Type Here to Get Search Results !

TNPSC 28th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சிரியா அதிபராக ஆசாத் 4-ஆவது முறையாக தோவு

 • சிரியா அதிபா் தோதல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 78.6 சதவீத வாக்குகள் பதிவாகின. தோதல் முடிவுகள் வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. 
 • இதில் ஆசாத் 95.1 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ாக நாடாளுமன்ற அவைத் தலைவா் அறிவித்தாா். 10 ஆண்டுகளாக உள்நாட்டு போா் நடைபெற்று வரும் சிரியாவில், குா்திஷ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தோதல் நடைபெறவில்லை.

ஜி.எஸ்.டி. 43வது கவுன்சில் கூட்டம்

 • ஜி.எஸ்.டி. 43வது கவுன்சில் கூட்டம் எட்டு மாதங்களுக்கு பின்னர் காணொலி வாயிலாக நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில், மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்முறையாக ஜி,எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 • கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருத்துவப் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 • கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளும் வரிவிலக்கு பட்டியலில் சேர்க்கப்படும் என்றார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சிகிச்சை கருவிகள் மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். 
 • இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்துக்கும் ஜிஎஸ்டி வரி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு மறுக்கப் போவதில்லை எனவும், அடுத்த கட்டமாக ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி கடனாக பெற்று மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.
 • சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்க, தாமதக் கட்டணத்தைக் குறைக்க பொது மன்னிப்பு திட்டம் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாவும், 2 கோடி ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள் வருடாந்திர வருவாய் தாக்கல் செய்வது, அவர்களின் விருப்பத்தின் பேரில் இருக்கலாம் என்ற திட்டம், நடப்பு நிதியாண்டிலும் தொடரும் எனவும், நிதியமைச்சர் தெரிவித்தார்.

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மே.வங்கம், ஜார்கண்டுக்கு ரூ.1,000 கோடி நிதி

 • வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்து ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. அந்த மாநிலத்தின் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே யாஸ் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் பேய் சூறாவளி காற்று வீசியது.
 • ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்திய யாஸ் புயல், மேற்கு வங்க மாநிலத்திலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்திலும் யாஸ் புயலால் பாதிப்பு உண்டானது. ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
 • மேற்கு வங்கத்தில் தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள், திகா, கிழக்கு மெதினிபூர் மற்றும் நந்திகிராம் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இந்த புயலால் மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 • இந்த நிலையில் இந்த ஆய்வு பணிகளை முடித்த பிரதமர் மோடி யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு உடனடி ரூ.1,000 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். 
 • யாஸ் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்ப்படட்டுள்ளது. 

விரைவாக எவரெஸ்டை எட்டி சாதனை படைத்த பெண்

 • உலகிலேயே மிக உயரமான இமயமலையில் இந்த எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 8,848.86 அடி உயரம் கொண்டது. 
 • இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை மிக குறுகிய நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சான் யிங் ஹங் என்ற பெண்மணி. இவர் ஹாங்காங்கை சேர்ந்த முன்னாள் ஆசிரியர். இவரின் வயது 44 ஆகும். 
 • இதற்கு முன்னர் சான் யிங் ஹங் 2017 இல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்கிறார். ஆனால், தற்போது எவரெஸ்ட் சிகரத்தை சான் யிங் ஹங் 25 மணி 50 நிமிடங்களில் ஏறி பெரும் சாதனை படைத்திருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel