Type Here to Get Search Results !

TNPSC 16th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தேசிய ஊடக தினம் கொண்டாட்டம்
  • தேசிய ஊடக தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய பிரஸ் கவுன்சில் சார்பில் காணொலி காட்சி மூலம் 'கரோனா காலத்தில் ஊடகத்தின் பங்கும் மற்றும் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
  • இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியை இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் படித்தார். வாழ்த்துச் செய்தியில் மோடி கூறியிருந்ததாவது:
  • தேசிய ஊடக தினத்தை இந்திய பிரஸ் கவுன்சில் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். கணொலிக் காட்சி மூலம் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதன் மூலம் தொழில்நுட்பத்தின் சக்தி தெரியவருகிறது. 
  • இதற்கு முன் இல்லாத வகையில் கரோனா தொற்றை எதிர்த்து உலகமே ஒன்றுபட்டு நிற்கிறது. கரோனாவுக்கு எதிராக இந்தியாவின் 130 கோடி மக்களும் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கரோனாகுறித்து மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றன.
  • கரோனா காலத்துக்குப் பிந்தைய உலகில் இந்தியா தனது திறமையாலும் தொழில்துறை திறனாலும் உலகில் முன்னணியில் நடைபோடும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்போம் என்ற பிரச்சாரத்தையும் செய்தியையும் ஊடகங்கள் முன்னெடுத்துச் செல்கிறது. 
  • உலகம் வேகமாக மாறி வருகிறது. உலகிற்கு இந்தியாவின்சக்தியும் திறமையும் எல்லாதுறைகளிலும் தேவைப்படுகிறது. இந்தியாவின் திறமையை உலகம் முழுவதும் பலமாகஉறுதிப்படுத்துவதில் ஊடகங்கள்முக்கிய பங்காற்றுகின்றன.
  • இம்முயற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வழிகாட்டியாக இருந்து நமது துடிப்பான ஊடகப் பரப்பை வலுப்படுத்துகிறது. குடிநீர் பாதுகாப்பு, தூய்மை இந்தியா திட்டம் போன்ற அரசின்பல திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படவும் ஊடகங்களின் பங்கு பாராட்டுக்குரியது. 
அமெரிக்காவின் கொரோனா மாடர்னா தடுப்பூசி மருந்து 94.5% வெற்றி 

  • கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உலகின் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில் பல தடுப்பூசிகள் முதல் 2 கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து 3வது மற்றும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. 
  • ரஷ்யாவின் ஸ்பூட்னிக் 5 உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக அந்நாட்டு அரசு அங்கீகரித்து வெளியிட்ட போதிலும், சர்வதேச நாடுகள் முழுமையாக ஏற்கவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்பூட்னிக் 5 தடுப்பு மருந்து தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.
  • இதற்கிடையே, கடந்த வாரம் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்து 3ம் கட்ட பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளிப்பதாக அறிவித்தது.
  • இது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் பல பைசர் தடுப்பு மருந்து வாங்க முன்வந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் மற்றொரு கொரோனா தடுப்பு மருந்து 94.5% பலன் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 'கோவி' என பெயரிடப்பட்டுள்ள இம்மருந்தை மாடர்னா மருந்து நிறுவனம், அமெரிக்க அரசின் நேரடி உதவியுடன் உருவாக்கி வருகிறது. இதன் மூன்றாம் கட்ட பரிசோதனையில் 30,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 

நகர்புறங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க 1000 கோடி ஒதுக்கீடு

  • தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள், கழிவு நீர் கால்வாய் பணிகள், மற்றும் இயற்கை பேரிடர்களால் சாலைகள் சேதமடைகிறது. இவ்வாறு சேதமடைந்த சாலைகளை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது.
  • இதன்படி இந்த ஆண்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 4 ஆயிரத்து 376 கி.மீ நீள சாலை மேம்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில 'ஐகான்' சோனு சூட் தேர்தல் கமிஷன் அறிவிப்பு
  • பஞ்சாப் மாநில 'ஐகான்' (அடையாள சின்னம்) ஆக, பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
  • பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்து, தற்போது ரியல் ஹீரோவாக மாறி உள்ளார். கொரோனா காலத்தில் ஊரடங்கில் சிக்கியவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பியும், புலம் பெயர்ந்தவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தும் மனித நேயத்துடன் நடந்து கொண்டார். 
  • இது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது.சோனு சூட், பஞ்சாப் மாநிலம் மொகா மாவட்டத்தில் பிறந்தவர். இந்நிலையில், பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ, சோனு சூட்டை, பஞ்சாப் மாநில 'ஐகான்' ஆக நியமிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷக்கு பரிந்துரைத்தார்.
11 கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிப்புகளில் சேர INI-SET என்ற தனி நுழைவுத்தேர்வை அறிவித்துள்ளது மத்திய அரசு
  • 11 கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிப்புகளில் சேர INI-SET என்ற தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. 11 கல்லூரிகளுக்கும் நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து தனித்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. 
  • ஜிப்மர், நிமான்ஸ், எய்ம்ஸ் டெல்லி, போபால்,நாக்பூர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கிராண்ட் ப்ரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயம் : ஜப்பானிய வீரர் சாதனை வெற்றி
  • ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா நகரில் நடைபெற்ற கிராண்ட் ப்ரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் ஜப்பானிய வீரர் ஜோன் மிர் வெற்றி பெற்று தனது முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றார். 
  • இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆனார்.
வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த சர்வதேச பயிர் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி
  • வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த, ஐதராபாத்தில் உள்ள சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இயக்குனரகம் நிபந்தனையுடன் கூடிய விலக்கை அளித்துள்ளது.
  • அரை வெப்ப மண்டலத்துக்கான, சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையம் (ICRISAT) ஐதராபாத்தில் உள்ளது. இந்த மையம் ட்ரோன்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 6.6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குறைந்த செலவில் ட்ரோன்களை உருவாக்கும் வழிகளைக் காட்ட, இளம் தொழில் முனைவோர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
  • வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த, சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இது ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாத காலம் அல்லது முதல் கட்ட டிஜிட்டல் வான் தளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை இதில் எது முன்போ, அதுவரை செல்லுபடியாகும். 
  • விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ள 18 நிபந்தனைகளையும், கட்டுப்பாடுளையும் கடுமையாகப் பின்பற்றினால் மட்டுமே இந்த விலக்கு செல்லுபடியாகும். நிபந்தனைகள் மீறப்பட்டால், விலக்கு செல்லாததாகிவிடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel