Type Here to Get Search Results !

TNPSC 14th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அயோத்தியில் படைக்கப்பட்ட கின்னஸ் சாதனை

  • உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி உ.பி மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் விழா கோலம் பூண்டது. 
  • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோவில் முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
  • அயோத்தியில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னிலையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 5,84,572 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

போலியோ அவசரத் தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் அளித்த உலக சுகாதார நிறுவனம்

  • கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் போலியோ வைரஸ் தடுப்பு அவசர தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • மனிதர்களின் கழிவுகள் மூலமாக பரவும் போலியோ வைரஸ் மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து கால் கைகளில் தசை வளர்ச்சியை பாதிக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே தற்போது போலியோ வைரஸ் உள்ளது.
  • பெரும்பாலான நாடுகளில் மூன்று வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படுவதால் இந்த வைரஸ் 99.5 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது.
  • மனிதர்களின் முயற்சியால் அழிக்கப்பட்ட வைரஸ் பட்டியலில் போலியோ வைரஸும் ஒன்று. 1988ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் போலியோ நோயாளிகள் இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெறும் 175 நோயாளிகளே போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
  • இவர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டு பலர் குணம் அடைந்தனர். போலியோ நோயாளிகளின் கழிவுகள் உணவு பொருட்களின்மீது பட்டு அதனை வேறு ஒருவர் சாப்பிட்டால் இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது.
  • போலியோ சோதனைக்கு பாதிக்கப்பட்டவரின் கழிவு சோதனைக்கு உள்ளாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பயோபார்மா பிடி மருந்து நிறுவனத்தின் போலியோ அவசர தடுப்பு மருந்து தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்து நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel