Type Here to Get Search Results !

பாஸ்ட் டெலஸ்கோப் / FAST - Five hundred meter Aperture Spherical Telescope

  • சீனாவின் தென்மேற்குப் பகுதியான பிங்க்டாங்க் மாகாணத்தின் மலைகளுக்கு இடையே நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஆன பாஸ்ட் (FAST - Five hundred meter Aperture Spherical Telescope) என்ற தொலை நோக்கியை, சீனா உலக பயன்பாட்டிற்கு திறந்துள்ளது.
  • சீனாவின் தியான்யன் அல்லது "ஸ்கை ஐ" (Sky Eye) எனவும் அழைப்படும் இந்த டெலெஸ்கோப்பை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த சீனா, இதனை பயன்படுத்தவதற்கான விண்ணப்பங்களை உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களுக்கு ஆழைப்பு விடுத்துள்ளது.
  • சுமார் 1500 அடி விட்டத்தில் உள்ள இந்த FAST டெலஸ்கோப் மார்ச் 30 அன்று மதியம் 12 மணிக்கு பெய்ஜிங்கில் உலகிற்கு முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி திறக்கப்பட்டதன் மூலம், சர்வதேச அறிவியல் உலகத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்பது தெளிவாகிறது.
  • பாஸ்ட் என்ற இந்த டெலஸ்கோப் டிஷ் ஆன்டனாக்குள் ஒரே சமயத்தில் 30 கால்பந்து அணிகள் தாராளமாக விளையாடலாம் என்ற அளவிற்கு பெரிது.
  • சீனாவில் 'ஃபாஸ்ட்' இன் 'அறிவுசார் சொத்துரிமை' (Intellectual Property Right) உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வானியலாளர்கள் இதனை பயன்படுத்த விண்ணப்பித்துள்ளனர். 
  • மார்ச் 30 அன்று பெய்ஜிங் நேரப்படி இரவு 12 மணி முதல் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களுக்கு சீன ஆழைப்பு விடுத்துள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel