எய்ட்ஸை குணப்படுத்த மருந்து சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை
- எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துசென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
- ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ்உலகையே அச்சுறுத்தி வருகிறது.உலகின் பல்வேறு பகுதிகளிலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.
- இந்நிலையில் சென்னைஐஐடிஉயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதிதலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹாசன், சின்மய்பிந்தி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.
- இந்தக் குழுவினரின் ஆய்வுக்கட்டுரை அமெரிக்கன் கெமிக்கல்சொசைட்டி ஆய்விதழில் அண்மையில் வெளியானது.
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
- 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் தாணு, திரைப்பட விழாக் குழுவைச் சேர்ந்த தங்கராஜ், காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்டஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலாச்சார தூதர்கள் கலந்துகொண்டனர்.
- இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்நடத்தும் இந்த திரைப்பட விழாவை பிவிஆர் இணைந்து வழங்குகிறது.
வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக `சன்டேஸ்' அறிமுகம் செய்தது மத்திய அரசு
- வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து `சிக்னல்' மற்றும் `டெலிகிராம்' செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- இந்நிலையில் சன்டேஸ் செயலியை தேசிய தகவல் மையம் (என்ஐசி) வடிவமைத்துள்ளது. இந்த செயலியை ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
- இது இன்னமும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதைப் பயன்படுத்த விரும்புவோர் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இதை பதிவிறக்கம் செய்யலாம். இணையதள வடிவிலும் இந்த செயலி உள்ளது. 'வாட்ஸ் அப்'பில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த செயலியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அசாம், மேகாலயாவை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான பாலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
- அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக ரூ.3,231 கோடி மதிப்பில் மகாபாகு- பிரம்மபுத்திரா நீர்வழி போக்குவரத்தை அவர் தொடங்கி வைத்தார்.
- இதன்மூலம் அசாமின் நேமதி, மஜூலி ஆகிய பகுதிகளுக்கு இடையிலான 420 கி.மீ. தொலைவு, 12 கி.மீ. தொலைவாக குறையும். இந்த நீர்வழி போக்குவரத்து திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளும் இணைக்கப்படும். இத்திட்டத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமன்றி வர்த்தக போக்குவரத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
- அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5,000 கோடியில் புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 19 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலமாக அமையும்.
- மேலும் அசாமின் காளிபாரி, ஜோர்கட் இடையிலான 8 கி.மீ.தொலைவு பாலத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இவை தவிர பல்வேறு சிறிய பாலங்கள், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து
- திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- தொடர்ந்து, மூன்று மட்டும் நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- அதன்படி, அணு உலை கட்டடம், அணு உலை துணைக் கட்டடம், டர்பைன் மற்று டீசல் ஜெனரேட்டருக்கான கட்டடம் போன்றவற்றை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி
- உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் பவங்கேதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். எம். ஏ. பட்டதாரியான இவர் அம்மாவட்டத்தின் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- 2008ஆம் ஆண்டில் ஷப்னம் வீட்டின் அருகே மரம் அறுக்கும் வேலை செய்து வந்த சலீமுக்கும், அவருக்கு காதல் மலர்ந்தது. ஆனால், அவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதனால் காதலுக்கு இடையூறாக இருந்த தனது குடும்பத்தைக் கொலை செய்ய முடிவு எடுத்த, ஷப்னம் குடும்பத்தினர் அனைவருக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
- அதை அருந்தியப் பின் அவர்கள் மயக்கத்தில் இருந்த நிலையில், ஷப்னம் மற்றும் அவர் காதலன் சலீம் சேர்ந்து கோடாரி கொண்டு ஷப்னமின் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், அவர்களின் மனைவி மற்றும் பத்து மாத கைக் குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
- இதுதொடர்பான வழக்கில் ஷப்னம் மற்றும் சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அம்ரோஹா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டை 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. சலீம் ஆக்ரா சிறைச் சாலையிலும் ஷப்னம் ராம்பூர் மாவட்ட சிறைச்சாலையில் உள்ளனர்.
- மாநில ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இவர்கள் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. ஷப்னத்திற்கு தண்டனை நிறைவேற்றப்படுமானால், இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி ஷப்னமாகத்தான் இருப்பார்.