Type Here to Get Search Results !

26th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

'ஜியோ பிளாட்பார்ம்' இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு
  • அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஜியோ பிளாட்பார்மில்' மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் முக்கிய செய்தியாகி வருகின்றன.
  • பெரும் தொகைபேஸ்புக் சில்வர் லேக், ஜெனரல் அட்லான்டிக், கே.கே.ஆர்., என, பல நிறுவனங்கள் தொடர்ந்து பெரும் தொகையை ஜியோவில் முதலீடு செய்துவருகின்றன.இதற்கு நடுவே, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 
  • மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஆனந்த் இந்த பதவியை ஏற்றுக்கொண்டுஇருக்கிறார்.
  • சமூகப் பணிஆனந்த் அம்பானியின் உடன்பிறப்புகளான ஆகாஷ், இஷா ஆகியோர், கடந்த, 2014ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு மற்றும் சில்லரை வணிகத்தில் இயக்குனர்களாக பொறுப்பேற்றனர்.
  • இதற்கிடையில், ஆனந்த், அவரது தாய் நிடா அம்பானியுடன் இணைந்து, ஐ.பி.எல்., விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.
போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள்: ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதி தொடக்கம்
  • தமிழகம் முழுவதும் தலைக்கவசம் அணியாமை உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதிப்பாா்கள். இந்த அபராதத் தொகையை, போக்குவரத்து போலீஸாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றங்களிலோ செலுத்தலாம். 
  • தற்போது, இந்த அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் 'விா்சுவல் கோா்ட்ஸ்' வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முதன்முதலாக தில்லியில் தொடங்கப்பட்டது.
  • அதனைத் தொடா்ந்து, சென்னையில் இந்த வசதியை, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறாா்.
  • இதன் தொடக்க விழா, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன்னிலையில் நடைபெறுகிறது.
  • இதன்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு போலீஸாரிடம் இ-சலான் பெறும் நபா்கள், இணையதளத்தில் 'விா்சுவல் கோா்ட்ஸ்' பக்கத்தில் தங்களது செல்லிடப்பேசி எண், வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
  • இந்த 'விா்சுவல் கோா்ட்ஸ்' முறையில் அபராதம் செலுத்தும் வசதியை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான உயா்நீதிமன்ற கணினி குழு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை செய்யவில்லை : உச்சநீதிமன்றம்
  • புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. 
  • இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தது. 
  • இன்னமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருவதாக கூறிய நீதிபதிகள், தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், பயண ஏற்பாடு என அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்க, மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.
  • மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் இந்த நிலையை மாற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டனர். 
  • அதுமட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel