- புற்றீசல் போல் பெருகும் ஐ.வி.எஃப். மையங்களை கட்டுப்படுத்த இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 - மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
- கருத்தரிக்கும் பெண்கள் நலனுக்கான இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 (Assisted Reproductive Technology Regulation Bill 2020)விற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை புதனன்று ஒப்புதல் வழங்கியது. நாடு முழுக்க பெருகி வரும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு முறை(In-Vitro Fertilization )மையங்களை ஒழுங்கு படுத்தவும் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியாகவும் மத்திய இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா 2020: நடப்பு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண்களின் மருத்துவ ரீதியிலான கர்ப்ப கால திருத்த மசோதா 2020 வும் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்த மசோதாவிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், சட்ட அமலாக்கத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடும். இதனையடுத்து, இதற்கான தேசிய வாரியம் அமைக்கப்படும்.
- இதன் மூலம் சிகிச்சையகங்களின் உள்கட்டமைப்புக்கான குறைந்தபட்ச தரம், பரிசோதனைக்கூடம், மருத்துவ உபகரணங்கள், பணிபுரியும் மருத்துவ நிபுணர்களின் தகுதிகள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை இந்த தேசிய வாரியம் வகுக்கும்.
- மத்திய அரசின் அரசிதழில்(கேஜட்) வெளியான 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாநில வாரியங்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கும்.
- தேசிய வாரியம் அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாநிலங்களில் செயல்படும் ஐ.வி.எஃப். (In-Vitro Fertilization) மையங்கள், மற்ற சிகிச்சையகங்கள் ஆகியவற்றைகண்காணிக்கும் பொறுப்பு மாநில வாரியங்களுக்கு உண்டு. இந்த மையங்களுக்கான தேசிய பதிவேடு தரவுகள் பராமரித்தல் ஆகியவற்றை தேசிய வாரியமும் மாநில வாரியங்களும் மேற்கொள்ளும்.
- நாட்டின் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப சேவைகளை ஒழுங்குபடுத்துவதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம். இதனால் மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பான நிலையும் ஏற்படும். பாலின தேர்வு, மனித கருமுட்டைகள், விந்தணுக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத முகமைகள், நிறுவனங்களை ஊக்குவிப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்த மசோதா வகை செய்யப்பட்டுள்ளது.
- இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்திற்கு அனுமதி: 2024-25-ஆம் ஆண்டு வரையிலான தூய்மை இந்தியா (ஊரக) இயக்கத்தின் 2-ஆம் கட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்த இயக்கம் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அது நீடிப்பதற்கும் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கும்.
- எவர் ஒருவரும் விடுபடாமல், அனைவரும் கழிப்பறையைப் பயன்படுத்தி திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாததோடு மற்ற திட்டங்களான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தோடு, நிலத்தடி நீர் நிர்வாகமும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவையும் இத்தோடு இணைக்கப்படுகிறது.
- முந்தைய தூய்மை இந்தியா இயக்கம் போலவே செயல்படுத்தப்படவுள்ள 2-ஆம் கட்ட இயக்கத்துக்கு 2020-21 முதல் 2024-25 வரை மத்திய – மாநில அரசுகளின் பங்குகளையும் சேர்த்து மொத்தம் ரூ.52,497 கோடி நிதி ஒதுக்க மதிப்பிடப்பட்டுள்ளது.
Assisted Reproductive Technology (Regulation) Bill, 2020 இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020
September 17, 2020
0
Tags