடர், பாரத்பூரின் கியோலேடியோ தேசிய பூங்கா, ரந்தம்பூர் தேசிய பூங்கா மற்றும் முகுந்த்ரா ஹில்ஸ் புலிகள் காப்பகம் போன்ற பலவற்றுடன் இயற்கையுடன் பழமையான உறவைப் பகிர்ந்து கொள்கிறது.
  • மாநிலம் முழுவதும் உள்ள 198 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நாள் ஒன்றுக்கு 4,800 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளில் 28% மட்டுமே அறிவியல் பூர்வமாக செயலாக்கப்படுகிறது. 
  • அம்ருத் திட்டத்துடன் இணைந்து தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0, அக்டோபர் 1, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. நிலையான சுகாதாரம் மற்றும் அறிவியல் கழிவு செயலாக்கத்தின் வாயிலாக ‘குப்பை இல்லாத நகரங்கள்’ எனும் இலக்கை அடைவது இதன் நோக்கமாகும்.
  • 24 நகரங்களில் உள்ள 45.5 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மரபு கழிவுகளுக்கு தீர்வு காண்பதற்காக மாநிலம் சமர்ப்பித்த ₹250.15 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மாநிலத்திற்கு ஊக்கமளித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி
  • ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது தோல்வியடைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்துள்ளது. 
  • அமெரிக்கா, அல்போனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
நாட்டில் முதல் முறை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒன்றிய செயலர் நியமனம்
  • நாட்டில் முதல் முறையாக ஒன்றிய சட்டத்துறை செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை செயலாளராக இருந்த அனூப் குமார் மெந்திராட்டா, டல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • சமீபத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம், அனூப் குமார் பெயரை பரிந்துரை செய்திருந்தது. அனுப் சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டபோது, அவர் டெல்லியில் நீதித்துறை அதிகாரியாக இருந்தார். 
  • அனூப் குமார் தவிர நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் சர்மா மற்றும் சுதிர் குமார் ஜெயின் ஆகியோருக்கும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடி விடுவித்தது மத்திய அரசு
  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய மானியத்தை நிறுத்தி வைத்திருந்தது. 
  • இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
  • இதையடுத்து, மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.267 கோடியை விடுவித்துள்ளது. இந்த நிதி நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த தொகையில் 50 சதவீதம் குடிதண்ணீருக்காக பயன்படுத்த வேண்டும் என்றும், 50 சதவீதம் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு பயன்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
புரோ கபடி 2022 சாம்பியன் தபாங் தில்லி
  • புரோ கபடி லீக் 8-ஆவது சீசன் போட்டியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை கடும் சவாலுக்கு இடையே 37-36 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தபாங் தில்லி அணி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel