ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு / GREAT BACKYARD BIRD COUNT
TNPSCSHOUTERSFebruary 15, 2021
0
ஊர்ப்புறப்பறவைகள் கணக்கெடுப்பு, வளாகப்பறவைகள் கணக்கெடுப்பு ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இந்த ஆண்டு பிப்ரவரி 12-15 ஆகிய நான்கு நாள்கள் நடைபெறுகின்றன.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு / (GREAT BACKYARD BIRD COUNT)
வீடு தொடங்கி அன்றாடம் சென்றுவரும் இடங்கள்வரை ஏதேனும் சில பறவைகளை தற்செயலாகவாவது நாம் பார்த்திருப்போம். நமக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று நினைத்தாலும் உண்மையில் நிறையவே தொடர்பு உண்டு.
அப்படிநம் சுற்றுப்புறங்களில் பார்க்கும் பொதுப்பறவைகளைக் கணக்கிடுவதே GREAT BACKYARD BIRD COUNT (GBBC) என்னும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு. இது உலகம் முழுவதும் ஒரே வேளையில் நடைபெறும் மாபெரும் திருவிழா
வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு / (CAMPUS BIRD COUNT)
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பையே ஒரு வளாகத்துக்குள் மேற்கொள்வதுதான் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு. பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவனங்களில் பணிபுரிவோர் தாங்கள் இருக்கும் வளாகத்துக்கு வந்து செல்லும் பறவைகளைக் கணக்கெடுக்க ஓர் வாய்ப்பு
இது இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தின் சூழலின் தன்மையை அறியலாம்.