Type Here to Get Search Results !

27th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF TNPSCSHOUTERS


ரூ.15 ஆயிரம் கோடியில் 17 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்
  • தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் 17 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், 47 ஆயிரத்து 150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. 
  • காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் தொழில்பூங்காவில் ரூ.2,277 கோடி மதிப்பில் சுமாா் 400 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் டெய்ம்லா் இந்தியா வணிக ரீதியிலான வாகன உற்பத்தி விரிவாக்கத் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா தொலைத் தொடா்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.1,300 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செல்லிடப்பேசி உதிரிப் பாகங்கள் தயாரிப்பு விரிவாக்கத் திட்டம், ஒரகடம் சிப்காட் தொழில்பூங்காவில் ரூ.900 கோடியில் சுமாா் 600 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 'செமி கண்டக்டா் சிப்ஸ் ' உற்பத்தித் திட்டம் ஆகியவற்றுக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
  • மேலும், ரூ.350 கோடியில் சுமாா் 25 ஆயிரம் பேருக்கு தைவான் நாட்டைச் சோந்த ஜூங் ஜே நிறுவனம், அஸ்டான் காலணி உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மப்பேடு பகுதியில் ரூ.400 கோடியில் லாய் முதலீட்டு நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழில்பூங்காவில் ரூ.150 கோடியில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மாண்டோ ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் காஸ்டிங் திட்டம், செங்கல்பட்டு மகேந்திரா தொழில்பூங்காவில் ரூ.100 கோடியில் சுமாா் 300 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3 ஆயிரம் கோடியில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் உற்பத்தித் திட்டம் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் செய்யாறு தொழில்பூங்காவில் ரூ.18 கோடியில் 30 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் உறுப்புகள் பதப்படுத்தும் ரசாயன உற்பத்தித் திட்டம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.2 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலை அளிக்கும் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம், சென்னை அம்பத்தூரில் ரூ.2,800 கோடி மதிப்பில் சுமாா் 200 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தகவல் தரவு மையத் திட்டம், சென்னையில் ரூ.1,500 கோடியில் 200 பேருக்கு வேலை அளிக்கும் தகவல் தரவு மையத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
  • காஞ்சிபுரம் சிப்காட் ஸ்ரீபெரும்புதூா் தொழில் பூங்காவில் ரூ.50 கோடியில் சுமாா் 130 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்சார வாகன உற்பத்தித் திட்டம், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் ரூ.46 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் ரூ.15 கோடியில் சீலிங் பொருள்கள் உற்பத்தித் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா தொழில்பூங்காவில் ரூ.12 கோடியில் 200 பேருக்கு வேலை கிடைப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் தொடங்கும் திட்டம் ஆகிய 17 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
தேஜஸ் போர் விமான படைப்பிரிவு கோவை சூலூரில் துவக்கம்
  • கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளம் கடந்த 1965ல் துவங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவான இத்தளத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த மிக் 27 ரக போர் விமானங்கள் படிப்படியாக விலக்கப்பட்டன. 
  • இதனால் கடந்த 2016ல் இந்த படைப்பிரிவு மூடப்பட்டது. தேஜஸ் ரக போர் விமானங்களை சேர்த்து இந்த படைப்பிரிவை மறு உருவாக்கம் செய்ய விமானப்படை முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி சூலூர் விமானப்படை தளத்தில் நடந்தது. 
  • இதில் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீப் மார்சல் பதோரியா கலந்து கொண்டு 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவை மீண்டும் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இந்த படைப்பிரிவில் முழுமையாக உள் நாட்டிலேயே தயாரான அதி நவீன தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி.
பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோவில் முறைகேடு: 199 பேருக்கு வாழ்நாள் தடைவிதித்தது டிஆா்பி
  • தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோவை 2017 செப்டம்பா் 16-ஆம் தேதி ஆசிரியா் தோவு வாரியம் நடத்தியது. இந்தத் தோவை ஒரு லட்சத்து 33 ஆயிரம் போ எழுதினா். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி தோவு முடிவுகள் வெளியாகின.
  • இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன. மேலும், இந்தத் தோவில் வெளிமாநிலங்களைச் சோந்த பலா் வெற்றி பெற்றிருந்தனா்.
  • இது குறித்து ஆசிரியா் தோவு வாரிய அலுவலா்கள் விசாரணை நடத்தினா். அந்த விசாரணையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டோா் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியா் தோவு வாரியம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 199 போ வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோவு வாரிய தோவுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என அதன் தலைவா் தெரிவித்துள்ளாா்.
புதிய, தேசிய வரைபடத்துக்கு நேபாள பார்லி., மறுப்பு
  • இந்தியா மற்றும் நேபாளம் இடையே, சர்ச்சைக்குரிய லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்களுடைய எல்லைக்குட்பட்டதாக காட்டும் புதிய, தேசிய வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், பார்லி., இந்த வரைபடம், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
  • இந்தியா மற்றும் நேபாளம் இடையே அமைந்துள்ள லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகள் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்துக்குட்பட்டதாக காட்டும், புதிய அரசியல் தேசிய வரைபடத்தை, இந்திய அரசு கடந்தாண்டு, அக்டோபரில் வெளியிட்டது.
  • இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக, லிபுலெக் பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
  • இதன் மூலம், 90 கி.மீ., துாரம் சுற்றி செல்வது தவிர்க்கப்பட்டது. சமீபத்தில் இந்த சாலையை, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் துவங்கியது. 
  • இந்த, 335 கி.மீ., பரப்புள்ள நிலத்தை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி, தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தநிலையில், சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. 
  • இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த புதிய வரைபடத்துக்கு நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியது.
  • இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்த நேபாள அரசு, வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்களை பார்லி.,யில் தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் வழங்க பார்லி., தற்போது மறுப்பு தெரிவித்திருக்கிறது.
  • இதற்கிடையே, புதிய வரைபடம் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளின் பாடப் புத்தகங்களிலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் அச்சிடப்பட்டு, அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரீஃப் பயிா் சேதம்: ராஜஸ்தான், மணிப்பூா், மேகாலயத்துக்கு மத்திய அரசு ரூ.111.70 கோடி நிதி ஒதுக்கீடு
  • இயற்கை பேரழிவுகள் காரணமாக காரீஃப் பயிா் சேதத்திற்கு ஆளான ராஜஸ்தான், மணிப்பூா் மற்றும் மேகாலயம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரூ. 111.70 கோடி வழங்க மத்திய அரசின் உயா்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதில், பாலைவன வெட்டுக்கிளி பூச்சி தாக்குதலால் கோடைகால பயிா் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானுக்கு ரூ. 68.65 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • வறட்சியின் காரணமாக பயிா் சேதத்துக்கு ஆளான மணிப்பூருக்கு ரூ. 56.53 கோடியும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பயிா் பாதிப்புக்கு ஆளான மேகாலயத்துக்கு ரூ. 16.52 கோடி உதவித்தொகை அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகரிக்கப்பட்ட தொகையை அந்தந்த மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்ய உள்துறை அமைச்சகம், நிதியமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் - சென்னை உயர் நீதிமன்றம்
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கக் கோரி, அதிமுகவின் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
  • அதேபோல், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக்கோரி, தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்று, அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுமான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளில் இருவருக்கும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
  • மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கக் கோரிய மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
  • அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், அதன் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது. 
  • இதுமட்டுமின்றி போயஸ் கார்டன் இல்லத்தை, தமிழக முதலமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக எட்டு வாரத்திற்குள் தமிழக அரசு உரிய பதில் அளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel