காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்கா
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழிற் பூங்காக்களும், குறிப்பிட்ட தொழில்களுக்கான சிறப்புப் பூங்காக்களும் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன.
- இதனடிப்படையில், இந்த நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- இந்தப் பூங்காவில், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி வேண்டி, மத்திய அரசின் மருந்தியல் துறைக்கு தமிழக அரசு சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது.
- தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்று, தற்போது தேசிய அளவில் நான்கு மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்காக்களை அமைக்க, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
- இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமையும்.
- இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, அதிகபட்சமாக ரூ.100 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கும். ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 350 ஏக்கர் பரப்பில், சுமார் ரூ.450 கோடி திட்ட மதிப்பில், அடிப்படைக் கட்டமைப்புகள், ஆய்வுக் கூடங்கள், முன்னோடி மாதிரி மையம், திறன் மேம்பாட்டு மையம் முதலியவற்றை உள்ளடக்கி, ஒரே குடையின்கீழ் பல்வேறு வசதிகள் கொண்ட பூங்காவாக இது அமையும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக எஸ்.கே. ஹல்தர் நியமனம்
- கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2018 ஜூன் 1-ம்தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
- காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தர் நியமிக்கப்படுகிறார். 5 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இவர் தலைவராக செயல்படுவார்.
- இவர்வரும் நவம்பர் 30-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஆணையத்தின் தலைவராக நீடிப்பார்