Type Here to Get Search Results !

மரபுசாரா மின் உற்பத்தியில் மாநிலங்களின் பட்டியல் / LIST OF STATES IN NON CONVENTIONAL POWER GENERATION

 

TAMIL

  • மரபுசாரா மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் காற்றாலை மின் உற்பத்தியை விட சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் பல அமைக்கப்பட்டன. 
  • இதன்விளைவாக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மரபுசாரா மின்னுற்பத்தியில் கர்நாடக மாநிலம் 2018-ல் முதலிடத்துக்கு முன்னேறியது.
  • இருப்பினும் ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் கர்நாடகாவுக்கு இணையாக தமிழகம் திகழ்ந்தது. 2019-ம் ஆண்டு இரு மாநிலங்களிடையிலான மின்னுற்பத்தி வித்தியாச அளவு 900 மெகா வாட்டாக இருந்தது. இது கடந்த பிப்ரவரி மாதம் 450 மெகா வாட்டாக குறைந்துள்ளது.
  • ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி கர்நாடகாவின் மொத்த மரபுசாரா மின்னுற்பத்தி 15,573 மெகாவாட்டாக உள்ளது. தமிழகத்தின் மின்னுற்பத்தி 15,458 மெகாவாட்டாக உள்ளது என மத்திய மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (எம்என்ஆர்இ) வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்னுற்பத்தி திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இவை உற்பத்தியைத் தொடங்கும்போது மரபுசாரா மின்னுற்பத்தியில் தமிழகம் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும்.
  • தமிழகத்தில் சூரிய ஆற்றல் மூலமான மின்னுற்பத்தி 4,594 மெகாவாட்டாகும். இது முன்பு 2,575 மெகா வாட்டாக இருந்தது. அதேசமயம் காற்றாலை மின்னுற்பத்தி 8,969-லிருந்து 9,717 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
  • கர்நாடகாவில் மொத்த சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி 7,452 மெகா வாட்டாகும். இது முன்பு 6,096 மெகா வாட்டாக இருந்தது. இதேபோல காற்றாலை மின்னுற்பத்தி 4,695-லிருந்து 4,939 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க கர்நாடகஅரசு திட்டமிட்டுள்ளது.
  • சூரிய ஆற்றல் மின்னுற்பத்தியில் கர்நாடகா முதன்மை வகிக்கிறது. அதேசமயம் தமிழகம் காற்றாலை மின்னுற்பத்தியில் முதலிடத்தில் விளங்குகிறது. 
  • சூரிய மின்னுற்பத்தியில் தமிழகம் நான்காமிடத்தில் உள்ளது. கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் 2-வது மற்றும் 3-ம் இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த மரபுசாரா மின்னுற்பத்தி 100 கிகாவாட்டாக உள்ள நிலையில் தமிழகத்தின் பங்கு 7.38 கிகா வாட்டாக உள்ளது. நிலக்கரி அனல் மின் நிலையங்கள் தற்போது இங்கு உருவாகி வருகின்றன.
ENGLISH
  • Tamil Nadu was number one in non-conventional power generation. In this situation, more solar power plants were set up in Karnataka than wind power generation. As a result, the state of Karnataka has advanced to the number one position in 2018 in non-environmentally friendly non-conventional power generation.
  • However, Tamil Nadu is on par with Karnataka in overall power generation. In 2019, the difference in power generation between the two states was 900 MW. It dropped to 450 megawatts last February.
  • As on July 31, the total non-conventional power generation in Karnataka was 15,573 MW. According to the Central Ministry of Non-Conventional and Renewable Energy (MNRE), the power generation in Tamil Nadu is 15,458 MW.
  • New power generation projects in Tamil Nadu are nearing completion. When these start production, Tamil Nadu will once again be at the forefront of non-conventional power generation.
  • Solar power generation in Tamil Nadu is 4,594 MW. It was previously 2,575 MW. Meanwhile, wind power generation has increased from 8,969 to 9,717 MW.
  • The total solar power generation in Karnataka is 7,452 MW. It was previously 6,096 MW. Similarly, wind power generation increased from 4,695 to 4,939 MW. The Government of Karnataka plans to increase production through a non-conventional and renewable energy policy.
  • Karnataka is a major player in solar power generation. Meanwhile, Tamil Nadu is the largest producer of wind power. Tamil Nadu ranks fourth in solar power generation. It is noteworthy that Rajasthan and Gujarat are in 2nd and 3rd place next to Karnataka.
  • While India's total non-conventional power generation is 100 GW, Tamil Nadu's share is 7.38 GW. Coal thermal power plants are currently being developed here.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel