பொதுத்துறை தேர்வு வாரிய தலைவர் மல்லிகா சீனிவாசன்
- தனியார் துறையில் தலைவராக உள்ள ஒருவர் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிக்கானவர்களை தேர்வுசெய்வது பிஇஎஸ்பி ஆகும். இப்பதவிக்கு மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இவர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவியாவார். பணியாளர் நியமன தேர்வு குழுவுக்கான மத்திய அமைச்சரவை இவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் இருப்பார்.
- 1985-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சைலேஷ் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பொதுத்துறை நிறுவனத் துறையின் செயலராக உள்ளார்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர் உறுப்பினராக பொறுப்பேற்கும் காலத்திலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இந்த பொறுப்பில் இருப்பார்.
- பிஇஎஸ்பி அமைப்பானது ஒரு தலைவர் மற்றும் மூன்று முழு நேர உறுப்பினர்களைக் கொண்டதாகும். எம்.கே. குப்தா மற்றும் ரியர் அட்மிரல் சேகர் மித்தல் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மல்லிகா சீனிவாசன் ஏற்கெனவே இந்திய அமெரிக்க வர்த்தகக் கவுன்சில் இயக்குநர் குழுவிலும், டாடா ஸ்டீல் இயக்குநர் குழுவிலும் உள்ளார். இது தவிர சென்னை ஐஐடி, பாரதிதாசன் நிர்வாகவியல் மையம், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி
- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
- கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார செயல்பாடுகள் பெருமளவு முடங்கின. இதனால் தொழில் துறையினருக்கு வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
- அரசுக்கு வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது. அதன்பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் தொழில்கள் மெல்ல மீண்டு வரத் தொடங்கின. வரி வருவாயும் மெல்ல பழைய நிலைக்குத் திரும்பியது. ஜிஎஸ்டி வசூலும் கடந்த ஆறு மாதங்களாக ரூ.1 லட்சம் கோடி அளவை தொடர்ந்து கடந்து வருகிறது.
- கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.23 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியாக வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.22,973 கோடியும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டிரூ.29,329 கோடியும், மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.62,842 கோடியும், செஸ் வரி ரூ.8,757 கோடியும் வசூல் ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
- மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலான ரூ.62,842 கோடியில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,230 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
- 'இந்திய சினிமா உலகின் தந்தை' என்று பெருமையுடன் அழைக்கப்படுவர் 'தாதா சாகேப் பால்கே.' இவருடைய இயற்பெயர் துண்டிராஜ் சாகேப் பால்கே. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் பிறந்தவர்.
- இவர்தான், இந்தியாவின் முதல் பேசும் படமான, 'ராஜா ஹரிச்சந்திரா' என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியவர். இந்திய சினிமா உலகில் நீண்ட நாள் சேவையாற்றி, உயரிய பங்களிப்பை வழங்கும் சினிமா கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இவருடைய பெயரில், 'தாதா சாகேப் பால்கே' என்ற உயரிய விருது அளித்து கவரவிக்கப்படுகிறது.
- இந்திய சினிமா உலகின் மிகப்பெரிய விருதான இதை பெறுவது, ஒவ்வொரு சினிமா கலைஞனின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.