Type Here to Get Search Results !

TNPSC 12th, 13th & 14th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கேரளாவில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

  • தமிழகத்தின் சென்னையில் இருந்து, கேரளாவின் கொச்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 6,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், 'பெட்ரோகெமிக்கல்' வளாகத்தை, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • இதேபோல், 12 கனரக லாரிகள் மற்றும், 30 பயணியரை ஏற்றிச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இரண்டு, ரோ - ரோ ரக கப்பல்களும், நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
  • இதையடுத்து, கொச்சி துறைமுகத்தில் சர்வதேச கப்பல் முனையம் மற்றும் கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனத்தையும், பிரதமர் மோடி திறந்துவைத்தார். கொச்சி துறைமுகத்தில், நிலக்கரி தள கட்டுமானத்திற்கு, அவர் அடிக்கல் நாட்டினார்.
தேவேந்திர குல வேளாளர்களின் பெயர் மாற்றம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் பிரதமர் நரேந்திர மோடி 
  • தேவேந்திர குல வேளாளர்களின் பெயர் மாற்றம் தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 
  • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தேவேந்திரகுல வேளாளர் சகோதர, சகோதரிகள், கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்கிறது. 
  • அவர்கள் இனி, பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுவார்கள். 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவார்கள். 
அர்ஜுன் எம்பிடி எம்கே ரக கவச வாகனத்தை பிரதமர் மோடி ராணுவத்துக்கு அர்ப்பணித்தார்
  • ஆவடியில் தயாரான அர்ஜுன் எம்பிடி எம்கே ரக கவச வாகனத்தை பிரதமர் மோடி ராணுவத்துக்கு அர்ப்பணித்தார். 
  • தமிழ்ப் புலவர் அவ்வையாரின் வரிகளான, 'வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்..' என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதி 'ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்றார்.
தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்
  • சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான, புதிய மெட்ரோ ரயில் பாதையை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இதன் வழியே, இனி விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, மெட்ரோ ரயிலில் பயணியர் செல்லலாம்.
  • 3,770 கோடி ரூபாய் மதிப்பிலான, சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க திட்டம்.இதன்படி, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரை, 9.05 கி.மீ., துாரத்துக்கு இந்த திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை, மெட்ரோ ரயிலில் செல்ல முடியும்
  • சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை, 22.1 கி.மீ., வரையிலான ரயில் பாதை, 293.40 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையால், சென்னை துறைமுகம் மற்றும் எண்ணுார் காமராஜர் துறைமுகம் இடையே சரக்கு போக்குவரத்து எளிதாகும்
  • விழுப்புரத்தில் இருந்து, கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர்; விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர் வரையிலான ரயில் பாதை, 423 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தில், போக்குவரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
  • காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையில் இருந்து துவங்கும் கல்லணை கால்வாயை, 2,640 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார். இந்த திட்டம் முடிந்தால், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாயம் மேம்படும்
  • சென்னை அருகேயுள்ள தையூரில், 2 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள, சென்னை ஐ.ஐ.டி.,யின் டிஸ்கவரி ஆராய்ச்சி மையத்தின் பணிகளுக்கும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
குப்பை குறித்து புகாரளிக்க சிட்டிசன்' செயலி அறிமுகம்
  • சென்னையில், குப்பை குறித்து புகாரளிக்க சிட்டிசன்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சியில் மண்டலங்களில், குப்பை கையாளும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது
  • அதில், உர்பசர் சுமித் நிறு வனம் தேனாம்பேட்டை கோடம்பாக்கம் வளசரவாக் கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி சோழிங்கநல்லுார் ஆகிய ஏழு மண்டலங்களில் குப்பை  கையாளும் பணியை செய்து வருகிறது 
  • இம்மண்டலங்களில், சாலையில் கிடக்கும் குப்பை குறித்து புகாரளிக்க, 'சிட்டிசன்' செய வியை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், ரிப்பன் மாளிகையில் நேற்று அறிமுகப்படுத்தினார்
  • இந்த செயலி வாயிலாக, குப்பை இருக்கும் இடங்களை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.எம்.அருணாசலம் தேர்வு
  • சென்னை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டி ஐஐ) நிறு வனத்தின் இயக்குநர் குழுத் தலைவராக எம்.ஏ.எம்.அ ருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • கடந்த 1991-ஆம் ஆண்டிலிருந்து முருகப்பா குழு மத்தில் இணைந்து செயலாற்றி வரும் எம்.ஏ.எம் அருணாசலம் டிஐஐ, சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் ஃ பைனான்ஸ், சோழமண்டலம் ஹோம் ஃபைனான்ஸ், சாந்தி கியர்ஸ் உள்ளிட்டவற்றின் நிர்வாகக் குழுக்களில் இடம் பெற்றுள்ளார். அவரை டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது 

இந்திய லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தலைவராக டாக்டர் எல்.பி.தங்கவேலு தேர்வு
  • அகில இந்திய லாப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (ஐஏஜி இஎஸ்) தலைவராக கோவையைச் சேர்ந்த டாக்டர் எல்.பி.தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • இந்திய லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை நிபு ணர்கள் சங்கம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறதுஇந்த சங்கத்தில் இந்தியாவிலும், பல் எல்.பி.தங்கவேலு வேறு நாடுகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு தொடக்கம் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
  • கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன
  • அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்தாம் கட்ட அகழாய்வில் 750க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
  • ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்தன. இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel