Type Here to Get Search Results !

TNPSC 15th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழகத்தில் நேரடியாக நியமிக்கப்படும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு இனசுழற்சி, உள்ஒதுக்கீடு முறை செல்லாது உச்ச நீதிமன்றம்

  • தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிக்க இடஒதுக்கீடு, இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை அரசு 2003 முதல் கடைபிடிக்கிறது.
  • இதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
  • அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப்பணி விதிகள் பிரிவு 35(ஏ)படி, மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
  • இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் 2016-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசுசார்பில் கடந்த 2016 செப்.9-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் இயற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. 
  • அதன்படி அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு, இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
  • இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில், ''பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, சாதி மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது'' என்று தீர்ப்பளித்தனர்.
  • இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
  • அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அமர்வு, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு 4 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்.

உலக வா்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவா் ஒகோஞ்சா இவேலா

  • உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் டபிள்யூடிஓ தலைவரான ஆப்பிரிக்க கண்டத்தைச் சோந்த முதல் நபா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா்.
  • 164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின் முதன்மையான வா்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் தொடா்பான விதிகளை முடிவு செய்கிறது. 

புதிய புவிசார் தகவல் கொள்கை பிரதமர் மோடி வெளியிட்டார்

  • இந்திய தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில், 'மேப்பிங்' எனப்படும், புவிசார் தகவல் தொடர்பான புதிய கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 
  • கட்டுப்பாடுபுவிசார் தகவல் சேகரிப்பு கொள்கை தாராள மயமாக்கப்பட்டுள்ளது.நாட்டின் வரைபடங்கள் மற்றும் புவிசார் தகவல்களை சேகரிக்க, தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கான, 'லைசென்ஸ்' பெறுவதில் அதிக சிக்கல்கள் உள்ளன. இதனால், ஊழல், நிர்வாக அடக்குமுறையை சந்திக்க வேண்டியுள்ளது.
  • உலகெங்கும் தாராளமாக கிடைக்கும் தகவல்களை, நம் நாட்டில் பெறுவதற்கு உள்ள தடை விலக்கி கொள்ளப்படுகிறது.நம் புவி சார்ந்த தகவல்களை சேகரிப்பது, சேமிப்பது, பகிர்ந்து கொள்வது, அச்சிடுவது உள்ளிட்டவற்றுக்கு இருந்த கட்டுப்பாடுகள், லைசென்ஸ் முறை ரத்து செய்யப் படுகிறது.
  • இதன் மூலம், 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் உட்பட, நம் தொழில் நிறுவனங்கள் பெரிய பலனைப் பெற உள்ளன. மேப்பிங் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் வளர்ச்சியைக் காணும். 
  • புவி சார்ந்த தகவல்கள் கிடைப்பதால், விவசாயிகளும் சரியாக திட்டமிட்டு, தங்களுடைய பணியை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
  • புவிசார்ந்த தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதன் மூலம், புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பு ஏற்படும். புவிசார்ந்த தகவல்களை திரட்டுவதில் நிபுணத்துவம் பெற்ற நாடாக, இந்தியா மாறும். 

7 பட்டியல் பிரிவு ஜாதிகளை தேவேந்திரகுல வேளாளர்களாக்கவே மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், தமிழ்நாட்டின் பட்டியல் இனங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • எனவே, பட்டியல் பிரிவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது என்றும், உண்மை நிலையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
  • தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவில் தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் 7 பிரிவுகளை சேர்ப்பதற்கான மசோதா மக்களவையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel