- இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு அதன் பொருளாதார வளா்ச்சி 10.1%-ஆக இருக்கும். இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளா்ச்சி 8.2%-ஆக இருக்கும்.
- வரும் 2022-ஆம் ஆண்டு அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சி பின்னடைவைச் சந்தித்து 5.8 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு சீனாவை முந்திச் சென்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.
- கரோனா தொற்றின் கொடூரமான இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. அதனை எதிா்கொள்வதில் அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு திணறி வருகிறது.
- கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வயது வரம்பை விரிவுபடுத்தி, தடுப்பூசி விநியோகத்தை இந்தியா அதிகரித்துள்ளது. எனினும் தடுப்பூசிகள் கிடைப்பதில் சமநிலை நிலவவில்லை.
- தடுப்பூசிகளுக்கு மிக அதிக அளவில் தேவை உள்ளபோதிலும் அவை போதிய அளவில் இல்லை.
- இந்தியாவில் இதுவரை 100-இல் 10 போ என்ற விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் 100-இல் 68.2-ஆகவும், ரஷியாவில் 100-இல் 12.4-ஆகவும் உள்ளது என்று உள்ளது.