Type Here to Get Search Results !

TNPSC 16th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட டாடாவுக்கு அனுமதி

  • மத்திய அரசின் பொதுப்பணித் துறை இந்த வளாகம் கட்டுவதற்கு ரூ. 940 கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவாக டெண்டர் கேட்பு மனு தாக்கல் செய்த டாடா நிறுவனத்துக்கு நாடாளுமன்ற வளாகம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டரில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றது. மொத்தம் ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைய உள்ளது.
  • புதிய கட்டிடத்தை டாடா புராஜெக்ட் நிறுவனம் கட்ட உள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தனது டெண்டர் கேட்பு மனுவில் ரூ. 865 கோடி குறிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவான தொகை கோரியிருந்ததால் டாடா புராஜெக்ட் நிறுவனத்துக்கு இத்திட்டப் பணியை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு மசோதா நிறைவேற்றம்

  • அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்த அண்ணா பல்கலை. சட்டத்தில் 2 திருத்தங்கள் செய்வதற்கான சட்ட முன்வடிவுகளை உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிமுகம் செய்தார்.
  • அண்ணா பல்கலை.யின் 13 உறுப்பு கல்லூரிகள், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எம்ஐடி) ஆகியவற்றை உள்ளடக்கி, ஆராய்ச்சி மீது கவனம் செலுத்தும் வகையில் அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், தமிழகத்தில் உள்ள இதர பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை கண்காணிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் என்றும் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. 

வசிப்பிடப் பகுதியிலேயே திருமணப் பதிவு மசோதா நிறைவேறியது

  • வசிப்பிடப் பகுதியிலேயே திருமணங்களைப் பதிவு செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதன்கிழமை தாக்கல் செய்தார். 
  • திருமணங்கள் எந்தப் பகுதியில் நடைபெறுகிறதோ, அந்தப் பகுதியின் பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். 
  • இந்த பதிவு முறையை எளிதாக்க, மணமகன் அல்லது மணமகள் தங்குமிடத்திலுள்ள பதிவாளரின் அலுவலகத்திலும் திருமணத்தை பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.
  • கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக சபையை கலைத்து விட்டு, அதனை நிர்வகிக்க உடனடியாக செயல் ஆட்சியரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன்மூலம், கலைக்கப்படும் நிர்வாக சபையினர் கணக்கு விவரங்களை அழிப்பது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கலாம் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெட்ரோல் மீதான வரி விதிப்பு, மின்னணு முறையில் நீதிமன்றக் கட்டணங்களைச் செலுத்துவது போன்றவை அவசர சட்டங்களாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டன. இப்போது பேரவை கூடியதால், அந்த அவசர சட்டங்களுக்கு அவையின் ஒப்புதலைப் பெறும் வகையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவையும் குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டுறவு வங்கி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

  • ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
  • ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டம் ஜூன் 26ல் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த மசோதா கூட்டுறவு சங்க பதிவாளர்களின் அதிகாரத்தை பறிக்காமல், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதற்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
2020-21ம் ஆண்டிற்கான துணை பட்ஜெட்டில் 12,845 கோடி ஒதுக்கீடு கொரோனா தடுப்பு பணிக்கு மட்டும் 9,027 கோடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்
  • துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2021ம் ஆண்டிற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்படி 12,845.20 கோடி நிதி ஒதுக்க பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் கொரோனா தடுப்பு பணிக்காக மட்டும் 9,027.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக துணை மானிய கோரிக்கையில் மொத்தம் 9,027.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • புது பணிகள்' மற்றும் 'புது துணை பணிகள்' உள்ளிட்ட எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை ஈடுசெய்வதும் துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும்.
  • கொரோனா நோய் தொற்று காரணமாக பொது விநியோக கடைகளில் இலவச பொருட்கள் மற்றும் கூடுதல் பொருட்கள் வழங்கப்பட்டதற்காக 3,359.12 கோடி கூடுதல் தொகை துணை பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • கொரோனா நோய் தொற்று நிவாரண உதவியாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 மற்றும் பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும் பண உதவி என 4,218.20 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
  • 1,109.42 கோடி கூடுதல் ஒதுக்கீடாக, கொரோனா மருந்துகள், ஆர்டிபிசிஆர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்டவைகள் சுகாதார துறைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாடுகளை பின்பற்றுவதற்காக கூடுதல் பங்கு மூலதன உதவியாக அரசு 437 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அரசு 987.85 கோடி மானியமாக அனுமதித்துள்ளது.
  • மின் உற்பத்திக்கான நிலுவை தொகைகளை வழிவகை முன்பணமாக அரசு 170.28 கோடி அனுமதித்துள்ளது.
  • வேளாண் துறைக்கு 107.40 கோடி அரசு அனுமதித்துள்ளது. கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க 82.60 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
  • திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்காகவும், பல்வேறு இடங்களில் 8 புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 6 வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டுவதற்காக அரசு 645.26 கோடி அனுமதித்துள்ளது.
  • அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்காகவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காகவும் 580.87 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் மூலதன மானியமாக 100 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2020-2021ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா 2020 மசோதா நிறைவேற்றம்
  • ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா 2020, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதன் மூலம், குஜராத் ஜாம் நகரில் நவீன ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(ITRA) அமையவும், அதற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (INI) அந்தஸ்து கிடைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
  • குஜராத் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது இருக்கும் ஆயுர்வேத நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி மையம் (ITRA)நிறுவப்படவுள்ளது. இது மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தொகுப்பாக இருக்கும்.
  • ஆயுர்வேத முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ குலாப் குன்வெர்பா ஆயுர்வேத மகாவித்யாலயா, ஆயுர்வேத மருந்து அறிவியல் நிறுவனம், யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான மகரிஷி பதஞ்சலி நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும். கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனங்கள், ஆயுர்வேத நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த மசோதா, ஆயுர்வேதம் மற்றும் மருந்தியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை கல்வியில் கற்பித்தல் முறைகளை உருவாக்க, இந்த நிறுவனத்திற்கு தன்னாட்சி அதிகாரித்தை வழங்கும். பல்வேறு ஆயுர்வேத நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பால், ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி மையம், ஆயுர்வேத துறையில் கலங்கரை விளக்கமாகத் திகழும். ஆயுர்வேதத்தின் அனைத்து துறைகளிலும், இந்த மையம், உயர்தரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆயுஷ் துறையில் INI அந்தஸ்துடன் இருக்கும் முதல் நிறுவனமாக ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் இருக்கும். கல்வி கற்பிக்கும் முறையில் இந்த நிறுவனம் சுதந்திரமான அமைப்பாகவும், புதுமையாகவும் இருக்கும். சுகாதாரத் தீர்வுகளுக்கு, பாரம்பரிய மருத்துவ முறைகளை, உலகம் நாடும் வேளையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத கல்விக்கு ஒரு புதிய தோற்றத்தை ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தும்.
ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் - 5 தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்
  • கொரோனா வைரசுக்கு எதிராக, ஸ்புட்னிக் - 5 என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக, ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த, ஆர்.டி.ஐ.எப்., எனப்படும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி நிறுவனம் இதை தயாரிக்க உள்ளது. 
  • இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்து, தயாரிப்பது தொடர்பாக, மத்திய அரசுடன், ரஷ்ய அரசு பேச்சு நடத்தி வந்தது.
  • இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய மற்றும் தயாரிக்க, பிரேசில், இந்தியா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
  • கொரோனா வைரசுக்கு எதிராக, ரஷ்யா உருவாக்கியுள்ள, 'ஸ்புட்னிக் - 5' தடுப்பூசியை பரிசோதனை செய்ய மற்றும் தயாரிக்க, இந்தியாவைச் சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ் லேபாரடீஸ்' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel