Type Here to Get Search Results !

TNPSC 11th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.168 கோடி மானியம் முதல்வர் அறிவிப்பு

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க நிகழ் நிதியாண்டில் ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், 60 சதவீதத் தொகையான ரூ.168 கோடியானது உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும். இதனால் தகுதியான நிறுவனங்களுக்கு மானியம் கிடைக்கும் .
  • குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியன வங்கி, நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவி பெறும் போது முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தீயணைப்பு, தொழிலாளர், தொழில் பாதுகாப்பு, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களையும் நீட்டிப்பதற்கான அவகாசம் டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. முதலீட்டு மானியம் பெற விற்று முதலினை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது. அதற்கும் டிசம்பர் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது .
  • சிட்கோ நிறுவனத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை போன்றவற்றைச் செலுத்துவதற்கு மேலும் ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் .
  • முதலீடு சிறு நிறுவனங்கள், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி வாகனம் வைத்திருப்போர் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு மாதந்தோறும் கட்டவேண்டிய தவணைத்தொகை(EMI) செலுத்துவதற்கு அவகாசம் அளிக்கக்கோரி ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.
  • ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலை வரி கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்டுவதற்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும், அவற்றுக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பெரிய, சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில் வரியை செலுத்த மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக பதவியேற்கிறார் அப்பாவு

  • தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக பதவியேற்கிறார் திமுகவின் அப்பாவு. இவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
  • இதேபோல் தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக திமுகவின் கு.பிச்சாண்டி இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
  • இவர்கள் இருவருமே போட்டியின்றி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி கோப்பை கால்பந்து இன்டர் மிலான் சாம்பியன்

  • இத்தாலியின் 123 ஆண்டுகள் பழமையான கால்பந்து போட்டி 'சீரி-ஏ' இத்தாலி கோப்பை போட்டியாகும். நடப்புத் தொடரில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் தலா 38 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 
  • எல்லா அணிகளும் தலா 35 ஆட்டங்களில் ஆடி முடித்துள்ளன. இன்னும் தலா 3 ஆட்டங்கள் ஆட வேண்டிய நிலையில் இன்டர் மிலன் (இன்டர்நேஷனல் மிலான்) இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்கிறது. அந்த அணி 35 ஆட்டங்களில் விளையாடி 26 வெற்றி, 7 டிரா, 2 தோல்விகளுடன் 85புள்ளிகளை குவித்துள்ளது.
  • ஜூவென்டஸ் அணி இதுவரை 36முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதிலும் 2011-12ம் ஆண்டு முதல் 2019-20 வரை தொடர்ந்து 9 முறை சாம்பியன் வென்றது.
  • நடப்புத் தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜூவென்டஸ் வீரர் கிறிடியனோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 27 கோல்களை அடித்துள்ளார். 

இந்தியாவுக்கு 110 கோடி கொரோனா நிதி உதவி டிவிட்டர்

  • கொரோனா 2வது அலையிலிருந்து மீள இந்தியாவுக்கு பல வெளிநாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ₹110 கோடியை டிவிட்டர் நிறுவனம் வழங்கி உள்ளது. 
  • முன்னணி மைக்ரோபிளாகிங் நிறுவனமான டிவிட்டரின் சிஇஓ பேட்ரிக் டோர்சே இதனை நேற்று அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியை, வறுமையை ஒழிக்க சேவை செய்யும் கேர் மற்றும் சேவா இன்டர்நேஷனல், எய்டு இந்தியா ஆகிய 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கியுள்ளது. 
  • கேர் அமைப்பிற்கு ₹73 கோடியும், மற்ற இரு அமைப்புகளுக்கு தலா ₹18.5 கோடியும் நிதி உதவி வழங்கி உள்ளது. இந்த நிதியின் மூலம் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வழங்கப்படும். 

ஏப்ரல் மாத சிறந்த வீரர் பாபர் அசாம்

  • ஐ.சி.சி. சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விருது பட்டியலில் ஐ.சி.சி. விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர்கள், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவரை முன்னாள் வீரர், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகிறார். 
  • இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
  • இதுபோல் ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 155 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel