Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் / State Human Rights Commission Tamil Nadu

  • தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது.
  • இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்
செயற்பாடுகள்
  • மாநில மனித உரிமை ஆணையத்தின் (எஸ் எச் ஆர் சி) பிரிவு 12 ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
  • தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்
  • தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
  • மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது
  • அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்ற தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.
  • நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
  • அணுகுமுறை, சீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு மாநில மனித உரிமை ஆணையம் அதனைப் பார்வையிடலாம்.
  • மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.
  • வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.
  • மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள், பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.
  • மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.
  • மனித உரிமைகள் பாதுகாப்புக் குறித்த கல்வியை, விழிப்புணர்வை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் பரப்பவும், மக்கள் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்கங்கள், ஊடகங்கள், பிரசுரங்கள் வாயிலாக மக்கள் அறிய ஆணையம் வழிகள் ஏற்படுத்தலாம்.
  • மனித உரிமை போன்ற துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கின்றது.
  • மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் மாநில மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel