- இந்தியா முழுவதும் லாக்டவுன் 4.0 இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் கொரோனாவை தடுக்கும் 5ஆவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
- இதனால் லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
- பொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக நோய் கட்டுப்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
- பொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக நோய் கட்டுப்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இது தொடர்பாக மூன்று நிலைகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அதன்படி மதவழிப்பாட்டு தளங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், ஷாப்பிங் மால்கள் வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அடுத்த கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும். இதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான முடிவுகள் ஜூலை மாதம் எடுக்கப்படும்.
- புதிய வழிகாட்டும் நெறிமுறைகளின்படி நாளை முதல் சில நடவடிக்கைகளுக்கு மட்டுமே தடை தொடர்ந்துள்ளது. அவை சர்வதேச விமான பயணம், மெட்ரோ ரயில்இயக்கம், சினிமா தியேட்டர்கள், ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிடோரியங்கள், சமூக, அரசியல், விளையாட்டு, மதம் ஆகியவை தொடர்பான கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
- மூன்றாவது கட்டமாக மேற்கண்ட நடவடிக்கைகளை மீண்டும் இயங்க அனுமதிப்பது குறித்து சூழலை ஆராய்ந்த பிறகே முடிவு செய்யப்படும். நோய் கட்டுப்பாடு பகுதிகளில் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படும். இந்த சேவைகள் அனைத்தும் மத்திய மாநில அரசுகள் ஆலோசனை நடத்திய பிறகே இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- இரவு ஊரடங்கிலும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தனிநபர் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் தளர்வு கொடுத்து அந்த நேரத்தை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை என தளர்வு எடுத்துள்ளது.
- 65 வயதை கடந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அவசியம் ஏற்பட்டாலொழிய வீட்டை விட்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது, வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் மக்கள் செல்வது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி சீட்டு பெற்று செல்பவர்கள், செல்லும் இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறையில், இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
- அதன்படி, மாநிலத்திற்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கும் தனிநபர்கள், சரக்கு வாகனங்கள் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
- மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து வாகனங்களை மாநில அரசுகள் தடுக்கக் கூடாது. நோய் பாதிப்பை பொறுத்து வெளி மாநில தனிநபர் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துக் கொள்ளலாம்.
தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
- தமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்த சத்தியமூர்த்தி சனிக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஈஸ்வரமூர்த்தியை உளவுப்பிரிவு ஐஜியாக நியமித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- கடந்த 2004 முதல் 2005ஆம் ஆண்டு வரையிலும், 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் உளவுப்பிரிவில் பல்வேறு துறைகளில் ஈஸ்வரமூர்த்தி பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
இந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனையாளர் விருது
- ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இந்திய ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு 2019ம் ஆண்டுக்கான பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
- இப்படையின் சர்வதேச தினத்தை முன்னிட்டு தெற்கு சூடானில் ராணுவ பார்வையாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டரெஸ் இதற்கான விருதினை சுமன் கவானியிடம் வழங்கினார்.
- அமைதி மற்றும் பாதுகாப்பு படைகளில் ஆண்களுக்கு நிகராக செயல்படும் பெண்களின் அர்ப்பணிப்பு உணர்வினை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் 2016ம் ஆண்டு இந்த விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் சுமன் கவானி என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரம் பொது இடங்களில் எச்சில் உமிழ்வது, புகைப்பது தண்டனைக்குரிய குற்றம்
- மகாராஷ்டிரத்தில் இனி வரும் நாள்களில் பொது இடங்களில் எச்சில் உமிழ்வது, புகைப்பிடித்தல், புகையிலை மெல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொது இடங்களில் தடை செய்யப்பட்ட செயல்களை முதல் முறையாக மீறுபவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த நபா் ஒரு நாள் முழுவதும் பொது சேவை செய்ய வேண்டும்.
- இரண்டாவது முறையாக மீறுபவருக்கு ரூ. 3,000 அபராதம் விதிப்பதுடன், 3 நாள்களுக்கு பொதுச்சேவையும் செய்ய வேண்டும். அதன் பிறகு ரூ.5000 அபராதமும், 5 நாள்கள் பொது சேவையும் செய்ய வேண்டும்.
- இது தவிர, பம்பாய் காவல் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதமும் விதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் வியட்நாமில் கண்டுபிடிப்பு இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்தது.
- வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.