Type Here to Get Search Results !

1st to15th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 


ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தல் புதிய சட்டத் திருத்தம்

  • ஆலைகள் விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான நில சீா்திருத்த சட்டத்தில் உரிய திருத்தங்களையும் அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திருத்தம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த திருத்தத்தின் படி, ஆலைகள் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்காக 120 ஏக்கா் வரை புன்செய் நிலங்களையும், 60 ஏக்கா் வரை நன்செய் நிலங்களையும் அரசின் முன் அனுமதி ஏதும் இல்லாமல் தனியாா்களிடம் இருந்து ஆலை நிா்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
  • இந்தப் புதிய உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தொழில் துறை உயரதிகாரிகள், தொழில் ஆலைகளைத் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் நிலங்கள் கிடைப்பது மிகப்பெரிய சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் அரசின் நடவடிக்கையால் அதற்கான தடைகளும், சிரமங்களும் விலகி உள்ளன. 
  • தொழில் ஆலைகள் விரிவாக்கத்துக்கு 100 ஏக்கரைத் தாண்டி நிலங்களை வாங்கும் போது அதற்கு அரசின் முன் அனுமதியைப் பெறுவது போன்ற பல்வேறு நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. 

அக்டோபர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி., வசூல்

  • பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்து வருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.05 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
  • கடந்த, எட்டு மாதங்களில் முதல் முறையாக, 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
  • கடந்த அக்டோபர் மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., வசூல், 1.05 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, அக்.,ல், 95 ஆயிரத்து, 379 கோடி ரூபாய் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • இந்தாண்டு, பிப்.,ல் 1.05 லட்சம் கோடி ரூபாயாக, ஜி.எஸ்.டி., வசூல் இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பிறகு, வரி வசூல் குறைந்தது.

கே.பி.அன்பழகனுக்கு வேளாண் துறை கூடுதலாக ஒதுக்கீடு

  • தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 
  • தொடர்ந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இறந்தார். இந்நிலையில் துரைக்கண்ணு பதவி வகித்து வந்த வேளாண்துறையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்தார்.
  • அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றார். இதையடுத்து கே.பி.அன்பழகனுக்கு உயர் கல்விதுறையுடன், வேளாண் துறை கூடுலாக அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியமனம்

  • நியூசிலாந்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான நியூசிலாந்து தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், தனது அமைச்சரவையில் 5 பேரை புதிதாக நியமித்து பிரதமர் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
  • அவர்களில் பிரியங்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர். பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் இன சமூகங்களுக்கான அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும், சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சராகவும் அவர் பணியாற்றுவார்.
  • கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41) சென்னையில் பிறந்தவர். தனது பள்ளிக் கல்வியை சிங்கப்பூரில் பயின்றார்
  • பின்னர், உயர் கல்விக்காக நியூசிலாந்து சென்றார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சுரண்டப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றி வந்தார்.
  • 2017-ஆம் ஆண்டு நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு இன சமூகங்களுக்கான அமைச்சரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார். பிரியங்கா ராதாகிருஷ்ணன் தன் கணவருடன் ஆக்லாந்தில் வசித்து வருகிறார்.

மின்சார மோட்டாா் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அமல்

  • தமிழகத்தில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், தனியாா் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அதிகளவு பயன்படுத்துவதற்கு ஏதுவாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வகுத்துள்ளது.
  • குறிப்பாக கடந்த ஆண்டு முதல்வா் வெளியிட்ட மின்சார வாகனக் கொள்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈா்க்கத் திட்டமிடப்பட்டது. அந்தக் கொள்கையில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் இடம் பெற்றிருந்தன.
  • அதே நேரம், 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 9.8 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.
  • இந்த வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
  • கடந்த 2008-ஆம் ஆண்டு மாா்ச்சில் வெளியிடப்பட்ட அரசின் உத்தரவில், மோட்டாா் வாகனங்களுக்கு ஒருமுறைக்கான வரியாக ரூ.750 வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும், பொது மக்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கான புதிய மின்சார மோட்டாா் வாகனங்களுக்கான ஒருமுறை வரியானது 3 சதவீதமாக விதிக்கப்பட்டது.
  • மின்சாரத்தில் இயங்கும் புதிய மோட்டாா் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க 100 சதவீதம் வரி விலக்கு அளிக்க வேண்டுமென போக்குவரத்து ஆணையா் சாா்பில் அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பா் 18ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. இதன் அடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
  • இது, வா்த்தக ரீதியிலான மற்றும் வா்த்தக ரீதியில் அல்லாத வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த வரி விலக்கு முறை உடனடியாக அதாவது, செவ்வாய்க்கிழமை (நவ.3) முதல் அமலுக்கு வருகிறது. இது வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் 

தமிழகம் உட்பட 15 மாநிலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த 2,200 கோடி நிதி ஒதுக்கீடு

  • நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த 15வது நிதி கமிஷன் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது
  • இப்பரிந்துரைகளின்படி, 10 லட்சத்துக்கு மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு மத்திய அரசு 2,200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
  • இதில் தமிழகத்தில் சென்னைக்கு 90.5 கோடியும், மதுரைக்கு 15.5 கோடியும், திருச்சிக்கு 10.5 கோடியும் என மொத்தம் 116.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்மாக மகாராஷ்ராடிராவுக்கு 396.5 கோடியும், உத்தரப்பிரதேசத்திற்கு 357 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

16 மாநிலங்களுக்கு 2ம் தவணையாக ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு

  • ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது
  • அதன்பிறகு மாநில அரசுகள் தங்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டை போராடி பெற்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • இதை காரணம் காட்டி, மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.
  • மாறாக, வருவாய் இழப்பீடான ரூ.2.35 லட்சம் கோடி இழப்பீடு அல்லது ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்பட்ட ரூ.97,000 கோடி இழப்பீடு பெற விரும்பும் மாநிலங்கள், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது பத்திர வெளியீடு மூலம் கடன் திரட்டிக்கொள்ள யோசனை கூறியது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
  • இந்நிலையில் சந்தையில் இருந்து ரூ.1.1 லட்சம் கோடி திரட்டி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது
  • கடந்த மாதம் 23ம் தேதி முதல் தவணையாக மத்திய அரசு கடன் மூலம் திரட்டிய ரூ.6,000 கோடியை ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றுக்கு வழங்கி வருகிறது
  • தற்போது 2வது தவணையாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,000 கோடி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மலபார் கடற்பயிற்சி ஒத்திகை 2020

  • ஆண்டுதோறும் பல்வேறு நட்பு நாடுகளின் கடற்படை கப்பல்கள் ஒத்துழைப்புடன் இந்திய கடற்படை கூட்டு போர் பயிற்சியை நடத்துவது வழக்கம். 
  • அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களுடன் இந்தியா கூட்டு போர் பயிற்சியை தொடங்கியது.
  • இந்தப் பயிற்சிக்கு மலபார் கடற்பயிற்சி ஒத்திகை என பெயரிடப்பட்டுள்ளது.
  • வங்கக் கடலில் மலாக்கா நீரிணை அருகே இந்தப் பயிற்சி அதிகாலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து அரபிக் கடலிலும் இதேபோன்ற போர் பயிற்சி ஒத்திகையை நடத்த இந்த 4 நாடுகளும் முடிவு செய்துள்ளன.
  • இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், அமைதியை பராமரித்து, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் முதன் முறையாக கூட்டுபோர் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பயிற்சியின்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட 5 கப்பல்கள் பங்கேற்றன.
  • அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பல், ஆஸ்திரேலியாவின் பல்லாரட் பிரிகேட் கப்பல், ஜப்பானின் பிரம்மாண்ட போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்றதாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதல் கட்ட போர் பயிற்சி ஒத்திகை நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து இந்திய, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.
  • இரண்டாவது கட்ட பயிற்சி, அரபிக் கடலில், நவம்பர் 17 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மலபார் போர் பயிற்சியில், இந்தாண்டு முதல் முறையாக ஆஸ்திரேலிய கடற்படையும் இணைய சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு, சட்டீஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடை மூலம் விநியோகம்

  • நாட்டில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் மத்திய அரசின் பரிசோதனை திட்டத்தை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயல்படுத்துகிறது.
  • 2019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த பரிசோதனைத் திட்டத்தை ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தை தலா ஒரு மாவட்டத்தில் அமல்படுத்த 15 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
  • ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

 

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்

  • குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த எம்.எஸ். ஜாஃபர் சேட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • இதுவரை டாக்டர் சி. சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த தீயணைப்புத் துறை டிஜிபி பதவி தற்போது ஜாபர் சேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • ஜாபர் சேட் இதுவரை வகித்து வந்த குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பதவியை, இனி சென்னை ரயில்வே துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரா வரிசையில் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது கேரள அரசு

  • மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) டெல்லி சிறப்பு காவல் நிறுவன (டிஎஸ்பிஇ) சட்டத்தின் கீழ் இயங்குகிறது. எந்த ஒரு மாநிலத்திலும் விசாரணை நடத்துவதற்கு அந்த மாநில அரசின் பொதுவான ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதல் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
  • இந்நிலையில், கடந்த 2018-ல்சிபிஐ அமைப்புக்கான பொதுவான ஒப்புதலை மேற்கு வங்கஅரசு திரும்பப் பெற்றது. எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது.
  • இதையடுத்து, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகளும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றன.
  • இதுபோல, மகாராஷ்டி ராவில் சமீபத்தில் எழுந்த தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்த நிலையில், அம்மாநில அரசும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது.
  • இந்நிலையில், கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது. 
  • இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதல் நிலவி வந்த நிலையில், சிபிஐ அமைப்புக்கான அனுமதியை கேரள அரசு வாபஸ் பெற்றது.
  • முன்னதாக, அமைச்சர வையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல், கேரளாவில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய மாநில அரசிடம் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.294 கோடி திட்டப் பணிகள் தொடக்கம்: ரூ.324 கோடி பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்

  • சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.162.43 கோடியில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தேனி ஊராட்சி ஒன்றியங்களில் அமைய உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
  • கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9.90 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், கீழமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.46 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.9.62 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், நாகை மாவட்டத்தில் ரூ.42.46 கோடியில் கூடுதல் நீர் ஆதாரம் ஏற்படுத்துவதற்கான திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.91.13 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.324 கோடி குடிநீர் திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.46.32 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.6.60 கோடியில் கட்டப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்ட அலுவலக கட்டிடம், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ரூ.2 கோடியிலான நகராட்சி அலுவலக கட்டிடம், 
  • தேனி அல்லிநகரம் நகராட்சியில் ரூ.3 கோடியிலான தூய்மை பணியாளர் குடியிருப்பு, ஆவடி மாநகராட்சியில் ரூ.197.20 கோடியிலான 4 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.255.12 கோடியிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ரூ.21.82 கோடியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் சீரமைக்கப்பட்ட 31 நீர்நிலைகள், சென்னை மாநகராட்சியால் சீரமைக்கப்பட்ட 117 சமுதாய கிணறுகள், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால், 
  • கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சீரமைக்கப்பட்ட 174 சமுதாய கிணறுகள் என மொத்தம் 291 சமுதாய கிணறுகள், திரு.வி.. நகர் ஸ்டிரஹான்ஸ் சாலையில் ரூ.13.49 கோடியிலான புதிய மண்டல அலுவலக கட்டிடம், 
  • துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் ரூ.1.95 கோடியிலான நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம், தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் ரூ.69 லட்சத்திலான சிறப்பு காப்பக கட்டிடம், வில்லிவாக்கம் சிட்கோநகர் 4-வது பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் ரூ.1.08 கோடியிலான பூங்கா என மொத்தம்ரூ.39.03 கோடி மதிப்பிலான சென்னை மாநகராட்சி திட்டங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
  • சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.27 லட்சத்தில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள், குப்பைகளை உறிஞ்சி அகற்றுவதற்கு ரூ.4.34 கோடியிலான 15 சிறிய வகை வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வர் வழங்கினார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியது

  • புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக சா்வதேச நாடுகள் பாரீஸ் நகரில் மேற்கொண்ட பருவநிலை மாற்றத்திலிருந்து விலகும் முடிவை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடநத 2017-ஆம் ஆண்டு அறிவித்தாா்.
  • அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக நினைக்கும் நாடுகள், அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, அமெரிக்காவின் காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளது.
  • பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், புவியின் சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியசுக்குக்குக் கீழே வைத்திருப்பதற்கான சா்வதேச ஒப்பந்தம், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2016-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • அதற்காக, தங்களது நாடுகளின் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவை குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்த அந்த ஒப்பந்தத்தில் நாடுகள் ஒப்புக் கொண்டன. அந்த ஒப்பந்தத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டன.

பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

  • ராணுவ ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு அமைப்பு பினாகா ஏவுகணையை உருவாக்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரை பகுதியில் உள்ள சண்டிப்பூர் ஏவுதளத்தில்இருந்து பரிசோதிக்கப்பட்டது. 
  • மொத்தம் ஆறு பினாகா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன. இதில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன.

செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

  • செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் .சண்முகம் புதன்கிழமை வெளியிட்டாா். ஹா் சகாய் மீனா: பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் - பயிற்சி (அயல் பணியை முடித்து மாநிலப் பணிக்குத் திரும்பியுள்ளாா்)
  • ஜெ.. பத்மஜா: பெரம்பலூா் சாா் ஆட்சியா் (விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்)
  • டி.பாஸ்கர பாண்டியன்: செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை இயக்குநா், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன நிா்வாக இயக்குநா் (முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி)
  • .சரவணவேல் ராஜா: முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி (தமிழ்நாடு கனிமங்கள் துறை நிா்வாக இயக்குா்)
  • எல்.சுப்பிரமணியன்: கனிமம் மற்றும் சுரங்கவியல் துறை இயக்குநா் (கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா்)
  • தாரேஷ் அகமது : தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா் (விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்).

1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் அதிநவீன திரவ பிராணவாயு கலனை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில், சேலம் மாவட்டம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன திரவ பிராணவாயு கலனை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 
  • மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் வேலைகளில் 75% இடஒதுக்கீடு

  • மாநில தனியார் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் உள்ளூர் வேட்பாளர்களுக்கு மாதம் ₹ 50,000 க்கும் குறைவாக வழங்கும் மசோதாவுக்கு ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தனியார் துறை வேலைகளில் மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத ஒதுக்கீட்டை வழங்கும் முக்கியமான மசோதாவுக்கு ஹரியானா சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமாக மாறும்.
  • 2020 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு மசோதாவில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை ஹரியானா மாநிலம் வழங்குகிறது, இதில் தனியார் துறை வேலைகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கு சம்பளம் மாதத்திற்கு ரூ.50,000-க்கும் குறைவாக உள்ளது.

சுகாதாரம், சரக்கு மேலாண்மை குறித்த பயிற்சிக்காக உயர் திறன் மேம்பாட்டு மையங்கள் சென்னை கிண்டி, ஒரகடத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் 2-வது நிலையின் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை - தமிழக அரசு இடையே 50 சதவீத விகிதாச்சார பங்களிப்புடன் ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக ரூ.1 கோடி, தொழில் நிறுவன கூட்டமைப்பின் சரிசமப் பங்காக காவேரி மருத்துவமனையின் பங்களிப்பு ரூ.1 கோடி என பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக லாப நோக்கமற்ற நிறுவனமாக சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
  • இந்த மையத்தில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ஆடியோ காட்சி விரிவுரை அரங்கம், நிர்வாக அலுவலகங்கள், மாநாடு மற்றும் உட்கூட்ட அரங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன
  • இதன் மூலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை சுகாதார பணியாளர்களுக்கும் உயர்நிலை திறன் பயிற்சி மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, உயரிய வேலைவாய்ப்பை அவர்கள் பெற உறுதி செய்வதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இங்கு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கரோனா தொற்று தொடர்புடைய பயிற்சி பாடத் திட்டம் தொடங்கப்படுகிறது.
  • அதேபோல, தமிழக அரசு சார்பில் திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக ரூ.1 கோடி, தொழில்நிறுவன கூட்டமைப்பின் சரிசமபங்காக, சரக்கு நகர்வு மேலாண்மைக்கான திறன் குழுமத்தின் ரூ.1 கோடி பங்களிப்புடன் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக லாப நோக்கமற்ற நிறுவனமாக சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) பிரிவுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது
  • இந்த மையத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மையத்தில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் சரக்கு நகர்வு மேலாண்மை குறித்த உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
  • முதல்வர் முன்னிலையில், வாணியம்பாடியில் ரூ.20.37 கோடி செலவில் தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்குத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க மத்திய காலணி பயிற்சி நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நேபாள பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேவுக்கு அந்நாட்டு அதிபா் கௌரவ தளபதி பதவி 

  • நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி பூா்ணசந்திர தாப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
  • பிராந்தியத்தில் சீனா தனது ஆளுமையை விரிவுபடுத்துவதற்கான தீவிர முயற்சியை எடுத்து வருவதைத் தொடா்ந்து, இந்தியாவும் மியான்மா், மாலத் தீவுகள், வங்கதேசம், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்த முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
  • அதுபோல, நேபாளத்துடனும் நட்புறவை மீண்டும் வலுப்படுத்தும் வகையில், ராணுவ தலைமைத் தளபதியை அந்நாட்டு அனுப்பத் தீா்மானித்தது.
  • அதனடிப்படையில், நேபாள ராணுவ தலைமைத் தளபதி தாப்பா அழைப்பின் பேரில், ராணுவ தலைமைத் தளபதி நரவணே மூன்று நாள் பயணமாக நேபாளத்துக்கு சென்றாா்.
  • அங்கு, போா் நினைவிடத்துக்கு வியாழக்கிழமை சென்று அஞ்சலி செலுத்திய நரவணே, ராணுவ தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். பின்னா் தலைமைய வளாகத்தில் பிகான் மரக் கன்றை நட்டுவைத்தாா்.
  • அதன் பிறகு, நேபாள ராணுவ மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகளை இந்தியா சாா்பில் நரவணே வழங்கினாா்அதுபோல, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் மருத்துவ முகக் கவசங்களையும், அமைதியின் அடையாளமான புத்தா் சிலையையும் நரவேணவுக்கு தாப்பா வழங்கினாா்
  • பின்னா் ராணுவ தலைமை அலுவலகத்தில் இரு நாட்டு ராணுவத தலைமைத் தளபதிகளும் ஆலோசனை மேற்கொண்டனா். முன்னதாக, நேபாள அதிபா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நரவணேவுக்கு அந்நாட்டு ராணுவத்தின் கௌரவ தளபதி பதவியை அதிபா் வித்யாதேவி பண்டாரி வழங்கினாா். அதன் அடையாளமாக நரவணேவுக்கு வீரவாள் உள்ளிட்டவற்றை அதிபா் வழங்கினாா்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சவுதியின் முதலீட்டு நிறுவனம் ₹9,555 கோடி முதலீடு

  • ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் நிறுவனத்தில், சவுதி அரேபியாவின் பொது முதலீடு நிதி நிறுவனம் (PIF) ₹9555 கோடி (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்கிறது. இதன் மூலம், ரிலையன்ஸ் ரீடெய்லில் 2.04% பங்குகளை வாங்குகிறது.
  • இது சவூதி நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தில் இரண்டாவது முதலீடு ஆகும். ஏற்கெனவே ஜியோவில் சவூதி முதலீட்டு நிறுவனம் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது. இதுவரை ரிலையன்ஸ் ரீடெய்லின் 10.09% பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ₹47265 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது

'ஆகாஷ்' நிறுவன இயக்குனருக்கு தொழில்முனைவோர் விருது

  • பி.எச்.டி., சேம்பர் ஆபர் காமர்ஸ் நிறுவனம், 1977 முதல், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர்களுக்கு, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் புரிந்துள்ள சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
  • இந்தாண்டிற்கான விருது வழங்கும், தேர்வு குழுவின் தலைவராக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.சி.லஹோதி இருந்தார்.
  • அவருடன், கனரா வங்கியின், முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ராஜிவ் கே துபே, மூத்த தொழிலதிபர், டாக்டர் அருணா அபே ஓஸ்வால்ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
  • இக்குழுவின் பரிந்துரைப்படி, போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் செய்வதில், தேசிய அளவில் முன்னணியில் உள்ள, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனரான, ஜே.சி.சவுத்ரிக்கு, 'புகழ்பெற்ற தொழில்முனைவோர் விருது - -2020' வழங்கப்பட்டது.
  • இந்த விருதை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், முன்னாள் ராணுவ ஜெனரலுமான, வி.கே.சிங் வழங்கினார்.

கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வரலாற்றில் முதன் முறையாக, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒருவர், கோவிலின் பூஜாரியாக தேர்வு 

  • கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில், பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. 
  • கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள், இந்த போர்டின் நிர்வாகத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த போர்டு வரலாற்றில் முதன் முறையாக, பகுதி நேர அடிப்படையில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த, 18 பேர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், கோவில்களின் பூஜாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
  • தேவசம் போர்டு சார்பில் இதுவரை, 310 பகுதி நேர பூஜாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான தேர்வுகள் நடந்தபோது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் இருந்து தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவில்லை.
  • இதனால் அவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிட்டு, புதிய தரவரிசை பட்டியில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதிலும், பழங்குடியினருக்கான நான்கு இடங்களுக்கு, ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். 

இந்தியா இத்தாலி இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் பேராசிரியர் கியுசெப் கோன்டே ஆகியோருக்கிடையே இருதரப்பு மெய்நிகர் மாநாடு 2020 நவம்பர் ஆறு அன்று நடைபெற்றது.
  • பேராசிரியர் கியுசெப் கோன்டே 2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த மோடி, இந்தியா- இத்தாலிக்கு இடையேயான உறவு சமீபகாலங்களில் வேகமாக வலுவடைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். நிலைமை சீரானவுடன் இத்தாலிக்கு வருகை புரியுமாறு பிரதமர் மோடிக்கு பிரதமர் பேராசிரியர் கோன்டே அழைப்பு விடுத்தார்.
  • இருதரப்பு உறவுகளுக்கான கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு இரு தலைவர்களுக்கும் வழங்கியது.
  • கோவிட்-19 உட்பட பொதுவான உலக சவால்களை எதிர்த்துப் போராடுவதில் வலுவான ஒத்துழைப்புக்கான உறுதியை தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
  • அரசியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விரிவான விஷயங்களை தலைவர்கள் விவாதித்தனர். குறிப்பாக ஜி-20 உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச தளங்களில் நெருங்கி பணிபுரிவது என இருதரப்பும் ஒத்துக்கொண்டன.
  • டிசம்பர் 2021-இல் இத்தாலியும், 2022-இல் இந்தியாவும் ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். டிசம்பர் 2020-இல் இருந்து இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து ஜி-20 நிர்வாக அமைப்பில் இருப்பார்கள். 
  • ஒப்புதல் நடவடிக்கை முடிந்தவுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இணைய இத்தாலி முடிவெடுத்திருப்பதை இந்தியா வரவேற்றது.
  • இந்த மாநாட்டில் இருதரப்பின் உறவை மேம்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துதல், தொழில்நுட்பப் அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குவஹாத்தி உயர்நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைக் பயன்படுத்தி, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான, நீதிபதி சஞ்சய் குமார் மேதி, நீதிபதி நானி தாகியா மற்றும் நீதிபதி மனிஷ் சவுத்ரி ஆகியோரை கவுகாத்தி நீதிமன்றத்தின் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  • இந்த மூன்று நீதிபதிகளும் பதவியேற்றுக் கொள்ளும் நாளில் இருந்து இவர்களது நியமனம் அமலுக்கு வரும். இது தொடர்பான அறிவிக்கைகளை மத்திய நீதி மற்றும் சட்டத்துறை 2020 நவம்பர் 5 அன்று வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி

  • அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில், வெற்றி பெற 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்
  • அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  • அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுப்பதும் உறுதியாகியுள்ளது.

ஊராட்சி தலைவர், உறுப்பினரை திரும்ப பெறும் மசோதா ஹரியாணா பேரவையில் நிறைவேறியது

  • ஹரியாணா சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று முன்தினம் 2020-ம் ஆண்டுக்கான ஹரியாணா பஞ்சாயத்து ராஜ் (இரண்டாவது திருத்தம்) மசோதாவை துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தாக்கல் செய்தார்.
  • கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய அளவிலான பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் மாவட்ட அளவிலான ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் சரியாக செயல்படத் தவறினால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை மக்களுக்கு இந்த மசோதா வழங்குகிறது.
  • மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 8 சதவீத இடஒதுக்கீடும் வழங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தலைவரையோ அல்லது ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் உறுப்பினர்களையோ அவர்களின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பேமக்கள் திரும்ப அழைத்துக் கொள்ள முடியும்
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பொறுப்புடைமையை அதிகரிப்பதே இந்த திருத்தத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.

இஓஎஸ்-01 உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது
  • இந்தநிலையில், பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீனரக புவிகண்காணிப்பு செயற்கைக்கோள் நவம்பர் 7ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது
  • அதன்படி நேற்று ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.
  • ராக்கெட்டை நேற்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ராக்கெட்டை திட்டமிட்டபடி விண்ணில் ஏவும் பணிகள் தடைபட்டது. இதையடுத்து கவுண்டவுன் நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர்,
  • ராக்கெட் புறப்படும் நேரம் 9 நிமிடம் தாமதமாக மதியம் 3.11 மணி என மாற்றப்பட்டது. அதன்படி, சரியாக 3.11 மணிக்கு முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது
  • பூமியில் இருந்து புறப்பட்டு 15 நிமிடம் 20 வினாடியில் 575 கி.மீ தூரத்தில் இந்தியாவின் ..எஸ்-01 செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டப்படி நிலைநிறுத்தப்பட்டது
  • இதையடுத்து, வணிக ரீதியாக ஏவப்பட்ட லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைக்கோள்கள், லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைக்கோள் என 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
  • இஓஎஸ்- 01 செயற்கைக்கோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இது 630 கிலோ எடை கொண்டது
  • இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் உள்ள எக்ஸ்பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் அதிக திறன் கொண்ட படங்களை எந்த காலநிலையிலும் துல்லியமாக எடுக்கும்

.நா., ஆலோசனை குழு உறுப்பினராக இந்திய துாதர் விதிஷா மைத்ரா நியமனம்

  • ஐக்கிய நாடுகள் சபையில், 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவை, .நா., நிர்வாகம் மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, பிராந்தியம் மற்றும் தகுதி அடிப்படையில், 16 உறுப்பினர்களை தேர்வு செய்கின்றன.
  • இக்குழுவின், 2021 - 23ம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வு நடந்தது. இதில், ஆசிய - பசிபிக் நாடுகள் பிரிவில், விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு ஆதரவாக, 126 ஓட்டுக்கள் கிடைத்தன.
  • எதிர்த்து போட்டியிட்ட, ஈரான் பிரதிநிதி அலி முகமது பேக் அல் தபாக், 64 ஓட்டுக்கள் பெற்றார். இதையடுத்து, நிர்வாக - பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு, விதிஷா மைத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • மேலும், .நா., நிர்வாகம், சிறப்பு முகமை அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளையும், இந்த குழு, பொதுச் செயலருக்கு வழங்கும்.விதிஷா, டில்லியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பல் போக்குவரத்து அமைச்சக பெயர் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

  • கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயரை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
  • சுயசார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு நாட்டின் நீர்வழிப் போக்குவரத்தில் பெரிய முயற்சியாக இது உள்ளது. நீர்வழிப் போக்குவரத்தைத் திறம்பட பயன்படுத்துவதற்காகவும் சர்வதேச தரத்திலான இலக்கை எட்டுவதற்காகவும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயர் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
  • வளர்ந்த பொருளதாரம் கொண்ட நாடுகளில் பெரும்பாலும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ்தான், கப்பல், துறைமுகங்கள், தேசிய மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகிய அனைத்தும் உள்ளன. இந்த செயல்முறையை இந்தியாவிலும் செயல்படுத்துவதன் மூலம் இந்தியப் போக்குவரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரலாம். இந்த முயற்சி விரிவுபடுத்தப்படும்.

108 வயது "மரங்களின்தாய்" திம்மக்காவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

  • கர்நாடகாவைச் சேர்ந்த "மரங்களின்தாய்" என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் 'சாலுமாரதா' திம்மக்காவுக்கு கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. 
  • 108 வயதான அவருக்கு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று, பல்கலைக்கழக அதிகாரிகள் முனைவர் பட்டம் வழங்கினார்கள்.
  • கன்னடத்தில் "மரங்களின் வரிசைகள்" என்று பொருள்படும் 'சாலுமாரதா' என பிரபலமாக அழைக்கப்படும் இவர், தனது கணவரின் சொந்த ஊரான துமகுரு மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஹுலிகலுக்கும் குடூருக்கும் இடையில் 4 கி.மீ தூரத்துக்கு 400 ஆலமரங்களை வரிசையாக வளர்த்துள்ளார், இதனால் அவர் மரங்களின் தாய் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திம்மக்காவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியபோது, அவர் ஆசீர்வாதத்தின் சைகையாக ஜனாதிபதியின் நெற்றியில் தனது உள்ளங்கையை வைத்தார், இது பார்வையாளர்களிடம் மிகப்பெரிய கைதட்டலைத் பெற்றது, பின்னர் அவர் 2019 ல் ராஷ்டிரபதி பவனில் ஒரு மரக்கன்றுகளையும் நட்டார். 
  • திம்மக்காவுக்கு கர்நாடக ராஜ்யோத்சவ விருது, ஹம்பி பல்கலைக்கழகத்தின் நாடோஜா விருது மற்றும் இந்திய அரசின் தேசிய குடிமகன் விருது மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

Ro-Pax படகு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • சூரத்தின் ஹசிரா முதல் பாவ்நகரில் உள்ள கோகா வரையிலான Ro-Pax படகு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தரைவழி போக்குவரத்தை ஒப்பிடுகையில் கடல்வழி போக்குவரத்துக்கான செலவை குறைக்கும் நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
  • இதன்மூலம் இந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான பயண நேரமும் 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும். இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

பஞ்சாபில் சி.பி.. எந்தவொரு வழக்குகளையும் விசாரணை செய்ய அளித்திருந்த ஒப்புதலை திரும்ப பெற்ற பஞ்சாப் அரசு

  • நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன (டி.பி.எஸ்..) சட்டத்தின்கீழ் சி.பி.. தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு பொது ஒப்புதல் அளித்துள்ளன.  இதனால் எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் வழக்குகளை சி.பி..யால் நேரடியாக விசாரிக்க முடியும். இந்த சூழ்நிலையில் பா... ஆட்சி இல்லாத பல மாநில அரசுகள் சி.பி..க்கு அளித்து பொது ஒப்புதலை திரும்ப பெற்று வருகின்றன.
  • இதனால் அந்த மாநிலங்களில் எந்தவொரு வழக்குகளையும் சி.பி.. விசாரிக்க வேண்டுமானால் முதலில் சம்பந்தபட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். 
  • ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சி.பி..க்கு அளித்து இருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றன. தற்போது இந்த பட்டியலில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் அரசும் இடம் பிடித்துள்ளது.
  • பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு டி.பி.எஸ். சட்டத்தின்கீழ் சி.பி.. தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அளித்திருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றது. 
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் மோதல் போக்கு நிலவிவரும் சூழ்நிலையில், சி.பி.. அளித்து இருந்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு திரும்பபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலஞ்சர்ஸ் டி20 கிரிக்கெட் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணி சாம்பியன்

  • இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெண்களுக்காக சேலஞ்சர்ஸ் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜாவில் நடந்தது. 
  • 3 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ்-ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
  • இதில் இறுதிப்போட்டியில் 'டாஸ்' வென்ற சூப்பர் நோவாஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டிரைல் பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் டிரைல் பிளாசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
  • அதிகபட்சமாக மந்தனா 49 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். சூப்பர் நோவாஸ் தரப்பில் ராதா யாதவ் 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.
  • தொடர்ந்து 119 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 ரன்கள் எடுத்தார். 
  • இதனால் டிரைல் பிளாசர்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிரைல் பிளாசர்ஸ் அணி தரப்பில் சல்மா கதுன் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முதன் முறையாக ஹைபர் லூப்பில் மனிதர்கள் பயணித்து சோதனை வெற்றி

  • அமெரிக்காவை சேர்ந்த விர்ஜின் ஹைப்பர் லூப் நிறுவனம், காந்த விசையை பயன்படுத்தி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. 
  • காந்தப்புல தடத்தின் மீது அந்தரத்தில் காற்றில்லா குழாயினுள் அமைக்கப்படும் பெட்டிகளில் அதிக வேக பயணம் செய்வதே ஹைப்பர் லூப். விர்ஜின் ஹைப்பர் லூப் நிறுவனம் கடந்த ஞாயிறன்று ஹைப்பர் லூப் ரயில் சோதனையை மேற்கொண்டுள்ளது.
  • நிவேடாவில் உள்ள டெவ்லூப் சோதனை தளத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜோஷ் கீகல், பயணிகள் அனுபவப் பிரிவின் இயக்குனர் சாரா லூச்சியன் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். 
  • இவர்கள் மணிக்கு 172 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக பயணித்துள்ளனர். இதுவரை இந்த நிறுவனம் 400 சோதனைகளை மேற்கொண்டுள்ளது. மனிதர் பயணம் செய்து சோதனை நடத்தியுள்ளது. 
  • இதுவே முதல் முறையாகும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக கருதப்படுகிறது. விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனமானது 2025ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு சான்றிதழை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. 2030ம் ஆண்டில் வர்த்தக ரீதியாக ஹைப்பர் லூப்கள் இயக்கம்தொடங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஹைபர் லூப் பயணத்தின்போது எந்தவித சத்தமும் கேட்காது.அதிகபட்சமாக மணிக்கு 1000 கிமீ மேல் செல்லும்.
  • இதில், நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன்னுக்கு 30 நிமிடங்களில் சென்றுவிடலாம். இந்த தூரத்தை விமானம் மூலம் கடக்க சுமார் ஒரு மணி நேரமாகும்.
  • இது ஜெட் விமானத்தை விட இரு மடங்கும், அதிவேக ரயில்களைக் காட்டிலும் 4 மடங்கும் விரைவாகவும் செல்லக்கூடியது.

15வது நிதிக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் தாக்கல்

  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஐந்தாண்டு திட்டத்திற்கான அறிக்கையை 15வது நிதிக் குழு அளித்தது. கடந்த 2016ல் மத்திய அரசு என்.கே.சிங் தலைமையிலான 15வது நிதிக் குழுவை அமைத்தது. 
  • மத்திய மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராய்ந்து வளர்ச்சிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை இக்குழு பரிந்துரைத்து வருகிறது. நேற்று இக்குழுவின் தலைவர் என்.கே.சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து 2021 - 26 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார். 
  • மாநிலங்களின் நிதியாதாரங்களை ஆராய்ந்து ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ற தீர்வுகள் குறித்து அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நிதிக் குழு தெரிவித்துள்ளது.பார்லி.யில் நிதிக் குழு அறிக்கை தாக்கல் செய்த பின் அதன் விபரங்கள் தெரியவரும்.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் வரி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் பொறுப்பும் இக்குழுவுக்கு உள்ளது. 
  • பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியான மானியம் செலுத்துவது உள்ளிட்டவற்றில் மாநிலங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதற்கேற்ப ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக அறிக்கை அளிக்கும் பணியும் நிதிக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் குழந்தைகளுக்கான 67 பூங்காக்களை கட்டித் தந்தது இந்தியா

  • மாலத்தீவில் (Maldives) உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கும், பொருளாதார தளத்தை விரிவுபடுத்துவதற்கும், பொருளாதாரத்தை மேலும் வலுவாக்கவும், உதவுவதாக இந்தியா உறுதியளித்துள்ள நிலையில், இந்தியா மாலத்தீவுகளில் கட்டியுள்ள 67 குழந்தைகள் பூங்காக்களை திங்கள்கிழமை ஒப்படைத்தது.
  • இதற்கான நிகழ்ச்சியில், இரண்டு நாள் பயணமாக இங்கு வந்துள்ள வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, 67 குழந்தைகள் பூங்காக்களை பரிசளிப்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், தீவுகளில் உள்ள வடக்கு முதல் தெற்கு முதல் அனைத்து பகுதிகளும் பயனடையும் என்றார்.
  • இந்தியா மாலத்தீவின் (Maldives) நெருங்கிய அண்டை நாடு மற்றும் சிறந்த நட்பு நாடு என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறினார்.
  • உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், பொருளாதார தளத்தை விரிவுபடுத்துதல், பொருளாதாரத்தை (Economy) மிகவும் வலுவாக்குதல், வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுவதற்கும் மாலத்தீவு அரசாங்கத்தை ஆதரிப்பதை இந்தியா (India) நோக்கமாகக் கொண்டுள்ளது, ஷ்ரிங்க்லா கூறினார்.
  • இந்தியாவிற்கு மாலத்தீவுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ஒப்பந்தங்கள் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் முதல் மிக முக்கிய சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் (HICDP) வரை உள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் தீவில் உள்ள சமூகங்களின் வாழ்க்கையில் உடனடி மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் இலவச அதிவேக வைஃபை சேவை - உத்தராகண்டில் அதிரடி

  • உத்தராகண்டில் அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இலவச அதிவேக வைஃபை சேவையை அம்மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.
  • அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர், ''நாட்டிலேயே முதல்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இலவச மற்றும் அதிவேகமான வைஃபை சேவையை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்.

பீகார் ஆட்சியைப் பிடித்தார் நிதிஷ், தனிப்பெரும் கட்சியாக தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி

  • பீகார் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 
  • ஆரம்பத்தில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் அணி முன்னிலையில் காணப்பட்டது. காலை 10 மணிக்கு பிறகு பாஜக - ஜே.டி.யு அணி முன்னிலை பெறத் தொடங்கியது.
  • எனினும் ஆர்.ஜே.டி கடும் போட்டியைக் கொடுத்தது. அணிகளும் மிகவும் நெருக்கமான போட்டியை வாக்கு எண்ணிக்கையில் எதிர்கொண்டன. 
  • எனினும் பாஜக அணி அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளையொட்டி தனது முன்னிலைக் கணக்கை தொடர்ந்தபடியே இருந்தது.
  • முடிவில் பாஜக - ஜேடியு அணி 125 இடங்களையும், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் அணி 110 இடங்களையும் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

5வது முறையாக சேம்பியன் ஆன மும்பை இண்டியன்ஸ்

  • டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் அடிக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ரகானே 2 ரன்களிலும்,ஷிகர் தவான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
  • அதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் சேர்ததனர். இருவரும் அரைசதம் அடித்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
  • 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா, டி காக் ஜோடி 4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தது. அப்போது டிகாக் அவுட் ஆனார். 
  • அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்தார். 18.4 ரன்களில் 157 ரன்களை எடுத்து மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை இண்டியன்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசுக்கு ரூ.335 கோடி நிதி மத்திய அரசு அறிவிப்பு

  • கடந்த மாதம் நடத்தப்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்தில், வரி வருவாய் இழப்பை சரிகட்ட மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.9,627 கோடி கடன் வாங்கிக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
  • இந்நிலையில், தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்து, கடந்த 2ம் தேதி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.
  • இதில், தமிழகத்திற்கு மட்டும் ரூ.335 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது,' என கூறப்பட்டுள்ளது.

20 ராணுவ குதிரைகள், 10 மோப்ப நாய்கள்: வங்கதேச ராணுவத்துக்கு பரிசளித்தது இந்தியா

  • இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தும் முயற்சியாக, வங்கதேச ராணுவத்துக்கு, 20 பயிற்சி பெற்ற குதிரைகள், கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் 10 மோப்ப நாய்களை வங்கதேச ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் பரிசளித்தது.
  • இந்தக் குதிரைகளும், மோப்ப நாய்களும் இந்திய ராணுவத்தின் குதிரை மற்றும் கால்நடை படைப்பிரிவில் பயிற்சி பெற்றவை. இந்தக் குதிரைகளுக்கும், மோப்ப நாய்களுக்கும் பயிற்சி அளிக்கவும், கையாளவும், வங்கதேச ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்துள்ளது.
  • குதிரைகள் மற்றும் மோப்ப நாய்களை பரிசளிக்கும் நிகழ்ச்சி, இந்தியா- வங்கதேச எல்லையில் பெட்ரோபோல்-பெனோபோல் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நடந்தது.

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது மேற்குவங்க அரசு

  • நாடு முழுவதும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. 
  • இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 
  • மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும், மருத்துவம் , மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, உணவுப் பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல் ஆகிய துறைகளும் இந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் வருகின்றன.
  • மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம் - (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: நிதி ஆயோக் மற்றும் கனரக தொழில்கள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 18,100 கோடி ரூபாய்.
  • மின்னணு/தொழில்நுட்பப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 5000 கோடி ரூபாய்.
  • வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: கனரக தொழில்கள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 57042 கோடி ரூபாய்.
  • மருந்துகள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: மருந்துகள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 15000 கோடி ரூபாய்.
  • தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: தொலைதொடர்பு அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 12195 கோடி ரூபாய்.
  • ஜவுளிப் பொருட்கள்: மனிதர்களால் செய்யப்படும் இழைகள் பிரிவு மற்றும் தொழில்நுட்ப ஜவுளி (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை): ஜவுளி அமைச்சகம், ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 10683 கோடி ரூபாய்.
  • உணவுப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 10900 கோடி ரூபாய்.
  • அதிகத் திறன் கொண்ட சூரிய சக்தி ஒளி மின்னழுத்தப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 4500 கோடி ரூபாய்.
  • வீட்டுப்பயன் கருவிகள் (குளிர்சாதனப் பெட்டிகள் & எல் டி) (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 6238 கோடி ரூபாய்.
  • சிறப்பு எஃகு (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: எஃகு அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 6322 கோடி ரூபாய்.
  • ஐந்து வருட காலத்துக்கு மேற்கண்ட அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் 145980 கோடி ரூபாய் உற்பத்தி சார்ந்த உதவித் தொகையாக வழங்கப்படும்.

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டிற்குள் ஒடிடி தளங்கள்

  • இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், திரைப்பட தயாரிப்பாளர்கள தங்களது படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகிறன்றனர். 
  • இதில் ரசிகர்கள் அதிகளவு உபயோகிப்பதால், இணைய தொடர்கள், திரைப்படங்கள் அதிகளவு வெளியாகி வருகின்றன.
  • மேலும் ஓடிடி தளத்தில வெளியாகும் படங்களுக்கு சென்சார் கிடையாது என்பதால் ஆபாச காட்சிகள், அவதூறு காட்சிகள், கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெறுவதாக பலர் புகார் அளித்து வந்தனர்.
  • இதனிடையே ஆபாசமான பதிவுகளை ஒளிப்பரப்பியதாக பிரபல ஓடிடி தளமான ஆல்ட் பாலாஜி (ALT Balaji) உட்பட 7 ஆன்லைன் ஓடிடி தளங்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
  • இதனால், ஓடிடி தளங்கள் அனைத்தும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
  • இதன் மூலம் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள், அவற்றில் வெளியாகும் படங்கள், சீரியல்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகிய அனைத்தும் தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இனி இணைய தொடர்கள் சென்சார் செய்யப்படவோ, அதன் கருத்துருவாக்கம் தவறாக இருக்கும் பட்சத்தில் நீக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம் 

  • பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர், இளவரசர் கலிஃபா. தொடர்ந்து அவர்தான் பிரதமராக இருந்தார்.
  • எனவே, உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கலிஃபா பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், இன்று அவர் மரணமடைந்தார்.
  • உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலிஃபா புதன்கிழமை மரணமடைந்தார்.
  • அவரின் இறுதிச் சடங்குகள் இளவரசர் இல்லத்தில் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். 
  • 2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவர் மீது போராட்டக்காரர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
  • 1942 முதல் 1961 வரை ஆட்சி செய்த பஹ்ரைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவின் மகன்தான், இந்த கலீஃபா. தனது தந்தையிடமிருந்து ஆட்சி நிர்வாகத்தை இவர் கற்றுக்கொண்டார்.
  • சகோதரர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா 1961இல் பஹ்ரைன் ஆட்சியைப் பிடித்தார். இதனிடையே 1971 இல் பஹ்ரைன் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றபோது மன்னராக பணியாற்றினார்.
  • கலிஃபா பிரதமரான பிறகு, எண்ணெய் இருப்புக்கள் குறைந்து வருவதை கவனித்து, அதையும் தாண்டி பஹ்ரைன் வேகமாக முன்னேற சுற்றுலாத் துறையை மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்

  • உலகின் மிகவும் அரிதான பர்புள் - பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று ஸ்விட்சர்லாந்தில் 26.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 198 கோடி ரூபாய் ஆகும்.
  • பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள் தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும் அரிதான 14.8 கேரட் வைரக்கல் ஆகும். அல்ரோசா என்ற ரஷ்ய சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வைரக்கல்லிற்கு, ரஷ்ய - போலாந்து பாலே நடனக்கலைஞரான நிஜின்ஸ்கி என்று பெயரிடப்பட்டது.

பஹ்ரைனின் புதிய பிரதமராக ஹமீத் அல் கலீஃபா பதவி ஏற்பு

  • பஹ்ரைன் நாட்டின் பிரதமராக 50 ஆண்டு பதவி வகித்தவர் இளவரசா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபா (84). இவர் உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவா்.
  • இந்நிலையில், அமெரிக்காவில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதனால், இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா பஹ்ரைன் நாட்டின் பிரதமராக பதவியை ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5-வது தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் 'வாகீர்' கப்பல் படையில் முறைப்படி இணைக்கப்பட்டது

  • பிரான்ஸ் கப்பல் படை மற்றும் டிசிஎன்எஸ் நிறுவனத்துடன் இணைந்து தாக்குதல் திறன் படைத்த கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 'இந்திய கப்பல் படை புராஜெக்ட்-75' திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.
  • அதன்படி, 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவானது. தற்போது கல்வரி, கந்தேரி, கரன்ஜி, வேலா ஆகிய 4 நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில், 5-வது நீர்மூழ்கிக் கப்பல் வாகீர் முறைப்படி இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டது. மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வாகீர் நீர்மூழ்கிக் கப்பல் இணைப்பு விழா நேற்று நடைபெற்றது. 
  • பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், காணொலி காட்சி மூலம் கப்பலை தொடங்கி வைத்தார். தற்போது கோவாவில் உள்ள அமைச்சர் பாத், அங்கிருந்து காணொலி காட்சி மூலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
  • கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு தாக்குதல் திறன்கள் படைத்தவை. தற்போது கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ள 5-வது வாகீர் கப்பல், நீருக்குள் இருந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் உட்பட பல தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
  • நீரில் இருந்து நிலத்தில் உள்ள எதிரி இலக்கை தாக்குதல், பல கிலோ மீட்டர் தூரம் கண்காணித்தல், உளவு பார்த்தல் போன்ற பல வேலைகளை இந்த நீர்மூழ்கி செய்யும். இது கடலுக்கு அடியில் இயங்கும் போது ஓசை அவ்வளவாக வராது.இந்திய பெருங்கடல் பகுதியின் ஆழத்தில் வாழும் 'சேண்ட்பிஷ்' என்ற மீனின் பெயரில் 'வாகீர்' என்று இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
  • இதுபோன்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 1973-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ரஷ்யாவில் இருந்து வாங்கி இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அந்தக் கப்பல் கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

17வது ஆசியான் உச்சி மாநாடு

  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம், 'ஆசியான்' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
  • ஆசியான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
  • இந்தியா - ஆசியான் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 17-வது ஆசியான் உச்சி மாநாடு 2020ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 
  • இதில் பிரதமர் மோடி பேசியதாவது இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பானது, நமக்கு இடையேயான வரலாற்று, புவியியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எங்களுடைய எளிதான கிழக்கு கொள்கைகளை செயல்படுத்தும் முக்கிய அமைப்பாக ஆசியான் அமைப்பு உள்ளது.
  • உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் இந்த ஆண்டு இந்தியா -ஆசியான் மாநாடு காணொலி மூலம் நடத்தப்படுகிறது. எனவே அனைத்து நாட்டின் தலைவர்களும் ஒன்றாக நின்று இந்த ஆண்டு புகைப்படம் எடுக்க முடியாது.
  • ஒவ்வொரு துறையிலும் இந்தியா, ஆசியான் இடையே இணைப்பை அதிகப்படுத்த விரும்புகிறோம். காணொலி மூலம் மாநாடு நடைபெற்றாலும் நமக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு சலுகை தொகுப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. 
  • இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மதியம், டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: கொரோனா தாக்கத்தில் இருந்து நாம் மீண்டு வருகிறோம். 
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 4.89 லட்சமாக குறைந்து விட்டது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • ரோஜ்கர் திட்டத்தின் கீழ், பிஎப் அமைப்பில் பதிவு செய்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு எடுத்தால், 2 ஆண்டுகளுக்கு ஓய்வு நிதி பங்களிப்பை மத்திய அரசு மானியமாக வழங்கும். ஊழியர் செலுத்த வேண்டிய 12 சதவீதம், நிறுவனம் செலுத்தும் 12 சதவீதம் (மொத்தம் 24 சதவீதம்) தொகையை மத்திய அரசு செலுத்தும். 
  • இச்சலுகையை பெறுவதற்கு ஊழியர்களின் மாதச் சம்பளம் 15,000க்கு கீழ் இருக்க வேண்டும். கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதத்துக்குள் வேலை இழந்தவர்கள் அல்லது அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு வேலை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.
  • அவசர கால கடன் உத்தரவாத திட்டம், 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதோடு, கடன் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும். இதில் மூலதன தொகையை திரும்பிச் செலுத்துவதற்கு, ஓராண்டு காலத்துக்கு தவணை ஒத்திவைப்பு சலுகையும் உண்டு.
  • இந்த திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 29ம் தேதியின்படி, 50 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள், நிலுவையில் உள்ள கடனில் 20 சதவீதம் வரையிலான தொகைக்கு கூடுதல் கடன் பெற்றுக் கொள்ளலாம். 
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக தேவைக்காக வாங்கும் தனி நபர் கடன்கள் மற்றும் முத்ரா திட்டத்தில் கடன் வாங்குவோருக்கு இந்த திட்டத்தில் பலன் பெறுவார்கள்.
  • கட்டுமான மற்றும் உள் கட்டமைப்புக்கு, அரசு டெண்டர்களில் முன்வைப்புத் தொகை மற்றும் செயல் உத்தரவாத தொகையில் 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு 5 முதல் 10 சத.வீதமாக இருந்தது. டெண்டர்களுக்கு முன்வைப்புத்தொகை தேவையில்லை.
  • பொருளாதார மந்தநிலை காரணமாக வீடுகளின் விலை குறைந்து விட்டது. எனவே, குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இதற்கேற்ப வருமான வரி சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும்.
  • தேசிய முதலீடு மற்றும் உள் கட்டமைப்பு நிதி 1.10 லட்சம் கோடி. இதில் இதுவரை 2,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பங்கு முதலீடாக 6,000 கோடி மேற்கொள்ளும். எஞ்சியவை தனியார் முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும்.
  • விவசாயத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், உர மானியமாக 65,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது எதிர்வரும் அறுவடை சீசனில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும். மானிய விலையில் உரங்கள் சப்ளை அதிகரிக்கப்படுவதால், 14 கோடி விவசாயிகள் பலன் பெறுவார்கள்.
  • கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் மூலம் நடப்பு நதியாண்டில் 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது வேலை உறுதி திட்டம் மற்றும் கரீப் கல்யாண் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். 
  • ஊரக வேலை வாய்ப்பை பொறுத்தவரை பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் கரீப் கல்யான் ரோஜ்கார் திட்டத்துக்கு கூடுதலாக 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
  • மூலதனம் மற்றும் இதர தொழில்துறை ஊக்குவிப்பு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் 10,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொழில் துறை ஊக்குவிப்பு, உள் கட்டமைப்பு மேம்பாடு, பசுமை எரிசக்தி ஆகியனவும் அடங்கும். இந்திய மேம்பாடு மற்றும் பொருளாதார உதவி திட்டத்தின் கீழ், இந்திய அரசுக்கான கடன் வாங்கும் வரம்பை எக்சிம் வங்கி அதிகரித்துள்ளது. இதன்படி இந்த வங்கி 3,000 கோடி வழங்க உள்ளது. மொத்தமாக, நேற்று மட்டும் 2,65,080 கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • கொரோனாவுக்கு 900 கோடி நிர்மலா சீதாராமன் மேலும் சில துறைகளுக்கு அறிவித்துள்ள நிதி ஒதுக்கீடு விவரங்கள் வருமாறு:
  • ஊரக வேலை வாய்ப்பை அதிகரிக்க 10,000 கோடி.
  • அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு 18,000 கோடி.
  • கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு 900 கோடி.
  • தொழில்துறை உள் கட்டமைப்புகளுக்கு 10,200 கோடி.
  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு 1,45,980 கோடி.
  • உர மானியத்துக்கு 65,000 கோடி.

டெல்லி ஜே.என்.யூ.பல்கலைக்கழக வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் 

  • டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். 
  • ஜே.என்.யுவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த சுவாமிஜி சிலையை பார்க்கும் அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கும் என்று நம்புகிறேன்.
  • சுவாமி விவேகானந்தர் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மெச்சிகன் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது இந்த நூற்றாண்டு உங்களுடையது என்றாலும், அடுத்த நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார்.
  • இந்த வார்த்தையும், எதிர்காலபார்வையையும் உணர வேண்டியது நமது பொறுப்பு ஆகும். அவரது சிலை அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கிறது என்று நம்புகிறேன். 
  • இது விவேகானந்தர் வாழ்க்கையின் மிக உயர்ந்த செய்தி. ஒற்றுமை குறித்த பார்வையில் இது நாட்டிற்கு ஊக்கமளிக்கட்டும். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம், துவங்கப்பட்டுள்ளது

  • புதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்" என்ற பெயரில் நவம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்திருந்தார்.
  • அதன்படி, 12-11-2020 காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா", புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச் செயலாளரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன், பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.

'உத்கிருஷ்ட சேவா படக்' விருது

  • மத்திய படையான சிஎஸ்எப், சிஆர்பிஎப் போன்ற படை பிரிவினருக்கு மட்டுமே சிறந்த பணிக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 'உத்கிருஷ்ட சேவா படக்' என்ற விருது வழங்கப்படுகிறது.
  • முதன்மை முறையாக தமிழக காவல் துறையிலும் சிறந்த பணிக்கான இவ்விருது வழங்கவேண்டும் என, பிரதமரின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
  • இதன்படி, தமிழகத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் உட்படாமல் 18 மற்றும் 25 ஆண்டுகள் சிறந்த புலனாய்வு, பணியில் ஈடுபாடு, அர்ப்பணிபோடு பணியாற்றிய 2 காவல் கண்காணிப்பாளர், 20 டிஎஸ்பிகள், 40 காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என, 274 பேருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.
  • 18 ஆண்டு பணி நிறைவு செய்து விருதுப் பட்டியல் இடம் பெற்றவர்களுக்கு ' உத்கிருஷ்ட சேவா படக்' விருதும், 25 ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்ற காவல்துறையினருக்கு ' அதி- உத்கிருஷ்ட சேவா படக்' விருதும் என, இருவகையில் வழங்கப்படுகிறது.
  • மதுரை நகர் போக்குவரத்து உதவி ஆணையர் திருமலைக்குமார், நகர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், ஆள் கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமா மாலா, சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன், திண்டுக்கம் மாவட்ட உளவுப்பிரிவு (எஸ்பிசிஐடி) காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்டோரும் மத்திய அரசு விருது பட்டியல் இடம் பெற்றுள்ளனர்.
  • இவர்களில் தென் மாவட்ட அளவில் விருதுப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே டிஎஸ்பி திருமலைக்குமார் மட்டுமே. விருது பெற்றவர்களுக்கு தனித்தனி மத்திய அரசு கடிதம் அனுப்பி உறுதி செய்துள்ளது.
  • விரைவில் அவர்களுக்கு விருது வழங்கப்படும் என, எதிர்பார்க் கப்படுகிறது. மதுரை நகரில் விருது பெற்றவர்களை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவும், புறநகரில் விருதுக்கு தேர்வானவர்களை டிஐஜி ராஜேந்திரன், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரும் பாராட்டினர்.

தன்வந்திரி ஜெயந்தியான ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்

  • மத்திய ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்ட பின், கடந்த, 2016 முதல், ஆயுர்வேத தினம், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி ஜெயந்தியான ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது. 
  • இதையொட்டி, குஜராத்தின், ஜாம்நகரில், ஆயுர்வேதா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், ராஜஸ்தானின் ஜெய்பூரில், தேசிய ஆயுர்வேதா நிறுவனமும் துவக்கப்பட்டன. 
  • இதை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதில், ஜாம்நகரில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • ஜெய்பூரில் திறக்கப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை, பல்கலை மானியக்குழு வழங்கியது.இந்த துவக்க விழாவில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல், டெட்ராஸ் அதானோம் கெப்ரயேசஸ் பங்கேற்றார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  • பாரம்பரிய மருத்துவம் குறித்த கல்வி, ஆராய்ச்சி, விழிப்புணர்வு மற்றும் சான்றுகளை வலுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையத்தை, இந்தியாவில் நிறுவ, உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  • சுகாதாரமான, பாதுகாப்பான உலகத்தை உருவாக்க விரும்பும் நாடுகளுக்காக, 2014 -- 23ம் ஆண்டுகளுக்கான, பாரம்பரிய மருத்துவ செயல்திட்டத்தினை, உலக சுகாதார நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  • இதில், பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையம், எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
  • இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:எங்கள் நாட்டுக்கு மிகப் பெரிய பொறுப்பை அளித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல், டெட்ராஸ்சுக்கு மனமார்ந்த நன்றி. பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையத்தை, இங்கு அமைப்பதில், அனைத்து இந்தியர்களும் பெருமை அடைவர். 
  • உறுதிசர்வதேச மருந்தகமாக இந்தியா எப்படி உருவெடுத்ததோ, அதே போல, இந்த பாரம்பரிய மருத்துவ மையமும், ஆரோக்கியத்துக்கான சர்வதேச மையமாக நிச்சயம் உருவெடுக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஆயுர்வேத பொருட்களுக்கான தேவை, உலக அளவில் அதிகரித்துள்ளது. இதன் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு செப்டம்பரில், 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • மஞ்சள், இஞ்சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், அதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளன. ஆயுர்வேத மருத்துவம் குறித்து, உலகின் மிகச்சிறந்த மருத்துவ இதழ்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
  • கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மத்திய அரசு ஒருபுறம் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொரு பக்கம், ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சியில், சர்வதே ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.
  • கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஆயுர்வேத மருத்துவ பங்கு குறித்து, டில்லியில் உள்ள, அனைத்திந்திய ஆயுர்வேதா நிறுவனம் உட்பட, நாட்டின் 100க்கும் மேற்பட்ட இடங்களில், ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் QRSAM ஏவுகணை சோதனை வெற்றி

  • விமானி இல்லாத இலக்கு விமானம் ஒன்றை சரியாக தாக்கியதன் மூலம் முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (QRSAM) எட்டியுள்ளது.
  • ஒடிசா கடற்கரைக்கு அருகே ஐடிஆர் சந்திப்பூரிலிருந்து பிற்பகல் 3.50 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
  • ஏவுகணையின் வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

அயோத்தியில் படைக்கப்பட்ட கின்னஸ் சாதனை

  • .பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி .பி மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் விழா கோலம் பூண்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோவில் முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
  • அயோத்தியில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னிலையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 5,84,572 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

போலியோ அவசரத் தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் அளித்த உலக சுகாதார நிறுவனம்

  • கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் போலியோ வைரஸ் தடுப்பு அவசர தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • மனிதர்களின் கழிவுகள் மூலமாக பரவும் போலியோ வைரஸ் மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து கால் கைகளில் தசை வளர்ச்சியை பாதிக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே தற்போது போலியோ வைரஸ் உள்ளது.
  • பெரும்பாலான நாடுகளில் மூன்று வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படுவதால் இந்த வைரஸ் 99.5 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது.
  • மனிதர்களின் முயற்சியால் அழிக்கப்பட்ட வைரஸ் பட்டியலில் போலியோ வைரஸும் ஒன்று. 1988ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் போலியோ நோயாளிகள் இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெறும் 175 நோயாளிகளே போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
  • இவர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டு பலர் குணம் அடைந்தனர். போலியோ நோயாளிகளின் கழிவுகள் உணவு பொருட்களின்மீது பட்டு அதனை வேறு ஒருவர் சாப்பிட்டால் இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது.
  • போலியோ சோதனைக்கு பாதிக்கப்பட்டவரின் கழிவு சோதனைக்கு உள்ளாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பயோபார்மா பிடி மருந்து நிறுவனத்தின் போலியோ அவசர தடுப்பு மருந்து தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்து நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபார்முலா ஒன் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்

  • ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹாமில்டன் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • துருக்கி இஸ்தான்புலில் நடந்த போட்டியில் ஹாமில்டன் 1 மணி 42 நிமிடம் 19.313 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ரேசிங் பாயின்ட் வீரர் செர்ஜியோ பெரஸ் 2ஆவது இடமும், பெராரி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 3ஆவது இடமும் பிடித்தனர்.
  • 94 வது சாம்பியன் பட்டத்தை வென்ற ஹாமில்டன் 7 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆசிய - பசிபிக் நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம்

  • ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் மற்றும் எப்.டி.., எனப்படும் தாராள வர்த்தக நாடுகள் இணைந்து, தாராள வர்த்தகம் செய்வதற்காக, ஆர்.சி..பி., எனப்படும் மண்டல விரிவான பொருளாதார கூட்டணி என்ற அமைப்பை துவங்குவது குறித்து பேச்சு நடந்து வந்தது.
  • 'வீடியோ கான்பரன்ஸ்'உறுப்பு நாடுகள் இடையே, தாராள வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக, 2012ல் இருந்து, பேச்சு நடந்து வந்தது.
  • இந்த ஒப்பந்தத்தின் சில பிரிவுகளால், சீனாவில் இருந்து அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் இந்தியாவில் குவிக்கப்படும் அபாயம் இருந்தது.
  • மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இருந்து, வேளாண் மற்றும் பால் பொருட்கள் குவிக்கப்படும் அபாயமும் இருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் இருந்து, கடந்தாண்டில், இந்தியா வெளியேறியது. 
  • இந்நிலையில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 15 நாடுகள் தொடர்ந்து பேச்சு நடந்தின.வியட்நாம் தலைநகர் ஹானோயில், இறுதிகட்ட பேச்சு நடந்தது. 
  • இதில், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 10 நாடுகள் உட்பட, 15 ஆசிய - பசிபிக் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, கையெழுத்தானது. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் இந்த பேச்சு நடந்தது. இந்த ஒப்பந்தம், சீனாவுக்கு பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது.
  • ஆசியான் அமைப்பில் உள்ள, புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ல், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
  • மேலும், தாராள வர்த்தக நாடுகளான, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.

குழந்தைகள் நேய காவல் பிரிவு இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் தொடக்கம்

  • தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, காவல்துறை சார்பில், நாட்டிலேயே முதன்முறையாக, குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல்பிரிவு, திருச்சி சரகத்திற்கு உட்பட்ட, 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை விசாரிக்கவும், குற்றச் செயலில் ஈடுபடும் குழந்தைகளை, நல்வழிப்படுத்தும் நோக்கிலும், இளைஞர் நீதி சட்டம் 2015 உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.
  • குற்றச்செயலில் ஈடுபடும் குழந்தைகளை, காவல் நிலையத்திற்குள் அழைத்து வரக்கூடாது. சீருடையில் இருந்துகொண்டே, குழந்தைகளிடம் விசாரணை நடத்தக் கூடாது.
  • எக்காரணம் கொண்டும், குழந்தைகளை கைது செய்து, சிறையில் அடைக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை, கடைப்பிடிக்கும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல் நிலையத்திற்குள், புகார் அளிக்க வரும்போது, தகுந்த சூழலை உருவாக்கி தரும் வகையிலும், குழந்தைகள் நேய காவல் பிரிவு (Child friendly corner) உருவாக்கப்பட்டுள்ளது.
  • திருச்சி சரக டி..ஜி., ஆனி விஜயா தலைமையில், காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஐந்து மாவட்டங்களில், தலா இரண்டு காவல்நிலையம் வீதம், 10 குழந்தை நேய காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இங்கு வரும் குழந்தைகளிடம், அச்ச உணர்வை போக்க, புறத்தோற்றத்தை மாற்றும் வகையில், காவல் நிலையத்திற்குள் குறிப்பிட்ட இடத்தில், சுவர் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. 
  • குழந்தைகள் நேய காவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடங்கள் திருச்சி மாவட்டத்தில், திருவெறும்பூர் மற்றும் துவரங்குறிச்சி, கரூர் மாவட்டத்தில், வெங்கமேடு மற்றும் லாலாபேட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆவுடையார் கோவில் மற்றும் பொன்னமராவதி, பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகர் காவல் நிலையம் மற்றும் மங்கலமேடு, அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் மற்றும் கூவாகம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம்

"விளையாடு இந்தியா" khelo india திட்டத்தின் மூலம் 500 தனியார் அகாடமிகளுக்கு நிதி

  • கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், 500 தனியார் அகாடமிகளுக்கு 2020-21 நிதியாண்டு தொடங்கி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையிலான ஊக்குவிப்பு அமைப்பை முதன்முதலாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தனியார் அகாடமிகள் பயிற்சி அளிக்கும் வீரர்களின் தரமான சாதனை, அகாடமியில் உள்ள பயிற்சியாளர்களின் தரம், தரமான விளையாட்டு களம் மற்றும் துணை கட்டமைப்புகள், விளையாட்டு அறிவியல் மற்றும் பணியாளர்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த தனியார் அகாடமிகள் பல்வேறு பிரிவாக தரம் பிரிக்கப்படும். 
  • 2028 ஒலிம்பிக் போட்டிக்கு 14 முன்னுரிமை விளையாட்டுக்கள் அடையாளம் காணப்படும். இதில், திறன் மிக்க வீரர்களை கொண்ட அகாடமிகள் இந்த ஆதரவைப் பெறுவதற்கு தகுதியானவை.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel