ஷோலாப்பூர் - பிஜப்பூர் 25 கி.மீ தூரத்துக்கு ஒருவழி சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை
- ஷோலாப்பூர் - பிஜப்பூரில் 25 கி.மீ தூரத்துக்கு ஒருவழி சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- துரிதமாக சாலை அமைப்பதில் மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 3 கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- இதே வழித்தடத்தில் 2.5 கி.மீ. தூரத்துக்கு 4 வழி காங்கிரீட் சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து மேலும் ஒரு சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது
- 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் நோக்கில் ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தது மாநில அரசுகளுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- தற்போது 38 சதவீதம், அதாவது மூன்றில் ஒரு பங்கு ஊரக குடும்பங்கள் குழாய் மூலம் குடிநீரைப் பெறுகின்றன இதில் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் வழங்கி கோவா முதல் மாநிலமாகவும், அடுத்த இடங்களில் தெலங்கானா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளும் உள்ளன
- இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி "கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில்” மார்ச் 28 அன்று தொடங்கியது.
- இரு நாடுகளிடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது
- "பாஸ் எக்ஸ்” (passage exercise (PASSEX)) என்ற இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா சார்பில் "ஷிவாலிக்” (INS Shivalik) போர்க் கப்பலும், நீண்டதூர கண்காணிப்பு போர் விமானமான "பி8ஐ" (Long Range Maritime Patrol Aircraft P8I) ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன அமெரிக்கா "யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட் போர் விமானம் தாங்கி கப்பல் குழுவை” ஈடுபடுத்தியுள்ளது
- இந்த கூட்டு பயிற்சியில் முதன் முறையாக இந்திய விமானப்படை போர் விமானங்களும் சேர்க்கப்பட்டுள்ளன
- இந்தியாவில் 15-ஆண்டுகளுக்கும் மேலான 4 கோடி பழைய வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் பசுமை வரி (green tax) விதிப்பின் வரம்புக்குள் வருகின்றன.
- பழைய வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் 70 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது.
- இதையடுத்து உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலானது மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
- தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி மார்ச் 28-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 15 தங்கம் வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.