Type Here to Get Search Results !

TNPSC 20th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஆன்லைன் ரம்மிக்கு தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

  • ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட சில இளைஞர்கள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரேங்கேறி வந்தன. 
  • இதனையடுத்து, இந்த விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அந்த அவரச சட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.
  • இந்த அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவோரின் கணினி, செல்போன் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும், 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

பூடான் பிரதமர் லோடேவுடன் இணைந்து 2ம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

  • பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூடான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு பிரதமருடன் இணைந்து முதல்கட்டமாக ரூபே கார்டு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். 
  • இந்நிலையில் இரண்டாவது கட்ட ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடியும் பூடான் பிரதமர் லோடே ஷெரிங்கும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று தொடங்கிவைத்தனர். இதன் மூலம் ரூபே கார்டு வைத்திருக்கும் பூடான் நாட்டை சேர்ந்தவர்கள் இதனை இந்தியாவில் பயன்படுத்தலாம்.

மெட்ரோ ரயில் முதல் வகுப்பு பெட்டிகள் மகளிர் பெட்டிகளாக மாற்றம்

  • வரும் 23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. 
  • இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது மகளிர் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்திட முடியும். தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்.
  • இதுதவிர மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழு நேரமும் முழுமையாக கண்காணித்தல், தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்க தடை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்சம் ரூ.1000 கோடியை முதலீடாக நிர்ணயித்துள்ளது ரிசர்வ் வங்கி
  • இந்தியாவில் தனியார், மற்றும் அரசு வங்கிகள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த வருடம் முக்கியமான பொதுத்துறை வங்கிகள் நிர்வாக வசதிகளுக்கான இணைக்கப்பட்டன.
  • இந்நிலையில், இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் உலளாவிய வங்கியின் முதலீடு என்பது ரூ.500 கோடியில் இருந்து ரூ. 1000 கோடியாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
  • மேலும், சிறுநிதி வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்திய- தாய்லாந்து கடற்படை கூட்டு ரோந்து

  • இந்தியா, தாய்லாந்தின் கடற்படைகளுக்கு இடையேயான இந்திய-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்தின் 30-வது பதிப்பு நவம்பர் 20 வரை நடைபெற்றது.
  • இந்தியக் கப்பலான ஐ.என்.எஸ். கார்முக், தாய்லாந்து கப்பலான கிரபூரி ஆகியவை இந்த ரோந்தில் பங்கேற்றுள்ளன. இந்திய அரசின் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் இதர உதவிகளை இந்தியக் கடற்படை செய்து வருகிறது.
  • இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள், உரையாடல்களின் மூலமாக நெருங்கிய நட்புறவை பேணி வருகின்றன. கடந்த சில வருடங்களாக இது இன்னும் வலுப்பட்டு வருகிறது.
  • கடற்சார்ந்த உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் விதமாக, 2005-ம் ஆண்டிலிருந்து வருடத்துக்கு இருமுறை கூட்டு ரோந்து நடவடிக்கையை இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. 
  • வர்த்தக கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு உகந்ததாக இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புற குடிநீர் இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

  • மிர்சாபூர், சோன்பாத்ரா ஆகிய மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து, கிராமப்புற நீர் மற்றும் சுகாதாரக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
  • இரண்டு மாவட்டத்திலும் உள்ள 2,995 கிராமங்களிலுள்ள 42 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
  • குடிநீர் வழங்கல் திட்டத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக அந்தந்தப் பகுதிகளில் கிராமப்புற நீர் மற்றும் சுகாதாரக்குழு அமைக்கப்படும்.
  • ரூ.5555.38 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த குடிநீர் வழங்கல் திட்டம் அடுத்த 24 மாதங்களில் முடிக்கப்படும். 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
  • ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் இந்த குடிநீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் 18.93 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 
  • இதுவரை 3.23 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15.70 கோடி கிராமப்புற வீடுகளுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel