Type Here to Get Search Results !

TNPSC 26th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

20 கோடி கொரோனா தடுப்பூசிகளை 130 நாளில் செலுத்தி இந்தியா சாதனை

  • 130 நாளில் 20 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் 20 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ள நாடு எனவும், அமெரிக்காவுக்கு 20 கோடி தடுப்பூசி போட 124 நாட்கள் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் 42 சதவீத மக்கள் இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 15.71 கோடி பேர் முதல் தவணையும், 4.35 கோடி பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது

  • சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வைரமுத்து 7 முறையும், இலக்கியப் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதையும், இந்திய ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர்.
  • மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி.குறுப்பு அவர்களின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு விருதாளரைத் தேர்வு செய்து இந்த விருதினை வழங்கி வருகிறது. 
  • ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமைக்கு வைரமுத்து சொந்தக்காரராகியுள்லார்.

ரூ.213 கோடிக்கு ஏலம் போன வைரம்

  • ஹாங்காங்கில் 15.81 காரட் எடை கொண்ட அரிய வகை சகுரா வைரம் 29.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ.213 கோடி ஆகும். இளஞ்சிவப்பு வைரங்கள் எடை குறைவாகவே இருக்கும். பொதுவாக ஒரு காரட் எடையில் 5ல் ஒரு பங்கு இருக்கும். 
  • அதிக காரட் உள்ள இளஞ்சிவப்பு வைரங்கள் கோடிகளில் ஏலம் போகும். அந்த வகையில் 15.81 காரட் எடை கொண்ட இந்த இளஞ்சிவப்பு வைரம் ஹாங்காங்கில் கிறிஸ்டிஸ் நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது. 
  • இதற்கு முன் கடந்த ஆண்டு நவ. மாதம் ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் 14.8 காரட் ஊதா இளஞ்சிவப்பு வைரம் 196 கோடிக்கு ஏலம் போனது. அந்த சாதனையை சகுரா வைரம் முறியடித்துள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை பிடித்த பெர்னார்டு அர்னால்ட் 

  • பிரெஞ்ச் ஆடம்பர குழுமமான, எல்.வி.எம்.எச்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், அதிபருமான, பெர்னார்டு அர்னால்ட் சொத்து மதிப்பு, 'போர்ப்ஸ்' கணிப்பின்படி, 13.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து, உலகின், 'நம்பர் ஒன்' பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
  • அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு, 13.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும், அர்னால்ட் சொத்து மதிப்பு, 3.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel