கீழடி ஒரே குழியில் நான்கு சிவப்பு பானைகள்
- கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் 100க்கும் மேற்பட்டோர் அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கீழடியில் இதுவரை மூடியுடன் கூடிய பானை, உறைகிணறுகள், வரி வடிவ பானை ஓடுகள், சுடுமண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன .
- சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அடுத்தடுத்து வெளி வருவதால் பலரும் கீழடி அகழாய்வு பணியை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர் .
- இந்நிலையில் கீழடி அகழாய்வில் ஒரு குழியில் சிவப்பு நிற சிறிய பானை கண்டெடுக்கப்பட்ட நிலையில் அடுத்து ஒரு பெரிய அடர் சிவப்பு நிற பானை 60 செ.மீ உயரத்தில் கிடைத்தது . அதன் அருகிலேயே தேமடைந்த நிலையில் மற்றொரு பானை கிடைத்தது .
- அதேபோல் அதன் அருகில் கிண்ணம் போன்ற கருப்பு சிவப்பு நிற பானையும் கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டது.
கடன் வழங்கல், சேமிப்பு டெபாசிட் பாங்க் ஆப் மகாராஷ்டிரா முதலிடம் பெற்று சாதனை
- புனேயை தலைமையிடமாக கொண்ட பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி, வெளியிட்ட நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மொத்த கடன் வழங்கல் ரூ.1,10,592 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14.46 சதவீதம் உயர்வு.
- இதன்மூலம், பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்கலில் முதல் இடத்தை இந்த வங்கி பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ரூ.67,933 கோடி (10.13% வளர்ச்சி) வழங்கி 2ம் இடத்தை பிடித்தது. இதுபோல், பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் டெபாசிட்கள் 14% அதிகரித்துள்ள.
- காசா எனப்படும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புத்தொகை விகிதம் பிற பொதுத்துறை வங்கிகளை விட அதிகமாக 22% உயர்ந்து, ரூ.92,491 கோடியாக உள்ளது.
- மொத்த வர்த்தகம் 14.17% அதிகரித்து ரூ.2.85 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் இரட்டிப்பாகி ரூ.208 கோடியாகியுள்ளது. வராக்கடன், முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 10.93 சதவீதமாக இருந்த நிலையில், 6.35 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.