Type Here to Get Search Results !

TNPSC 17th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழக அரசின் நீர்பாசனத் திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2,978 கோடி கடன்

  • நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு வகையான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும்நவீனமயமாக்கல் பணிகளுக்காக நபார்டு வங்கியின் ரூ.2,978 கோடிகடன் உதவிக்கான அனுமதிக்கடிதத்தை வழங்கினார்.
  • இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம், டெல்டா மாவட்டங்களின் 1 லட்சத்து 89 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதி பயன்பெறும். இந்த நிதியும் சேர்த்து நடப்பு ஆண்டில் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிகளின் மூலமாக தமிழகத்துக்கு ரூ.9,200 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் காப்பகம் நடத்த புதிய கட்டுப்பாடு இளஞ்சிறார் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்

  • இளஞ்சிறார் நீதி சட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அளிக்கப்பட உள்ளது. மாவட்ட சிறார் பாதுகாப்பு பிரிவும் இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். 
  • இதற்கு முன்பு, எவ்வித பின்புல ஆய்வு, சோதனை நடத்தப்படாமலேயே குழந்தைகள் நல கமிட்டியில் உறுப்பினராக இருப்பவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
  • ஆனால், இனிமேல், அவரது கல்வி தகுதி உள்ளிட்ட பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் நியமிக்கப்படுவார்கள். முன்னதாக, குழந்தைகள் காப்பகம் நடத்த விரும்புபவர்கள், அதற்கான காரணம் குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும். 
  • தற்போது, அதற்கான இட வசதி உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையில்தான் அதற்கு அனுமதி அளிக்கப்படும். 

காங்கோ, கினியாவுக்கு ஐ.நா. ரூ.109 கோடி நிதியுதவி

  • ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, கினியாவுக்கு எபோலா வைரஸ் தாக்குதலை எதிா்கொள்வதற்காக, 1.5 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.109.20 கோடி) நிதியை ஐ.நா. வழங்கியுள்ளது.

ஐ.நா. மேற்பாா்வையில் இராக் நாடாளுமன்றத் தோதல் இந்தியா ஆதரவு

  • இராக்கில் நாடாளுமன்றத் தோதலை ஐ.நா.வின் மேற்பாா்வையுடன் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு விடுத்த கோரிக்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளித்துள்ளது.
  • இராக்கின் இறையாண்மைக்கு மதிப்பளித்து, தோதல் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

காவிரி படுகை சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு தமிழக திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  • ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே 4,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். 
  • மேலும், மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கழக நிறுவனத்தில் பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவை தொடங்கிவைத்த பிரதமர், நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் காவிரிப் படுகை சுத்திகரிப்பு ஆலை அமைக்க அடிக்கல் நாட்டிவைத்தார்.

நாட்டின் முதல் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கிறது அமேசான்

  • அமேசான் தனது உற்பத்தி பிரிவினை இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளது. போக்ஸ்கான் நிறுவனத்தின் கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியின் மூலம், பயர் டிவி ஸ்டிக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ள அமேசான் அதற்காக சென்னையை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா, மொரீசியஸ் இடையே ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • இந்தியா, மொரீசியஸ் இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, மொரீசியஸ் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel