Type Here to Get Search Results !

29th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 11 லட்சம் வேலைவாய்ப்புகள்: உ.பி. அரசு ஒப்பந்தம்
  • உத்தர பிரதேசத்தில் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிய 11 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முக்கிய தொழில்துறை அமைப்புகளுடன் மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
  • உத்தர பிரதேசத்தில் இந்திய தொழில் வா்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் 3 லட்சம் பேருக்கும், இந்திய தொழிற்சாலைகள் சங்கத்தின் சாா்பில் 3 லட்சம் பேருக்கும், தேசிய ரியல் எஸ்டேட் வளா்ச்சி கவுன்சில் (நாரெட்கோ) சாா்பில் 2.5 லட்சம் பேருக்கும், லகு உத்யோக் பாரதி அமைப்பின் மூலம் 2.5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
  • இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் முதல்வா் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
  • அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல லட்சம் பேரை கொன்று இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையமும், சீனாவும் சேர்ந்து கொண்டு இதில் நாடகம் ஆகியுள்ளது. 
  • வுஹன் வைரஸ் பரவல் குறித்து சீனா மற்றும் உலக சுகாதர மையம் இரண்டும் முக்கிய விஷயங்களை மறைத்துவிட்டது. சீனா தவறு சீனா தவறு உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் பல கோடிகளை அள்ளிக்கொடுத்தோம். ஆனால் உலக சுகாதார மையம் சீனாவின் கைப்பாவை போல செயல்பட்டது.
  • நாங்கள் 450 மில்லியன் டாலர் செலுத்தினோம். ஆனால் சீனா வெறும் 40 மில்லியன் டாலர் செலுத்தி உலக சுகாதார மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது. நாங்கள் வைத்த கோரிக்கை எதையும் சீனாவோ, உலக சுகாதார மையமோ கேட்கவில்லை. 
  • தொடர் ஆதரவு தொடர் ஆதரவு நான் சீனாவில் இருந்து வரும் விமானங்களை தடை செய்ததன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. 
  • ஆனால் இதை கூட தொடக்கத்தில் உலக சுகாதார மையம் எதிர்த்தது. தொடக்க காலத்தில் இருந்து இப்போது வரை உலக சுகாதார மையம் இதில் சரியாக செயல்படவில்லை. சீனாவை தொடர்ந்து உலக சுகாதார மையம் ஆதரித்து வந்தது.
  • மறைப்பு மறைப்பு கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை உலக சுகாதார மையம் மறைத்துவிட்டது. இதன் மூலம் இதன் பாதிப்பை உலக சுகாதார மையம் மறைத்தது. உலக நாடுகளுக்கு கொரோனா பரவுவதை சீனாவும், உலக சுகாதார மையமும் நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். 
  • ஆனால் அதை உலக சுகாதார மையம் செய்யவில்லை. உறவை துண்டிக்கிறோம் உறவை துண்டிக்கிறோம் இதனால் நாங்கள் உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக நாங்கள் உறவை துண்டிக்கிறோம். இதனால் அவர்களுக்கு இனி நாங்கள் நிதி வழங்க மாட்டோம்.
  •  உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதியை நாங்கள் அப்படியே வேறு நாடுகளில், அமைக்களில் சுகாதார தேவைக்காக பயன்படுத்த போகிறோம்., என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 331 கோடியில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்
  • தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 331 கோடி செலவில் கூட்டு குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், புதிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். 
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
  • மேலும், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பட்லூர் மற்றும் 30 குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிப்பட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டம், திண்டுக்கல் மாவட்டம், 
  • வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டு குடிநீர் திட்டம், ஈரோடு மாவட்டம், மைலம்பாடி ஊராட்சியில் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம்,அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், அரியலூர் மாவட்டம், விருத்தாசலம் சாலையில் நகராட்சி அலுவலக கட்டிடம்.
  • தஞ்சாவூர் மாவட்டம், காந்திஜி சாலையில் மாநகராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சிவகங்கை மாவட்டம், கணேசபுரத்தில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சென்னை கொட்டிவாக்கம், 
  • பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மல்லிகாபுரம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் நகர்ப்புற சமூகநல மருத்துவமனைகள்,
  • சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடம், மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் சந்தை கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் சந்தை கட்டிடம், 
  • திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடம், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சந்தை கட்டிடம் என மொத்தம் 330 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபா - தீபக் நேரடி வாரிசுகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு
  • சென்னை உயா் நீதிமன்றத்தில் சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் தாக்கல் செய்திருந்த மனுவில், 'மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. ஹைதராபாத் திரட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
  • இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை எதிா்மனுதாரா்களாகச் சோத்து உத்தரவிட்டது. 
  • இதனையடுத்து ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் சாா்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த மே 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் இரண்டாம் நிலை வாரிசுகள் என தீா்ப்பளித்திருந்தனா்.
  • இந்த நிலையில் இந்து வாரிசு முறை சட்டத்தின்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்கக் கோரியும், தங்களை இரண்டாம் நிலை வாரிசுகள் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் திருத்தம் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் தீபா, தீபக் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
  • இந்த மனுக்களை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் கடந்த மே 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தீபா, தீபக் ஆகியோா் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் எனவும், ஜெயலலிதா தனது தாயாரிடம் இருந்து பெற்ற பரம்பரைச் சொத்துகள் மற்றும் அவா் வாங்கிய சொத்துகளுக்கு தீபாவும் தீபக்கும் தான் வாரிசுகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
  • இந்து வாரிசு முறை சட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ளாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. எனவே தீபாவையும், தீபக்கையும் அவரது வாரிசுகளாக அறிவிக்கிறோம். 
  • மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாம் நிலை வாரிசுகள் என்பதை நீக்கி, அதற்குப் பதிலாக தீபா, தீபக் ஆகியோா் நேரடி வாரிசுகள் என தீா்ப்பில் திருத்தம் செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.
பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்
  • பிரதமர் அலுவலகத்திலும் இதேபோல் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராகத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கு நெருக்கமான பணியாற்றும் குழுவில் இவர் இடம்பெற்று இருக்கிறார். 2001ல் இருந்து இவர் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். பீகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவர் தற்போது பிரதமர் அலுவலக பணியில் சேர்ந்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel