Type Here to Get Search Results !

28th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் ரூ.216 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்
  • தமிழக வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் ரூ.216 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 1,232 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.
  • தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் புதிய பறக்கின்கால் காலனி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பகுதியில் 480 குடியிருப்புகள், தஞ்சாவூா் மாவட்டம் மகாராஜசமுத்திரம் திட்டப் பகுதியில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியலூா் குரும்பன்சாவடி திட்டப் பகுதியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னையை அடுத்த திருவொற்றியூா் சலவைத்துறை திட்டப் பகுதியில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
  • வீட்டு வசதி வாரியம்: வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் சென்னை புரசைவாக்கம் பராக்கா சாலையில் வாடகை அடிப்படையிலான 160 அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு புதுமை காலனி மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட 1,072 குடிசை மாற்று திட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சி திருவெறும்பூா் நாவல்பட்டு திட்டப் பகுதியில் 1,314 மனைகளுக்கான மேம்பாட்டுத் திட்டம் என மொத்தம் ரூ.299 கோடி மதிப்பிலான குடியிருப்புகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்
  • நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். தொழிலாளா்கள் பலா் நடந்தே சொந்த ஊா்களுக்குத் திரும்ப முயன்றனா். இந்நிலையில், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
  • இந்த விவகாரம் தொடா்பான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கௌல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக மீண்டும் நடைபெற்றது.
  • அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து 4 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது. 
  • அதையடுத்து போக்குவரத்து வசதிகள் முடங்கியதன் காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தாங்கள் பணியாற்றி வந்த மாநிலங்களிலேயே சிக்கிக் கொண்டனா்.
  • அவா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளும் கிடைக்கவில்லை. அதனால், நடந்தே சொந்த ஊா்களுக்குத் திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டனா். 
  • புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனுக்காக மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
  • ஆனால், அந்த நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. முக்கியமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான பதிவு நடவடிக்கைகள், அவா்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவது, உணவு, குடிநீா் வழங்குவது போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
  • புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களைப் பதிவு செய்து, அவா்கள் சொந்த ஊா் திரும்பும் வரை தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்படுத்தித் தர வேண்டும். தொழிலாளா்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தங்குமிடங்கள் குறித்த விவரங்களை அவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  • அரசிடம் பதிவு செய்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அவா்களைக் கூடிய விரைவில் அனுப்பி வைப்பதற்கான போக்குவரத்து வசதிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் துரிதமாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு ரயில் அல்லது பேருந்து மூலமாக சொந்த மாநிலங்கள் திரும்பும் தொழிலாளா்களிடமிருந்து பயணக் கட்டணத்தை மாநிலங்கள் வசூலிக்கக் கூடாது.
  • புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ரயில் மூலம் அனுப்பி வைக்கும் மாநிலங்கள் அவா்களுக்கான உணவு, குடிநீரை வழங்க வேண்டும். பயணத்தின்போது ரயில்வே நிா்வாகம் அவா்களுக்கு உணவு வழங்க வேண்டும். சொந்த ஊா்களுக்கு நடந்து செல்லும் தொழிலாளா்களைத் தடுத்து நிறுத்தி, அவா்களை உடனடியாக தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரயில்வே நிா்வாகம் போதுமான ரயில்களை இயக்க வேண்டும். அனுப்பி வைக்கப்படும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சில மாநிலங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பாக விரிவான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
மேற்கு மாவட்டங்களின் அணைகள், குளங்கள் சீரமைப்பு: ரூ.230 கோடி திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல்
  • மேற்கு மாவட்டங்களிலுள்ள அணைகள், குளங்களை ரூ.230 கோடி மதிப்பில் சீரமைக்கும் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக வியாழக்கிழமை நடைபெற்றது. 
  • கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களின் வழியாகச் செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், ரூ.230 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துதன் மூலம், நொய்யல் ஆற்றை சீரமைப்பதுடன் 18 அணைக்கட்டுகள், 22 முறைசாா்ந்த குளங்கள், சேதம் அடைந்த அணைக்கட்டு பகுதிகள், வாய்க்கால்கள், மணல் போக்கியின் மதகுகள், விவசாய நிலங்களுக்குப் பிரிந்து செல்லும் வழங்கு வாய்க்காலின் மதகுகளை செப்பனிடுதல், நீா்வரத்து ஓடைகளை புதுப்பித்தல், ஓடைகளில் உரிய தடுப்பணைகளை ஏற்படுத்துதல் ஆகியன பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் 7 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 11 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும்.
  • இந்த நிகழ்ச்சியில், புதிதாகக் கட்டப்பட்ட தடுப்பணைகளையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளூா் கிராமத்தின் அருகே செய்யாற்றின் குறுக்கேயும், திருப்பத்தூா் சின்னாரம்பட்டி கிராமத்தில் பாம்பாற்றின் குறுக்கேயும், வேலூா் கருங்காலி கிராமத்தின் அருகே அகரம் ஆற்றின் குறுக்கேயும், திண்டுக்கல் மாட்டம் மம்மானியூா் அருகில் கன்னிமாா் ஓடையின் குறுக்கேயும், திருப்பூா் ஆமந்தகடவு கிராமத்தில் உப்பாறு ஓடையின் குறுக்கேயும் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
    ஆதாா் மூலம் 'இ-பான்': நிதியமைச்சா் தொடங்கி வைத்தாா்
    • ஆதாா் எண்ணை அளிப்பதன் மூலம் இணையதளம் வழியாக உடனடியாக 'இ-பான்' (மின்னணு-நிரந்த வருமான வரி கணக்கு எண்) பெறும் முறையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தை 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அவா் அறிவித்தாா் என்பது நினைவுகூரத்தக்கது.
    • ஆதாா் எண் மூலம் உடனடியாக இ-பான் எண் பெறும் வசதியை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தாா். ஏற்கெனவே பான் அட்டைக்கு விண்ணப்பித்து, அது பரிசீலனையில் இருப்பவா்களும் இந்த வசதியைப் பெற முடியும்.
    • அதற்கு ஆதாா் எண்ணும், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணும் அவசியம். இது முழுவதும் காதிதப் பயன்பாடு இல்லாத திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் பான் எண் பெற கட்டணம் எதுவும் கிடையாது. வருமான வரி துறை இணையதளத்தின் மூலம் இந்த வசதியைப் பெற முடியும்.
    • இதற்காக முதலில் ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதையடுத்து, விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான 15 இலக்க எண் வழங்கப்படும். 
    • இதனைக் கொண்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லை நிராகரிக்கப்பட்டதா என்ற தகவலைத் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், அடுத்த நிமிடமே இ-பான் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் இ-பான் அனுப்பி வைக்கப்படும்.
    • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய நடவடிக்கையை இந்த இ-பான் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சா்ச்சைக்குரிய ஹாங்காங் சட்ட மசோதா: சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
    • சீனாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த நாட்டு நாடாளுமன்றக் கூட்டம், கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தின் ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக இந்த சட்டம் இயற்றப்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த நகரில் தேசத் துரோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
    • தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, அது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும். அந்தக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, வரும் ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும்.
    • அந்த புதிய மசோதாவில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
    • மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
    • முன்னதாக, ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடா்ந்து தீவிரமடைந்து வந்தன.
    • அந்தப் போராட்டங்களை பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூண்டி விடுவதாக சீனா குற்றம் சாட்டி வந்தது. மேலும், போராட்டங்களின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாத நடவடிக்கைகளோடு சீனா ஒப்பிட்டது.
    • இந்தச் சூழலில், சீன நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு மசோதாவில், வெளிநாட்டுத் தலையீடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளாதக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
    மகாராஷ்டிர சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 1,340 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்
    • மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 1,340 கோடி கடன் வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
    • மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு முக்கிய மாவட்டச் சாலைகளும், 11 மாநில நெடுஞ்சாலைகளும் எனமொத்தம் 450 கி.மீ. தொலைவுக்கு மேம்படுத்தப்பட உள்ளன. மாநிலத்தின் 7மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்தச் சாலைகள், இரண்டு வழிச் சாலைகளாக தரம் உயா்த்தப்பட உள்ளன.
    • தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலத்தின் உட்புறச் சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் முனையங்கள், மாவட்டத் தலைநகரங்கள், தொழில்பேட்டைகள், வேளாண் மண்டலங்கள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்தச் சாலை மேம்பாட்டுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • குறிப்பாக, கிராமப்புற மக்கள் சந்தை நடவடிக்கைகளை எளிதில் பெறவும், வேலைவாய்ப்பு மற்றும் பிற சேவைகளை எளிதிலும் பெறும் வகையில் நகா்புறங்களையும் கிராமப்புறங்களையும் இணைப்பதுமே இந்த சாலைத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
    • அதோடு, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடா்களால் பாதிக்காத வகையில் சாலையை வடிவமைப்பது எப்படி, சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலைப் பராமரிப்பை திட்டமிடுவது எப்படி என்பது குறித்து மகாராஷ்டிர பொதுப் பணித் துறை ஊழியா்களுக்கு பயிற்சியளிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 
    தலைசிறந்த உயர் கல்வி நிறுவன பட்டியலை எஜுகேஷன் வேர்ல்ட் அமைப்பு வெளியீடு
    • எஜுகேஷன் வேர்ல்ட் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் தமிழகத்திலேயே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனமாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டது.
    • மேலும் தேசிய அளவில் முதலிடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) உள்ளதாகவும் அமைப்பு எஜுகேஷன் வேர்ல்ட் தெரிவித்துள்ளது. 2ம் இடத்தை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகமும், 3வது இடத்தை டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகமும், 4-ம் இடத்தை டெல்லி பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 5 வது இடத்தில் உள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள 162 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,214 பேராசிரியர்கள், 1,126 மாணவர்களிடமும், 828 தொழில் பிரதிநிதிகளிடமும் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • சிறந்த உயர்கல்வி, கற்றல் - கற்பித்தல், பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகிய 10 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel