Type Here to Get Search Results !

TNPSC 16th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

புதிய தொழிற்பூங்காக்கள், தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டினார், ரூ.28 ஆயிரத்து 53 கோடி முதலீட்டில் 28 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

  • தொழில்துறை சார்பில் ரூ.28,053 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
  • தமிழக தொழில்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், புதிய தொழிற்பூங்காக்கள், தொழிற்பேட்டைகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா எலெக்ட்ரானிக்ஸின் ரூ.4,684 கோடியில் 18,250 பேருக்கு வேலை அளிக்கும் செல்போன்களுக்கான இயந்திர இணைப்புகள் தயாரிக்கும் ஆலை.
  • செய்யாறில் சன் எடிசன் நிறுவனம் ரூ.1,423 கோடியில் 1,907 பேருக்கு வேலையளிக்கும், சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி தயாரிப்பு ஆலை.
  • தைவானின் பெகட்ரான் நிறுவனம் செங்கல்பட்டில் ரூ.1,100 கோடியில் 14,079 பேருக்கு வேலை அளிக் கும் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை.
  • சென்னை மற்றும் திருவள்ளூரில் டியூப் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ரூ.525 கோடியில் 1,813 பேருக்கு வேலை அளிக்கும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
  • ஜெர்மனியின் பிஏஎஸ்எப் நிறுவனம் செங்கல்பட்டில், ரூ.345 கோடியில் 235 பேருக்கு வேலை அளிக்கும் வினையூக்கிகள் ஆலை.
  • எலெஸ்ட் நிறுவனம் ரூ.7,948 கோடியில் 8,081 பேருக்கு வேலையளிக்கும் மின் பேருந்துகள், டிரக்குகள் தயாரிப்பு தொழிற்சாலை.
  • சிங்கப்பூரின் ஏஜி அண்டு பி பிரதம் ரூ.2,430 கோடியில் 7 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் நகர எரிவாயு விநியோகத் திட்டம்.
  • நெட்மேஜிக் ரூ.1,377 கோடியில் 100 பேருக்கு வேலையளிக்கும் தகவல் தரவு மையம்.
  • ஜெர்மனியின் நார்டெக்ஸ் ரூ.1,200 கோடியில் 3 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் காற்றாலை ஜெனரேட்டர்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலை.
  • டிவிஎஸ் சக்ரா ரூ.1,000 கோடியில் 1,000 பேருக்கு வேலையளிக்கும் டயர் ஆலை.
  • பிரான்சின் வாலியோ நிறுவனம் ரூ.830 கோடியில் 2,400 பேருக்கு வேலையளிக்கும் ஆராய்ச்சி, மேம் பாடு, உற்பத்தி திட்டங்கள்.
  • கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ரூ.750 கோடியில், 300 பேருக்கு வேலை யளிக்கும் பெயின்ட் ஆலை.
  • ஆம்பியர் வெஹிகிள்ஸ் ரூ.700 கோடியில் 1,459 பேருக்கு வேலை யளிக்கும் இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை.
  • டெக்னோ எலெக்ட்ரிக் ரூ.650 கோடியில் 500 பேருக்கு வேலை யளிக்கும் தகவல் தரவு மையம்.
  • க்யூ மேக்ஸ் ரூ.525 கோடியில் 250 பேருக்கு வேலையளிக்கும் லித்தியம் அயன் ஆலை.
  • ஜெர்மனியின் ப்ளெண்டர் டிரைவ்ஸ் சார்பில் ரூ.500 கோடியில் 400 பேருக்கு வேலையளிக்கும் கியர் பெட்டி ஆலை.
  • மோத்தி குழுமம் சார்பில் ரூ.400 கோடியில் 900 பேருக்கு வேலை அளிக்கும் நூற்பு, நெசவாலை.
  • டிபி ஆட்டோ இந்தியா ரூ.337 கோடி யில் 500 பேருக்கு வேலையளிக்கும் மூன்று சக்கர மின் வாகன உற்பத்தி தொழில்.
  • தைவானின் காம்படிஷன் டீம் டெக் னாலஜி இந்தியா ரூ.232 கோடியில் 2,154 பேருக்கு வேலையளிக்கும் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையம்.
  • பெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ரூ.220 கோடியில் 700 பேருக்கு வேலையளிக்கும், துணி ஆலை.
  • லிவியா பாலிமர் ரூ.200 கோடியில் 1,200 பேருக்கு வேலையளிக்கும் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி மையம்.
  • மலேசியாவின் அன்செல் நிறுவனம் சார்பில் ரூ.139 கோடியில் 832 பேருக்கு வேலையளிக்கும் கையுறை ஆலை.
  • ஆருஷ் நிறுவனம் சார்பில் ரூ.100 கோடியில் 500 பேருக்கு வேலையளிக்கும் உருக்காலை.
  • ஸ்வீடனின் ஆட்டோலிவ் சார்பில் ரூ.100 கோடியில் 400 பேருக்கு வேலையளிக்கும் மோட்டார் வாகன உதிரிபாக ஆலை.
  • ஜப்பானின் ப்ளைஜாக் லாஜிஸ்டிக்ஸ் சார்பில் ரூ.100 கோடியில் 350 பேருக்கு வேலையளிக்கும் தொழிற் பூங்கா.
  • டாடா காபி நிறுவனம் ரூ.100 கோடியில் 160 பேருக்கு வேலை யளிக்கும் காபி பதப்படுத்தும் மையம்.
  • ஜப்பானின் கோபெல்கோ ரூ.75 கோடியில் 55 பேருக்கு வேலை யளிக்கும் மூலதன பொருட்கள் உற்பத்தி.
  • ரெக்கிட் பென்கிசர் ரூ.63 கோடியில் 250 பேருக்கு வேலையளிக்கும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மையம்.
  • மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோவை, ராமநாதபுரத்தில் ரூ.3,377 கோடி முதலீட்டில் 7,139 பேருக்கு வேலையளிக்கும் 8 தொழிற்சாலைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

  • புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாக இருவரும் பரஸ்வரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
  • இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். கிரண் பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார். இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்புடன் காணப்பட்டது.
  • இந்நிலையில் கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீட்டு மானியம் மும்மடங்கு உயர்வு, புதிய கொள்கை வெளியிட்டு முதல்வர் அறிவிப்பு

  • உலகத் தொழில்களை ஈர்க்க, இரண்டு புதிய தொழில் கொள்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன. 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது.
  • உற்பத்தி துறையில், ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி அடைவது தான், தொழில் கொள்கை யின் நோக்கம்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, 'குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை - 2021' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
  • தென் மாவட்டங்கள், தர்மபுரி, பெரம்பலுார், நாகப்பட்டினம் உள்ளிட்ட, தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய, 22 மாவட்டங்களில், தொழில் துவங்குபவர்களுக்கு, 50 சதவீதம் சலுகை விலையில், நிலம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் வழியாக, 38 துறைகளில், 190 அனுமதிகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ரூ.1.50 கோடி புதிய தொழில் கொள்கை அடிப் படையில், மேம்படுத்தப்பட்ட, புதிய வானுார்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை, புதிய ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை, விரைவில் வெளியிடப்படும்.
  • தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான, மூலதன நிதியம், 500 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். தகுதி வாய்ந்த தொழில்களுக்கு, முதல் நான்கு ஆண்டுகள் வரை, முக்கிய அனுமதிகளுக்கு விலக்கு அளிக்கும், 'FastTN' திட்டம், வாகன உற்பத்திக்கு ஊக்கம் அளிக்க புதிதாக உருவாக்கப்படும். 
  • மாதிரி வாகனங்களை பதிவு செய்வது எளிதாக்கப்படும்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, முதலீட்டு மானியம், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
  • இது, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.அரசு மானியம்குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, நிறுவனங்களின் பங்களிப்பு தொகையில், ஆண்டுக்கு, ஒரு பணியாளருக்கு, அதிகபட்சமாக, 24 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, அரசு மானியம் வழங்கும்.தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை, மேலும் வலுப்படுத்தும் விதமாக, 1,000 கோடி ரூபாய் நிதியை, அரசு வழங்கும். 
  • தொழில் கொள்கையின் பலன்களை, முழுமையாக பயன்படுத்தி, தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில், தொழில் துவங்கி, அதிக வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும்
  • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் இங்கிலாந்து - இந்தியா வணிக சபை இடையே, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 'சிப்காட்' நிறுவனத்தின், பொன்விழா ஆண்டை ஒட்டி, தபால் தலை வெளியிடப்பட்டது. இந்நி றுவனம், 1971ல் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது; 
  • 15 மாவட்டங்களில், 34 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட, 23 தொழிற்பூங்காக்களை உருவாக்கி, சாதனை புரிந்துள்ளது.பொன் விழாவை ஒட்டி, சிட்கோ நிறுவனத்தின், 'லோகோ' மற்றும் பொன் விழா, 'லோகோ' வெளியிடப்பட்டது. 
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம்மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்புக்கான, லோகோ மற்றும் இணையதளம் துவக்கப்பட்டது. 

வளர்ச்சி 13.5 சதவீதம் 'நோமுரா' கணிப்பு

  • இந்தியாவில், கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு, பொருளாதார செயல்பாடுகள், இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை அடுத்து, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 13.5 சதவீதம் அளவுக்கு உயரும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
  • ஜப்பானை சேர்ந்த தரகு நிறுவனமான, 'நோமுரா' வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ், 7.7 சதவீத மாக இருக்கும் என்றும்; அடுத்த நிதியாண்டில், வளர்ச்சி, 10.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
  • இந்நிலையில், 'நோமுரா' இவ்வாறு தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி, மைனஸ், 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது, 'நோமுரா'.

கிழக்கு கடற்கரை சாலையில் தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு அமைப்பு மத்தியமைச்சர் நிதின் கட்கரி-முதல்வர் பழனிசாமி இணைந்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு

  • சென்னை எம்.ஆர்.சி. நகரில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா, தமிழ்நாடு அரசின் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறை விழிப்புணர்வு விழா நடைபெற்று வருகிறது.
  • இந்த விழாவில், உலக வங்கி உதவியுடன் ரூ.8.60 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் வரை தானியங்கி வேக கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர். 
  • இந்த தானியங்கி அமைப்பு சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனத்தின் எண்ணை தானாக படம்பிடிக்கவும், விபத்துகளை கண்டறியவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நிதியாண்டில் ஜிடிபி 10% வளரும் எஸ் அண்ட் பி குளோபல் கணிப்பு
  • கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெரிய அளவில் முடங்கின. எனினும், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ஜிடிபி 11 சதவீதமாக இருக்கும் என் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டிருந்தது.
  • இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. சரிவிலிருக்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கைகளினால் அடுத்த நிதி ஆண்டில் இந்திய ஜிடிபி 10 சதவீதமாக இருக்கும் எனக் கூறியுள்ளது. 
  • இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு நாட்டின் வேளாண் துறையின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருப்பதும், அரசு செலவீனம் அதிகமாக இருப்பதும், நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதும் அவசியம் எனவும் கூறியுள்ளது. 
  • மேலும் மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இருப்பதும் கவனிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியமான நாய் முதோல் இன நாய் விமானப் படையில் சேர்ப்பு
  • கர்நாடகாவின் முதோல் இன வேட்டை நாய், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டம் முதோல் வட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டு நாய்கள் முதோல் நாய்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு கேரவன் நாய் அல்லது மராத்தா இன வேட்டை நாய் என்ற பெயர்களும் உள்ளன
  • முதோல் இன வேட்டை நாய் களுக்கு தொலைத்தூரத்தில் உள்ளவற்றையும் கூர்மையாக உற்றுநோக்கி கண்டறியும் பார்வைத் திறன் உள்ளது. இதனால் ராணுவத்தில் எல்லையை கண்காணிப்பதற்கும் விமானப் படையில் ஓடுதளத்தை கண்காணிப்பதற்கும் பயன்படுத்த முடியும். இதன் தாடைகள் நீண்டு கடினப் பொருளை துண்டிக்கும் வகையில் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சிறப்பாக வேட்டை யாடும் திறன் கொண்டது
  • கூர்மையான பார்வையும், வேட்டையாடும் திறனும் கொண்ட இந்த நாய்களை மராட்டிய மன்னர் சிவாஜியும், பாகல்கோட்டை மன் னர் கோர்படாவும் தங்களது முதல்கட்டமாக பாகல்கோட்டை படையில் போருக்காக பயன் படுத்தியுள்ளனர். 
  • 2017-ம் ஆண்டில் முதோல் இன வேட்டை நாய்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையை கண்காணிப்பதற்காக ராணுவத் திலும் சேர்க்கப்பட்டன
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, மாநிலங்களவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அளித்த பரிந்துரையை ஏற்று, மாநிலங்களவைத் தலைவர் வெங் கைய்யா நாயுடு இதனை அறிவித்துள்ளார் MY
சீனாவில் ஐ.நா. ஒருங்கிணைப்பாளராக இந்தியர் பொறுப்பேற்பு
  • சீனாவில் ஐ.நா ஒருங்கிணைப் பாளராக இந் தியாவின் சித்தார்த் சாட்டர்ஜி பொறுப்பேற்நார். அந்நாட்டில் ஐ.நா.வின் 27 அமைப்புகள், அதன் நிதி மற்றும் திட்டங்களை அவர் மேற்பார்வையிடுவார். கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித் துள்ள சித்தார்த் சாட்டர்ஜி,
  • இராக், சோமாலியா, டென்மார்க் சூடான், இந்தோனேசியா உள் ளர். கடந்த 2000-ஆம் ஆண்டு கெக்கு குடானில் உள்நாட்டுல் போர் உச்சத்தில் இருந்தபோது யுனிசெஃப்பில் பணிபுரிந்துவந்த சித்தார்த் சாட்டர்ஜி, அந்நாட்டு ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டி ருந்த 3,551 சிறார்களை தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் மீட்டார்.
  • இந்தியாவில் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் இளநிலை பட்டப் படிப்பை முடித்த அவர், அமெரிக் காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்க ழகத்தில் பொதுக்கொள்கைபடிப் பில் முதுநிலை பட்டம் பெற்றார்
  • இந்திய ராணுவத்தில் பணிபு ரிந்த அவருக்கு, கடந்த 1995-ஆம் ஆண்டு வீரதீர செயல்களுக்கான பதக்கத்தை அளித்து மத்திய அரசு கௌரவித்தது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel