Type Here to Get Search Results !

TNPSC 28th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடக்கிவைத்தார் தமிழக முதல்வர்

  • சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
  • அதன் பின்னர், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப் படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
  • இக்காலக்கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள இயலாமல் வேறு மாற்றுத் தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது. 
  • இந்நிலையினை கருத்தில் கொண்டு, வறுமையான நிலையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் வகையில், தகுதிகளின் அடிப்படையில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 
  • இந்நிலையில், இதன்படி, இந்த திட்டத்தை முதல்வர் நேற்று 9 இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கி துவக்கி வைத்தார்.

அஞ்சலக தகவல் பரிமாற்றம் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்

  • அஞ்சல் துறை மூலமாக நடைபெறும் ஏற்றுமதி தொடர்பான சுங்க தகவல்களை, பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில், இந்திய தபால் துறையும், அமெரிக்க அஞ்சல் சேவையும் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, அனுப்பப்படும் பொருள் குறித்த தரவுகளை, முன்கூட்டியே மின்னணு தொழில்நுட்பம் மூலமாக இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று, உடனே தெரியப்படுத்தி விட முடியும். இதன் காரணமாக, சுங்க அனுமதியை முன்கூட்டியே பெறுவது எளிதாகிவிடும். 
  • இது, தபால் துறை சேவையை மேம்படுத்தும் விதமாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்கா தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் நாடாக இருக்கிறது. 
  • கிட்டத்தட்ட, 17 சதவீதம் ஆகும். இது, அஞ்சல் துறை மூலமான ஏற்றுமதியிலும்பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டில், 'இ.எம்.எஸ்.,' எனும், 'எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ்' மூலமாக அனுப்பப்பட்டவற்றில், 20 சதவீத மும், கடிதங்கள், சிறிய பாக்கெட்டுகள் ஆகியவற்றின் மூலமாக அனுப்பப்பட்டவற்றில், 30 சதவீதமும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டவை ஆகும்.
  • இப்போதைய ஒப்பந்தத்தினால், அஞ்சல் வழி மூலமான, சிறிய மற்றும் பெரிய ஏற்றுமதியாளர்கள் மிக எளிதாக ஏற்றுமதியை மேற்கொள்ள முடியும்.

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்: ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்

  • கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தடுப்பூசி தயாரிப்பதில் சீனா, இந்தியா, கனடா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
  • கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனும் கோரிக்கையும் ஒருபக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. 
  • இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க பொதுநிதியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.
  • ஜப்பானின் பிரதமர் யோஹிஹைட் சுகா 2021ஆம் ஆண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
  • ஜப்பான் தற்போது அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம்.கடோச் நியமனம்

  • கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனையை அமைப்பது என்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உருவானதால் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது.
  • கடைசியாக மத்திய சுகாதாரத்துறை குழு பரிந்துரைப்படி 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க இடம் தேர்வானது.
  • ரூ.1,264 கோடியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதிகளுடன் அமையும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி மதுரைக்கு நேரடியாக வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார்.
  • ஆனால், தற்போது வரை இந்த மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மருத்துவமனை கட்டுவதற்கு நிதி வழங்குவதாக உறுதியளித்த ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் (JICA- Japan International Cooperation Agency) தற்போது வரை கடன் வழங்கவில்லை.
  • அதனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் மட்டுமே தோப்பூரில் நடந்துள்ளது.
  • அதேநேரத்தில் மதுரையுடன் அறிவித்த நாட்டின் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கி அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி நடக்கிறது.
  • இந்நிலையில் மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் என்பவரை நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர், தற்போது ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார்.
  • இவருடன் 14 பேர் கொண்ட உறுப்பினர்களையும் நியமித்து, அந்த உத்தரவை அரசிதழில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
  • இந்த உறுப்பினர்கள் குழுவில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயய்யன், மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர், இயக்குனர், கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் காமேஷ்வரர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பங்கஜ் ராகவ், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் வனஜாக்‌ஷம்மா, ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லாவண்யா, சென்னை கே.எம்.சி.மருத்துவ கல்லூரியின் தலைமை பேராசிரியர் டாக்டர் சண்முகம் சுப்பையா உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel