Type Here to Get Search Results !

தேசிய மனித உரிமைகள் ஆணையம் / National Human Rights Commission of India

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசியலமைப்பின் படி அல்லாமல் பாராளுமன்றம் இயற்றிய சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
  • மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993ன் படி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராளுமன்றம் சட்டம் மூலம் உருவாக்கியது.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசியலமப்பு மற்றும் பன்னாட்டுச் சட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ள தனிநபர் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் காப்பதற்கு தனது பணியினைச் செய்து வருகின்றது.
அமைப்பு
  • இது ஒரு தலைவரையும்ää நான்கு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
  • உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இதன் தலைவராக இருப்பார்.
  • உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நடைமுறை அனுபவம் வாயந்த இருவர் என நால்வர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர்.
  • மேற்கண்ட முழுநேர உறுப்பினர்கள் தவிர பதவி வழி உறுப்பினர்களாக தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர், தேசிய தாம்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவர் மற்றும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் போன்றோர் இடம் பெறுவர்.
பதவி நியமனம்
  • மேற்கண்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர், பிரதமரைத் தலைவராகக் கொண்ட அறுவர் குழுவின் பரிந்துரையின்படி நியமனம் செய்கின்றார்.
  • அந்த அறுவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தலைவராக பிரதமர், மக்களவைத்தலைவர் மாநிலங்களவைத் துணைத்தலைவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோராவார்.
பதவிக்காலம்
  • ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்பதவியில் 5 ஆண்டுகள் அல்லது 70 வயதுவரை பதவியில் இருப்பர்.
  • பதவிக்காலம் முடிந்தபின்னர் அவர்கள் மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ எந்த பதவியும் வகிக்க முடியாது.
பதவி நீக்கம்
  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்யலாம்.
  • தன்னுடைய பணிக்காலத்தில் வெளியிடங்களில் ஊதியம் பெறும் பணியினைச் செய்தால்
  • உடல் அல்லது மனரீதியான காரணங்களால் பதவியைத் தொடர இயலாத நிலையில் இருந்தால்
  • தகுதியுள்ள நீதிமன்றத்தால் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என அறிவிக்கப்பட்டால்
  • ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் மேற்படி காரணங்களால் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
  • இது தவிர தகுதியின்மை அல்லது தீய நடத்தை போன்ற காரணங்களின் அடிப்படையிலும் குடியரசுத் தலைவர் ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யலாம்.
  • எனினும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணையில் தகுதியின்மை அல்லது தீய நடத்தை நிரூபிக்கப்பட்டால் குடியரசுத் தலைவர் பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிப்பார்.
ஆணையத்தின் பணிகள்
  • அரசுப்பணியாளர் ஒருவர் மனித உரிமையை மீறினார் அல்லது மீறலைத் தடுக்கத் தவறினார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தானாக முன்வந்தோ அல்லது மனுத்தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையிலோ விசாரணை செய்தல்.
  • மனித உரிமை மீறல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலையிடுதல்.
  • சிறைகள் மற்றும் முறைப்படுத்தும் இடங்களை பார்வையிட்டு கைதிகளின் வாழ்வுநிலையை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குதல்.
  • அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்களில் கூறப்பட்டுள்ள மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை மறுபரிசீலனை செய்து பரிந்துரைகள் வழங்குதல்.
  • ஒப்பந்தங்கள், பன்னாட்டுச் சட்டங்களின் மனித உரிமை தொடர்பான விஷயங்கள் ஆய்வு செய்து அவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வகைமுறைகளைப் பரிந்துரை செய்தல்.
  • மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
  • மனித உரிமைகள் குறித்த விழிப்புணாவை மக்களுக்குப் பரப்புதல்.
  • மனித உரிமைகள் குறித்து பணிபுரியும் அரசு சாராத தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
  • மனித உரிமைகளை மேம்படுத்த வல்லது எனக்கருதுகின்ற எந்த விஷயத்தையும் ஆணையம் மேற்கொண்டு செயல்படுத்தலாம்.
  • மேற்கண்ட பணிகளை மாநில அளவிலும் செய்வதற்கு மாநில மனித உரிமை ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன.
  • மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் விரைந்து நீதி கிடைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித உரிமை நீதிமன்றங்களும் அமைக்கப்படலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel