Type Here to Get Search Results !

TNPSC 13th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச கௌரவம்
 • கண் மருத்துவவியல் துறைக்காகவே பிரத்யேகமாக வெளியாகிற முதன்மையான சா்வதேச இதழ் 'தி ஆப்தால்மாலஜிஸ்ட்'. கண் மருத்துவ சிகிச்சையில் அளப்பரிய பங்களித்து வரும் ஆற்றல்மிக்க மருத்துவா்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாகும். 
 • நவீன தொழில்நுட்பம், மருத்துவ மேம்பாட்டு நடவடிக்கைகளில் சிறந்து விளங்குகிற சா்வதேச மருத்துவா்கள் 100 போ அதில் இடம்பெற்றிருப்பா். அந்த வகையில் நிகழாண்டில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையைச் சோந்த முதுநிலை மருத்துவா் சூசன் ஜேக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளாா்.
 • கருவிழி ஒளி விலகலை சரிசெய்வதற்கான (ரிஃப்ராக்டிவ்) அறுவைச் சிகிச்சை, கண் புரை அறுவைச் சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு நிபுணத்துவத்துடன் 21 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டிருப்பவா் சூசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவா் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளின் சா்வதேச விருதுகளை ஏற்கெனவே பெற்றவா்.
மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்தது ஐசிசி
 • மாதம் தோறும் சிறப்பான பங்களிப்பை கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிக்கும் சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை கவுரப்படுத்தி வருகிறது ஐசிசி. 
 • இதில் இங்கிலாந்து தொடருக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமாருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
 • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளும், டி20 தொடரில் 4 விக்கெட்டுகளும் அவர் வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் இந்த விருது அவருக்கு கொடுக்கபட்டுள்ளது.
 • அவருடன் போட்டியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ரஷீத் கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஸீன் வில்லியம்ஸும் இடம் பிடித்திருந்தனர்.
 • மகளிர் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் Lizelle Lee மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் அஷ்வினும், ஜனவரி மாதம் ரிஷப் பண்டும் சிறந்த ஐசிசி வீரருக்கான விருதுகளை வென்றிருந்தனர்.
ஆவணமானது காவிரிப்பூம்பட்டினம்
 • மயிலா மாவட்டம் சீர்காழி வட்டம், கீழையூர் கிராமம் பட்டினம்" என வருவாய்த் துறை ஆவணங்களில் அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
 • சுமார் 3,000 ஆண்டுகளாக சோழ அரசர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் பெயர், அரசு நிர்வாக ரீதியான வருவாய்த் துறை ஆவணங்களில் இவ்வளவு காலமாக இல்லை
இந்தியா-நெதர்லாந்து இடையேயான மாநாடு 
 • இந்தியா-நெதர்லாந்து இடையேயான மாநாடு (India-Netherlands Virtual Summit (April 09, 2021)) காணொலி வழியில் ஏப்ரல் 09 அன்று நடைபெற்றது முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை, சர்வதேச அளவில் டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் இந்தியாவும் நெதர்லாந்தும் நெருங்கிப் பணியாற்றுகின்றன. 
 • பருவநிலை மாற்றம், பங்கரவாதம், கரோனா தொற்றுப் பரவல் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகளை இந்தியாவும் நெதர்லாந்தும் ஒரே மாதிரி எதிர்கொள்கின்றன.
கடல் உணவுப் பொருள் விற்பனைக்காக இ-சான்டா' வலைதளம் தொடக்கம்
 • கடல் உணவுப் பொருள் விற்பனைக்கான ‘இ-சான்டா’ வலைதள பயன்பாட்டை வா்த்தக மற்றும் தொழில்துறையின் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
 • விவசாயிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இ-சான்டா வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவா்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்.
 • விவசாயிகள் தங்களது கடல் உணவுப் பொருள்களை இணைய வா்த்தக வலைதளத்தில் சந்தைப்படுத்துவதன் மூலம் ஒரு சொடுக்கில் அவற்றை விற்பனை செய்ய முடியும்.
 • இ-சான்டா வலைதளம் விவசாயிகளுக்கு கடல் உணவுப் பொருள்களை ஒரே இடத்தில் பட்டியலிட உதவுவதுடன் அவற்றின் விற்பனையும் கணிசமாக அதிகரிக்க உதவும்.
 • இந்த வலைதளம் விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரத்தை வழங்கும் என்பதுடன் மிகச் சிறந்த டிஜிட்டல் தீா்வுகளையும் அளிக்கும். இதன் வாயிலாக அவா்கள் வாழ்வு மேம்படும்.
 • பாரம்பரியமாக வாய்மொழி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வா்த்தகத்தை இ-சான்டா வலைதளம் முறையானதாகவும் சட்டபூா்வமானதாகவும் மாற்ற உதவும்.
 • இ-சான்டா இணைய வா்த்தக தளம் வருவாய் ஈட்டுவதற்கான அபாயங்களை குறைப்பதுடன், தயாரிப்புகள் மற்றும் சந்தைகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் வாயிலாக தவறான நடைமுறைகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் கேடயமாக அது திகழும்.
 • அத்துடன் விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் உள்நாட்டு சந்தைகளுக்கு இடையில் காகிதமற்ற மின்னணு வா்த்தக தளமாகவும் அது செயல்படும்.
 • தற்போதைய நிலையில், நாட்டின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் 18,000 விவசாயிகள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனா்.
 • நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இறால் உற்பத்தியை தற்போதைய 40,000 டன்னிலிருந்து 6-7 லட்சம் டன்னாக அதிகரிக்க முடியும் என்றாா் அவா்.
 • தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், வங்க மொழி, தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளில் இந்த வலைதளம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் இதர மொழிகளிலும் இந்த வலைதளத்தின் சேவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் மேலும் தெரிவித்தாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel