Type Here to Get Search Results !

TNPSC 12th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார் சுஷில் சந்திரா

  • உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த இரண்டு ஆண்டுகள் இருந்தவர் சுனில் அரோரா. இவரது பதவிக்காலம் முடிவடைந்தது.
  • கடந்த பிப்ரவரி மாதம் ஐந்து மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பின்போதே, இது தொடர்பாகக் குறிப்பிட்ட சுனில் அரோரா, புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தான் ஓய்வு பெற்றதும் பதவியேற்பார் என்ற தெரிவித்திருந்தார்.
  • சுனில் அரோராவைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா ஐஆர்எஸ் நியமிக்கப்பட்டார். தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்கிறார்.
  • இவர் 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார் என மைஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில தேர்தல்கள் இவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
  • தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் சுஷில் சந்திரா 1980ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரி ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 15 2019இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

பசுமை தீர்ப்பாய சென்னை அமர்வின் தற்காலிக உறுப்பினராக சத்யகோபால் நியமனம்

  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வுகளில் காலியாக உள்ள நீதித்துறை உறுப்பினர், தொழில்நுட்ப உறுப்பினர் இடங்களுக்கு உறுப்பினர்களை நியமித்து பசுமை தீர்ப்பாய தலைவர்கடந்த வாரம் உத்தரவிட்டார். 
  • அதன்படி, புணேயில் உள்ள பசுமைதீர்ப்பாயத்தின் மேற்கு மண்டலஅமர்வின் நீதித்துறை உறுப்பினராக எம்.சத்தியநாராயணன், தொழில்நுட்ப உறுப்பினராக கே.சத்யகோபால், சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வின்தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருந்தனர்.
  • அதன்படி, சத்யகோபால் புணேவில் உள்ள அமர்வில் பணியில் சேர்ந்துவிட்டார். சென்னை மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா கொல்கத்தா அமர்வுக்கு மாற்றப்பட்டார். சென்னை அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினர் பதவியில் கிரிஜா வைத்தியநாதனை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • இந்நிலையில் இங்கு விசாரணைக்கு வரும் வழக்குகளை விசாரிப்பதற்காக தற்காலிகமாகதொழில்நுட்ப உறுப்பினராக சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 15ல் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு

  • இந்திய விமானப்படை தளபதிகளின் முதல் மாநாட்டை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் ஏப்ரல் 15 தொடக்கி வைக்கிறாா்.
  • இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்கள் குறித்து ஆராய்ந்து, எதிா்காலத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த மாநாடு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இந்திய விமானப் படைக்கு அதன் எதிரிகளை வீழ்த்தும் அதிக செயல்திறனை வழங்குவதற்குத் தேவையான யுக்திகள் மற்றும் கொள்கைகளை வகுப்பது தொடா்பாக இந்த மூன்று நாள் மாநாட்டின்போது விவாதங்கள் நடைபெறும்.
  • மனிதவளம் மற்றும் நிா்வாகத் திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடா்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
  • இந்திய விமானப் படை தளபதிகள் மாநாடு, விமானப் படை ஆண்டுக்கு இருமுறை நடைபெறுவது வழக்கம். விமானப் படை செயல்பாடுகள், தளவாட பராமரிப்பு, நிா்வாகம் குறித்த முக்கிய விஷயங்களை மூத்த தளபதிகள் விவாதிப்பதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு விளங்குகிறது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி

  • இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. 
  • தினமும் 1 லட்சத்திற்கு அதிகமான மக்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணீகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 40 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது.
  • இந்நிலையில் தற்போது அதிகம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுவதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி-க்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மருத்துவர் ரெட்டிஸ் ஆய்வகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கான ஆய்வுகளை நடத்தியது. மேலும் ரஷ்யாவில் நடத்திய ஆய்வில், இத்தடுப்பூசியானது கரோனாவில் இருந்து மக்களை காப்பதில் 91.6 சதவிகிதம் திறனுடன் செயல்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரெட்டீஸ் ஆய்வகம் விர்ச்சோ பயொடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க உள்ளது.
  • இதுவரை இந்தியாவில் 10.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடந்து வரும் தடுப்பூசித் திருவிழாவில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel