- அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் மற்றும் ெதாண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனைகளில் பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- இதில் தமிழகத்தில் நகர்புறங்களில் உள்ளவர்களில் 54 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கு செல்வது தெரியவந்துள்ளது.
- அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் கிராமபுறங்களில் உள்ளவர்களில் 56.9 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளிலும், 1.2 சதவீதம் பேர் தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவமனைகளிலும், 41.9 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
- நகர்புறங்களில் 54.9 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 42.2 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளிலும், 2.9 சதவீதம் பேர் தன்னார்வ தொண்டு நிறுவன மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர் கிராமபுறங்களில் 433 மட்டுமே செலவு செய்கிறார். நகர்புறங்களில் இது 433 ஆக உள்ளது.
- ஆனால் நகர்புறங்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர் 41,566 ரூபாய் செலவு செய்கிறார். கிராமபுறங்களில் இந்த தொகை 28,412 ஆக உள்ளது.
- இதன்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட தமிழகத்தில்தான் குறைவான தொகை செலவாகிறது.
இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான புதிய புள்ளி விவரம் / GENERAL HEALTH SURVEY ON INDIA 2021
October 30, 2020
0
Tags