Type Here to Get Search Results !

TNPSC 27th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சுங்கச் சாவடிகளில் புதிய விதிமுறைகள்

  • சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப் படவுள்ளன. அதன்படி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடு வரையப்படும். இக்கோட்டினை தாண்டியும் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடிகளை விட்டு வெளியேறலாம்.
  • சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 விநாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்கக் கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. 

தாய்மொழியில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்கலாம் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அனுமதி

  • வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்க அகில இந் திய தொழில்நுட்பக் கழகம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கி உள்ளது.
  • அதன் படி, தாய்மொழியில் கல்வி பயிலு வதை ஊக்குவிக்க ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை முதல்கட்டமாகத் தமிழ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 8 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டு வருவதாகவும், அதற்காக செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டு வா்த்தக பிரிவு இயக்குநராக இந்திய அமெரிக்கா் நியமனம்

  • அமெரிக்காவின் வெளிநாட்டு வா்த்தக சேவைகளுக்கான பிரிவின் இயக்குநராக அருண் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளாா். அமெரிக்க வா்த்தக அமைச்சகத்தின் சா்வதேச சந்தைகள் துறைகளுக்கான இணை அமைச்சராகவும் அவரை அதிபா் பைடன் நியமித்துள்ளாா்.
  • சா்வதேச வா்த்தகம் சாா்ந்த விவகாரங்களில் அருண் வெங்கட்ராமனுக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளது.
  • வா்த்தகம் தொடா்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சோந்த நிறுவனங்களுக்கும் அமெரிக்க அரசுக்கும் அவா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.

ஐரோப்பா லீக் கால்பந்து முதல்முறையாக வில்லாரியல் சாம்பியன்

  • ஐரோப்பியில பிரபலமான கால்பந்து தொடரான 'யுஇஎப்ஏ ஐரோப்பா லீக்' இறுதி ஆட்டம் போலாந்தின் குடான்ஸ்க் நகரில் நேற்று நடந்தது. ஆட்டத்தை காண கணிசமான ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். 
  • இதில் மான்செஸ்டர் யுனைட்டட்(இங்கிலாந்து), வில்லாரியல்(ஸ்பெயின்) அணிகள் மோதின.
  • 90நிமிட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. எனவே பெனால்டி கோல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 11-10 என்ற கோல் கணக்கில் வென்ற வில்லாரியல் முதல்முறையாக ஐரோப்பா லீக் சாம்பியன் கோப்பயை கைப்பற்றியது.

பாலஸ்தீனத்தில் மனிதஉரிமை மீறல் சர்வதேச விசாரணைக்கு ஐ.நா தீர்மானம்

  • இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரினால் காஸா உள்ளிட்ட இடங்களில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து வெளிப்படையான சர்வதேச விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு முடிவு செய்தது.
  • இந்த சர்வதேச விசாரணையை தொடங்குவது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கும் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 
  • 24 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இறுதியில் பெரும்பான்மை அடிப்படையில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் எற்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel