ஃபார்முலா ஒன் ஷூமேக்கர் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்
- ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹாமில்டன் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
- துருக்கி இஸ்தான்புலில் நடந்த போட்டியில் ஹாமில்டன் 1 மணி 42 நிமிடம் 19.313 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ரேசிங் பாயின்ட் வீரர் செர்ஜியோ பெரஸ் 2ஆவது இடமும், பெராரி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 3ஆவது இடமும் பிடித்தனர்.
- 94 வது சாம்பியன் பட்டத்தை வென்ற ஹாமில்டன் , 7 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஆசிய - பசிபிக் நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம்
- ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் மற்றும் எப்.டி.ஏ., எனப்படும் தாராள வர்த்தக நாடுகள் இணைந்து, தாராள வர்த்தகம் செய்வதற்காக, ஆர்.சி.இ.பி., எனப்படும் மண்டல விரிவான பொருளாதார கூட்டணி என்ற அமைப்பை துவங்குவது குறித்து பேச்சு நடந்து வந்தது.
- 'வீடியோ கான்பரன்ஸ்'உறுப்பு நாடுகள் இடையே, தாராள வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக, 2012ல் இருந்து, பேச்சு நடந்து வந்தது.இந்த ஒப்பந்தத்தின் சில பிரிவுகளால், சீனாவில் இருந்து அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் இந்தியாவில் குவிக்கப்படும் அபாயம் இருந்தது.
- மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இருந்து, வேளாண் மற்றும் பால் பொருட்கள் குவிக்கப்படும் அபாயமும் இருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் இருந்து, கடந்தாண்டில், இந்தியா வெளியேறியது.
- இந்நிலையில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 15 நாடுகள் தொடர்ந்து பேச்சு நடந்தின.வியட்நாம் தலைநகர் ஹானோயில், இறுதிகட்ட பேச்சு நடந்தது.
- இதில், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 10 நாடுகள் உட்பட, 15 ஆசிய - பசிபிக் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, கையெழுத்தானது. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் இந்த பேச்சு நடந்தது.இந்த ஒப்பந்தம், சீனாவுக்கு பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது.
- கொரனா வைரஸ் பரவலால் பொருளாதார பாதிப்பை பெரும்பாலான நாடுகள் சந்தித்து வரும் நிலையில், தாராள வர்த்தகம் வாயிலாக, சீனா ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- ஆசியான் அமைப்பில் உள்ள, புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ல், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- மேலும், தாராள வர்த்தக நாடுகளான, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.
குழந்தைகள் நேய காவல் பிரிவு இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் தொடக்கம்
- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, காவல்துறை சார்பில், நாட்டிலேயே முதன்முறையாக, குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல்பிரிவு, திருச்சி சரகத்திற்கு உட்பட்ட, 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை விசாரிக்கவும், குற்றச் செயலில் ஈடுபடும் குழந்தைகளை, நல்வழிப்படுத்தும் நோக்கிலும், இளைஞர் நீதி சட்டம் 2015 உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.
- குற்றச்செயலில் ஈடுபடும் குழந்தைகளை, காவல் நிலையத்திற்குள் அழைத்து வரக்கூடாது. சீருடையில் இருந்துகொண்டே, குழந்தைகளிடம் விசாரணை நடத்தக் கூடாது.
- எக்காரணம் கொண்டும், குழந்தைகளை கைது செய்து, சிறையில் அடைக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை, கடைப்பிடிக்கும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல் நிலையத்திற்குள், புகார் அளிக்க வரும்போது, தகுந்த சூழலை உருவாக்கி தரும் வகையிலும், குழந்தைகள் நேய காவல் பிரிவு (Child friendly corner) உருவாக்கப்பட்டுள்ளது.
- திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா தலைமையில், காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஐந்து மாவட்டங்களில், தலா இரண்டு காவல்நிலையம் வீதம், 10 குழந்தை நேய காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
- இங்கு வரும் குழந்தைகளிடம், அச்ச உணர்வை போக்க, புறத்தோற்றத்தை மாற்றும் வகையில், காவல் நிலையத்திற்குள் குறிப்பிட்ட இடத்தில், சுவர் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
- குழந்தைகள் நேய காவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடங்கள் திருச்சி மாவட்டத்தில், திருவெறும்பூர் மற்றும் துவரங்குறிச்சி, கரூர் மாவட்டத்தில், வெங்கமேடு மற்றும் லாலாபேட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆவுடையார் கோவில் மற்றும் பொன்னமராவதி, பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகர் காவல் நிலையம் மற்றும் மங்கலமேடு, அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் மற்றும் கூவாகம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம்
"விளையாடு இந்தியா" khelo india திட்டத்தின் மூலம் 500 தனியார் அகாடமிகளுக்கு நிதி
- கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், 500 தனியார் அகாடமிகளுக்கு 2020-21 நிதியாண்டு தொடங்கி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையிலான ஊக்குவிப்பு அமைப்பை முதன்முதலாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- தனியார் அகாடமிகள் பயிற்சி அளிக்கும் வீரர்களின் தரமான சாதனை, அகாடமியில் உள்ள பயிற்சியாளர்களின் தரம், தரமான விளையாட்டு களம் மற்றும் துணை கட்டமைப்புகள், விளையாட்டு அறிவியல் மற்றும் பணியாளர்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த தனியார் அகாடமிகள் பல்வேறு பிரிவாக தரம் பிரிக்கப்படும்.
- 2028 ஒலிம்பிக் போட்டிக்கு 14 முன்னுரிமை விளையாட்டுக்கள் அடையாளம் காணப்படும். இதில், திறன் மிக்க வீரர்களை கொண்ட அகாடமிகள் இந்த ஆதரவைப் பெறுவதற்கு தகுதியானவை.