புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது
- மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்திருக்கும் அர்ஜ்ரேயா (Argyreia) என்ற ஓர் புதுவகையான பூவிற்கு 'அர்ஜ்ரேயா சந்தரஜி' (Argyreia sharadchandrajii) எனத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- சரத் பவார் (2004 - 2014) மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் அந்த துறையில் ஆற்றிய பணிகளை பாராட்டும் விதமாகவும் மேலும் அவரது பணியை மக்கள் என்றென்றும் நினைவுகூருவதற்காகவும் இந்த தாவரத்திற்கு இவர் பெயரிடப்பட்டுள்ளது.
- பெரும்பாலும் அர்ஜ்ரேயா பூக்கள் ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் பூக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த அறியவகை மலர்கள் கோலாப்பூரில் ஐயாயிரத்துக்கும் அதிகமாகப் பூத்திருக்கிறது.
23 வயது இளைஞர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணித்து வந்து புதிய உலக சாதனை
- இந்தியாவில் 23 வயது இளைஞர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணித்து வந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். காஷ்மீரின் Budgam மாவட்டத்தில் உள்ள Narbal நகரத்தைச் சேர்ந்த Adil Teli எனும் அந்த இளைஞர் 8 நாட்கள், 1 மணி மற்றும் 37 நிமிடங்களில் காஷ்மீரிலிருந்து கன்னியகுமரிக்கு வந்தடைந்துள்ளார்.
- அவர் கடந்த மார்ச் 22-ஆம் திகதி ஸ்ரீநகரில் உள்ள Lal Chowk பகுதியிலிருந்து புறப்பட்டு 3,600 கிலோமீட்டர் கடந்து, மார்ச் 30-ஆம் திகதி காலை 9 மணியளவில் கன்னியாகுமரியை வந்தடைந்துள்ளார்.
- பயணத்தின் போது, டெல்லி, ஆக்ரா, குவாலியர், ஹைதராபாத், மதுரை போன்ற முக்கிய நகரங்களை அவர் கடந்துள்ளார். அவருடன் ஒரு பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர், ஒரு மெக்கானிக் மற்றும் ஒரு கேமரா குழுவினர் உட்பட 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு வந்துள்ளது.
- இந்நிலையில், Adil தனது சாதனையை அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்திற்காக கின்னஸ் உலக சாதனைக்கு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
- முன்னதாக, எட்டு நாட்கள், 7 மணி நேரம் 38 நிமிடங்கள் நாசிக் நகரைச் சேர்ந்த 17 வயது Om Mahajan மிக வேகமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் வரை பயணித்து உலக சாதனை படைத்துள்ளார்.
- இப்போது, Om Mahajan-ன் சாதனையை Adil Teli முறியடித்துள்ளார். Adil Teli, 2019-ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் இருந்து Leh வரை 440 கிலோமீட்டர் உயரமுள்ள பயணத்தை வெறும் 26 மணி 30 நிமிடங்களில் சைக்கிளில் ஏறிச்சென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.